Tuesday 12 October 2021

 தேசிய அஞ்சல் வாரம் 

 மாணவர்களின் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய அஞ்சலக அதிகாரி 

 








 தேவகோட்டை - தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு  கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும்  வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் வீடுகளுக்கே  சென்று  காரைக்குடி அஞ்சலக கண்காணிப்பாளர்  உசேன் அஹமது கடிதங்களை வழங்கினார்.

                                                   தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இப்பள்ளி மாணவர்களை அஞ்சலகத்திற்கு அழைத்து செல்வார்கள். ஆனால் கொரோனா காரணமாக பள்ளி விடுமுறையில் இருப்பதால் மாணவர்களின் வீடுகளுக்கேச்  சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , கடிதம் எழுதும் பழக்கத்தை  ஊக்குவிக்கும் விதமாக   காரைக்குடி அஞ்சலக கண்கணிப்பாளர் உசேன் அகமது மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று கடிதங்களைக் கொடுத்து,  கடிதம் எழுதுவது நன்மைகளையும், அதன்  பயன்களையும் எடுத்து விளக்கி கடிதம் எழுதுவதை மாணவர்கள் அதிகமாக பயன்படுத்தி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதனை தொடர்ந்து மாணவர்களை கடிதங்கள் எழுத கூறி, அதனை அஞ்சல் பெட்டியிலும் அவர்களின் உறவினர்களுக்கும்  ,நண்பர்களுக்கும்  எழுதச்சொல்லி அஞ்சல் பெட்டிகளில் கடிதங்களை அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம்,  ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,கருப்பையா, முத்துலட்சுமி, செல்வ மீனாள்  ஆகியோர்   செய்திருந்தனர். மாணவர்களும் ஆர்வத்துடன் கடிதங்களை பெற்று, எழுதி அஞ்சல் பெட்டியில் தபால்களை அனுப்பினார்கள்.கடிதம் மூலம் தங்களின் தகவல்களை எழுதி உறவினர்களுக்கு அனுப்பியது புதிய அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இனி வரும் காலங்களில் அதிக அளவில் தபால் எழுத உள்ளதாகவும் தெரிவித்தனர்.


 படவிளக்கம் :  தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு  கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும்  வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் வீடுகளுக்கே  சென்று  காரைக்குடி அஞ்சலக கண்காணிப்பாளர்  உசேன் அஹமது கடிதங்களை வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம்,  ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,கருப்பையா, முத்துலட்சுமி, செல்வ மீனாள்  ஆகியோர்   செய்திருந்தனர்.

 

 

வீடியோ 

 https://www.youtube.com/watch?v=T6-Wg7olSQY

No comments:

Post a Comment