Saturday 26 June 2021

 கட்டணமில்லா கல்வி சேர்க்கை 


 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில்  கட்டணமில்லா சேர்க்கை நடைபெற்று வருகிறது.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் தொடர்ந்து வழங்குதல் :

             பள்ளி மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது..!_கட்டணமில்லா கல்வி..!_தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா  பாடப்புத்தகம், நோட்டுகள், புத்தகப்பை, மதிய உணவு வழங்கப்படும்.பள்ளி நடைபெறாத கொரோனா காலத்தில் மாணவர்களுக்கான இணைய வழி போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு சான்றிதழ் ,பரிசுகள் வழங்கப்படுவதுடன் மாணவர்களின் மன அளவிலும்,உடல் அளவிலும் பாதுகாப்பாக இருக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா காலத்தில் தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா உலர் பொருள்களான முட்டை ,அரசி,பருப்பு முதலியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி  வழியாக பள்ளி பாடங்களை மாணவர்கள் தொடர்ந்து பயின்று வருகின்றனர்.     

 

களப்பயணம் வாயிலாக வாழ்க்கை கல்வி :                   

                            
                       மாணவர்கள் இளம் வயதில் ஒன்றாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் படித்து, வாழ்க்கைக்கான அனுபவங்களை பெற காவல் நிலையம்,வங்கி ,பாஸ்போர்ட் அலுவலகம்,அஞ்சல் நிலையம்,நீதிமன்றம்,கலை மற்றும்  அறிவியில் கல்லூரி,வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,தோட்டக்கலை பண்ணை ,அழகப்பா பல்கலைக்கழகம்   என பல இடங்களுக்கு    களப்பயணம் அழைத்து செல்வதுடன், பல துறை அறிஞர்களின் பயிற்சிகளையும் எவ்வித கட்டணமும் இல்லமால் வழங்கி வருகின்றனர். 

 ஆளுமைகளை சந்தித்து கலந்துரையாடல் :

                  பல்வேறு ஆளுமைகளான  தற்போதைய தமிழக தலைமை செயலாளர் வெ .இறையன்பு ஐ.ஏ .எஸ்., இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,நோபல் பரிசு குழு உறுப்பினர் பலாஸ் ,  நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்.,அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜேந்திரன்,சுப்பையா, சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெயகாந்தன் ஐ.ஏ .எஸ்., , தென்காசி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐ.பி.எஸ் .,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் ஐ.ஏ .எஸ்., ,  உட்பட பல்வேறு ஐ.பி.எஸ்,ஐ.ஏ.எஸ்.,நீதிபதிகள்,ஐ.ஆர்.எஸ்.,என பல துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து,கலந்துரையாடி உள்ளது   குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பயிற்சிகள் :

                                   மேலும் பள்ளியில்  உடற்பயிற்சி, நீதிபோதனை, செயல்வழிக்கற்றல், காணொளி வழி கற்றல், பல்துறைசார் அறிவு, போட்டித்தேர்வுகள் இன்னும் பல சிறப்புப் பயிற்சிகள்..!_ கட்டணமில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது._ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணாக்கர் சேர்க்கை நடைபெறுகிறது..!_

 

மாணவர்களின் ஆற்றலை மிளிர செய்தல் :


                      பாடப்புத்தக கல்வி மட்டுமல்லாது பல்வேறு ஆளுமைத்திறன் கல்வியும், பல்துறை அறிஞர்களின் சந்திப்புகள் மூலம் மாணாக்கர் அறிவும் ஆற்றலும் மிளிரச் செய்கிறோம்.!_உங்களது பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்த்து பயன் பெறுங்கள்.!

கட்டணமில்லா கல்வி :

                                   எவ்வித கட்டணமில்லலால் மாணாக்கர்களின் பள்ளி பாடங்களுடன் உலக அறிவையும் உணரத்தருவதே எம் பள்ளியின் நோக்கம்.!.எனவே உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் கூறி எங்கள் பள்ளியில் மாணவர்களை சேருங்கள் .

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment