Sunday 6 June 2021

கேரள தமிழ் பேரவை மூலம் தமிழர்கள்  தொடர்பாக பல்வேறு தகவல்களை அழகாக எடுத்துரைத்த பாலச்சந்திரன் ஐ.ஏ .எஸ்.

 இலக்கியவெளி சஞ்சிகையின் மூலம் கனடா,இங்கிலாந்து,இலங்கை தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடனான கலந்துரையாடல் :

  டி .என் .பி.டி.எப்.மற்றும் மூட்டா இயக்கங்களின் மூலம்  மருத்துவர் தோழர் ராமானுஜம் அவர்களுடனான கொரோனோவிற்கு பிந்தைய நிலையிலான மன நல கலந்துரையாடல் :



 

       நண்பர்களே ,சமீபத்தில் மூன்று அருமையான ஜூம் கலந்துரையாடல்களில் பங்கேற்றேன்.அது தொடர்பான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

முதல் நிகழ்வு திரு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.அவர்களுடனான கலந்துரையாடல் :

                               அனைத்து கேரள தமிழ் பேரவை முயற்சியின் மூலமாக திரு.பாலச்சந்தர் ஐ.ஏ .எஸ். அவர்களுடனான கலந்துரையாடல்  மிக அருமையானது . அனைத்து கேரள தமிழ் பேரவை மூலமாக இன்றைய தமிழர்களின் நிலையும், அன்றைய தமிழர்கள் நிலையும் ஒப்பிட்டு மிக அருமையாக திரு.பாலச்சந்திரன் அவர்கள் பல்வேறு உதாரணங்களுடன் தொகுத்து வழங்கினார்கள். திரு.பாலச்சந்திரன் அவர்களின் தகவல்கள் மிகவும் அருமையாக இருந்தது. தமிழர்களின் முந்தைய வரலாறுகள், இன்றைய நிலை, எப்படி  எல்லாம் நாம் இருக்க வேண்டும், பள்ளிக் கல்வியின் மூலமாக தமிழக அரசு எடுக்க வேண்டிய முயற்சிகள் தொடர்பாகவும் ,பல்வேறு புதிய தகவல்களையும் எடுத்து விளக்கினார். இந்த நிகழ்விற்கு எனக்கு தகவல் கொடுத்து உதவிய கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தின் தோழர் திரு. நக்கீரர் அவர்களுக்கும், கேரள தமிழ்ச் சங்கத்திற்கும், கேரள தமிழ்ச்சங்கத்தில் இதனை முன்னின்று நடத்திய முருகன் அவர்களுக்கும், முத்துராமன் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு எனது நன்றிகளையும் உரித்தாக்குகின்றேன். நன்றி. 

 இலக்கியவெளி சஞ்சிகையின் மூலம் கனடா,இங்கிலாந்து,இலங்கை தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடனான கலந்துரையாடல் :

