Monday 14 June 2021

 தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் 



 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.

                                          தமிழகம் முழுவதும் கொரனோ பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  புதிய கல்வியாண்டு தொடங்கி உள்ளதால் தமிழக பள்ளி கல்வித்துறை பள்ளிகளை திறந்து புதிய மாணவர் சேர்க்கைக்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.. அதன் தொடர்ச்சியாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆசிரியர்கள் முத்துமீனாள், செல்வமீனாள், முத்துலட்சுமி , ஸ்ரீதர், கருப்பையா ஆகியோர் புதிய மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். புதிய கல்வி ஆண்டு  துவங்கி பள்ளி திறக்கப்பட்டது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி சிலேட்டு,பென்சில் வழங்கப்பட்டது.


 படவிளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய மாணவர் சேர்க்கை துவங்கியது. பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,கருப்பையா, செல்வமீனாள் ,  முத்துமீனாள், முத்துலட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

 

 

 

No comments:

Post a Comment