Wednesday 13 October 2021

 கலிங்கப்பட்டியில் சிறு அருவி குளியல்






 
































                        நண்பர்களே காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் சென்று திருப்பத்தூர் பைபாஸ் சாலையில் சிவகங்கை செல்லும் வழியில் திருக்கோஷ்டியூர் தாண்டியவுடன்,  அரளிக்கோட்டை பேருந்து நிறுத்தத்தை தாண்டியவுடன், சிறிது தூரத்தில் ஏரியூர் என்று அம்புக்குறி உடன் வலது பக்கத்தில் ரோடு பிரிகிறது. அதனுள்ளே ஐந்து கிலோமீட்டர் சென்றவுடன் இரண்டு வேகத்தடைகள் அடுத்தடுத்து வரும். ஒரு வேகத்தடையை தாண்டியவுடன் வலது பக்கத்தில் திரும்பினால் கலிங்கப்பட்டி செல்லும் வழி வரும். சிறிது தூரம் ரோடு மிகவும் சுமாராக இருக்கும். அதை தாண்டிய உடன் இடது பக்கத்தில் இ .வலையப்பட்டி என ரோடு பிரியும்.அந்த ரோட்டின் வழியே சென்றோம். ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கலிங்கப்பட்டி என  பாதை பிரியும்.அங்கே   பெரியார் கண்மாய் நீர் பாசன பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணிர்  கலிங்கி ஓடுவது ஆகும். அந்த இடத்திற்கு நாம் சென்றவுடன் சிறிது தூரம் நடந்தோம். ஆனால் தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில் சிறு அருவி போல சிறு ஓடையாக மேலிருந்து கீழே விழுகிறது. அதனை நாம் வேண்டிய நேரம் வேண்டிய அளவு இருந்து குளியல் போடலாம். மேலும் மேலே சென்று தண்ணீர் உள்ளேயும் நீச்சலடித்து நாம் அனுபவிக்கலாம். மிக அருமையான இடம். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் நாம் அங்கே செலவழித்து விட்டு மீண்டும் அங்கிருந்து ஏரியூர் ஊரின் உள்ளே சென்றோம் . ஆனால் வலது பக்கத்தில் மேலே மலை இருக்கின்றது. இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகான மலைப் பகுதி. செங்குத்தாக சிமெண்ட் ரோடு போட்டு கோயிலுக்கான பாதை செல்கிறது. அங்கே மழை மருதீஸ்வரர் -  பர்வதவர்த்தினி அம்பாள் கோயில் மிக அழகாக இருக்கின்றது. மேலே சென்றோம். ஆனால் ஏரியூரின் முழு அழகையும் நாம் ரசிக்க முடியும்.  சுற்றிலும் தண்ணீர் கிடக்கின்றது. பார்ப்பதற்கு மிக ரம்மியமாக அழகாக இருக்கின்றது. அங்கிருந்து நாம் கீழே பார்த்தால் நாம் பெரிய கண்மாய் பகுதி காண இயலும். அங்கு சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை நாம் இருந்துவிட்டு , கொண்டு சென்றால் அங்கே இருந்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி வரலாம்.மிக அழகான இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. கோவிலின் மேல்பகுதியில் இருந்து பார்த்தால் எரியூரின் அழகையம் , சுற்றிலும் தண்ணீர் இருக்கும் காட்சியும் அருமையாக இருக்கும்.மீண்டும் கிளம்பி வரும் பொழுது இயற்கை அழகை ரசிக்கும் வகையில் நிதானமாக வந்தோம் .பிறகு  திருப்பத்தூர் வந்து கார்த்திக் ஓட்டலில் சென்று மதிய உணவை அறிந்து விட்டு நாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியும். ஏரியூர் பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவரிடம் பேசியபொழுது,  கடந்த வருடத்தில் தை மாதம் மிக அதிகமான அளவில் தண்ணீர் வந்தது. ஆனால் இப்பொழுது இந்த மாதத்தில் தண்ணீர் வருகிறது. எப்பொழுதெல்லாம் மழையின் அளவு அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இங்கு தண்ணீர் வருகிறது. எரியூருக்கு  என்று ஒரு வாட்ஸ் அப் குழு வைத்துள்ளனர் .முகநூலிலும் தண்ணீர் தொடர்பான தகவல்களை பகிர்கின்றனர். எனவே முகநூலை பார்த்தாலும் நீங்கள் தண்ணீரின் வரத்தை தெரிந்துகொள்ளலாம்.  மீண்டும் தை மாதத்தில் இது போன்று தண்ணீர் மழை அதிகமாக பெய்தால் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. நாங்கள்  ஏரியூரை  சேர்ந்தவர்கள். ஆனால் தஞ்சாவூரில் இருந்து குடும்பத்துடன் இங்கு வந்து குளித்து செல்கின்றோம் .இதற்காகவே நாங்கள் இன்று காலை கிளம்பி வந்தோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வந்திருந்த அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியுடன் குளித்து  ரசித்து சென்றார்கள். நீங்களும் வாய்ப்பிருக்கும் பொழுது ஒரு முறை சென்று வாருங்களேன்.இந்த தகவலை எனக்கு தெரிவித்த கோட்டையூர் அருணாச்சலம் அவர்களுக்கும், இந்த இடத்திற்கு செல்ல வழி கூறிய ஏரியூர்  ஆசிரியர் ரமேஷ் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

 தோழமையுடன் 

லெ . சொக்கலிங்கம்,

 காரைக்குடி.

No comments:

Post a Comment