Saturday 12 June 2021

 அரிசி மாவு கோலப்போட்டி 

 சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த புது முயற்சி  

 





தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரிசிமாவு கோலப்போட்டி நடைபெற்றது.

கொரோனா காலமாக இருப்பதால் பெற்றோர்களுக்கும்,மாணவர்களுக்கும்  இணையம் வழியாக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரிசிமாவு கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வ மீனாள்  ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி மாணவர்களையும் ,பெற்றோர்களையும் போட்டிகளில் பங்கேற்க வைத்தனர்.  இப்போட்டிகளில்   அரிசி மாவினை மட்டும் பயன்படுத்துமாறும், வண்ண பூக்கள், இலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது .பெற்றோர்கள் பலரும் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.    வீட்டு முற்றத்தில் இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மையப்படுத்தி சுற்று சூழல் காப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரிசி மாவில் கோலமிடுமாறும் அதனை வாட்ஸ்ப்பில் படம் எடுத்து அனுப்பு மாறும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் போட்டி நடைபெற்றது. ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் இப்போட்டிகளில் பங்கு பெற்றனர். வரைந்து அசத்தினார்கள். சிறந்த கோலங்களுக்கு  விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

 படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்  மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரிசி மாவு கோலமிடும் போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வ மீனாள்  ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி மாணவர்களையும் ,பெற்றோர்களையும் போட்டிகளில் பங்கேற்க வைத்தனர்.

 

 

 

 

No comments:

Post a Comment