                    கனடா நாட்டில் வசிக்கும் அகில் சாம்பசிவம் அவர்களின் இலக்கியவெளி  சஞ்சிகையின்  மூலமாக கடந்த வாரம் கி.ராவின் மரப்பசு நாவல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. கனடா நாட்டில் இருந்தும், இங்கிலாந்தில் இருந்தும், இலங்கையில் இருந்தும் இன்னும் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் பல்வேறு புதிய தகவல்களை எடுத்துக் கூறினார்கள், குறிப்பாக முதல்வர் கல்யாணராமன்  அவர்கள் ஜானகிராமன் அவர்களின் முழு வரலாறையும் மிக சுவையாக எடுத்துக் கூறினார். நான் இதுவரை ஜானகிராமன் அவர்களின் நாவல்களை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆழமாக சென்று படித்தது கிடையாது. அன்றைய நிகழ்வில் மிகத்தெளிவாக ஒவ்வொரு  கதையிலும் உள்ள கதாபாத்திரங்கள் என்னவெல்லாம் சொல்கிறது, எப்படி எல்லாம் சொல்கிறது என்கிற தகவல்களை மிக அழகாக எடுத்துக் கூறினார்கள் .ஆண்களின் ஆணாதிக்கம், பெண்களின் அடிமைத்தனம், பெண்கள் எவ்வாறெல்லாம் முற்போக்காக சிந்திக்க முடியும் என்பதை 1950 -  60 ஆம் ஆண்டுகளிலேயே மிகத் தெளிவாக ஜானகிராமன் அவர்கள் எடுத்துக் கூறி உள்ளதை தெரிவித்தார்கள். அதற்கான காரணம் என்ன? ஏன் அவர்கள் ஒரு பெண் தனது சுய உரிமையுடன் தான் சிந்திக்கும் ஆற்றலை எவ்வாறெல்லாம் பெற்றுள்ளார், அது எப்படியெல்லாம் செயல்படுத்தலாம் என்பது தொடர்பாக மிகத் தெளிவான உதாரணங்களுடன் தனது நாவல்களில் படம்பிடித்து காட்டி உள்ளார்கள். அய்யா ஜானகிராமன் அவர்களுடைய சிந்தனை ஏன் அவ்வாறு சென்றது, அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி எல்லாம் மிகத் தெளிவாக பல்வேறு தகவல்களை கூறினார்கள் முதல்வர் கல்யாணராமன் . திரு. ஜானகிராமன் அவர்கள் நான்கு சகோதரியுடன்பிறந்ததையும் , முதல் சகோதரி, இரண்டாவது சகோதரி திருமணங்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை கூறி அதனுடைய நிழல் உருவங்கள் தான் பல நாவல்களில் வந்துள்ளது என்பதையும் தெரிவித்தார், அலங்காரத்த  அம்மாள் தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பசுமரத்து நாவலில் வரும் அம்மணி பற்றியும் பல்வேறு தகவல்களை தெளிவாக கூறினார். இந்த நிகழ்வுகளின் மூலமாக  இலக்கிய வெளியில் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்கு மிக எளிதாக இருந்தது. அன்றைய நிகழ்வில் திரு.பவாசெல்லத்துரை பங்கேற்க இருந்த நிலையில் அவர்கள் ஒரு இறப்பு நிகழ்வின் காரணமாக பங்கேற்க இயலாத நிலையில் , திரு.அகிலன் அவர்களின் துணைவியார் அவர்கள் தெளிவாக கருத்துக்களை கூறி முன்னெடுக்க,அதனை உமா அம்மையார் அவர்கள் தொடர, திரு.ஹுசைன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைக்க ,திரு.கல்யாணராமன் அவர்கள் மிக நேர்த்தியாக வழிநடத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள்.மிகப்பெரும் தமிழ் அறிஞர்களுடன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த அகிலன் சாம்பசிவம் அவர்களுக்கு  நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

 டி .என் .பி.டி.எப்.மற்றும் மூட்டா இயக்கங்களின் மூலம்  மருத்துவர் தோழர் ராமானுஜம் அவர்களுடனான கொரோனோவிற்கு பிந்தைய நிலையிலான மன நல கலந்துரையாடல் :

              டிஎன்பிடிஎப் மற்றும் மூட்டா இணைந்து நடத்திய கொரோனா காலத்தில் எப்படியெல்லாம் மன உளைச்சல் ஏற்படுகிறது என்பதையும் ,அதனை எவ்வாறெல்லாம் சரி செய்யலாம்,நம்மை வழிநடத்தி கொள்ளலாம் என்பன போன்ற தகவல்களை தெளிவாக எடுத்து கூறி, மிக அழகாக தகவல்களை  பகிர்ந்துகொண்ட மருத்துவர் ராமானுஜம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். மருத்துவர் ராமானுஜம் அவர்கள் புதிய தலைமுறையில் எழுதிவரும் பல்வேறு தகவல்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். அன்னார்  அவர்கள் முதலிலேயே மிகத்தெளிவாக கொரோனோவால்  ஏற்படக்கூடிய மன உளைச்சலுக்கும், மன மாற்றங்கள் என்னவெல்லாம் தீர்வு என்பதை தெளிவாக எடுத்து சொன்னார்கள்.மற்றவர்கள்  கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில்களை தெரிவித்து மிக அழகாக விளக்கங்களைத் தந்து உதவினார்கள். இந்த நிகழ்வு கொரோனாவால்  பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் மனநலம் சார்ந்த தகவல்களை மிகத் தெளிவாக பல்வேறு விளக்கங்களை எடுத்து கூறினார்கள். சரியான நேரத்தில் இதனை ஏற்பாடு செய்த டி என் பி டி எப் இயக்கத்துக்கும்,மூட்டா இயக்கத்துக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

நன்றி கலந்த அன்புடன் ,

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.

8056240653 

 


 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment