Monday 28 June 2021

 மகிழ்ச்சி - தொடக்க நிலை பள்ளி மாணவர்கள் பாட புத்தகங்களை பெற்றதால் மகிழ்ச்சி 

தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குதல்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவர்களின் பெற்றோர்களிடம் புத்தகங்கள்  வழங்குதல்

 





 


தேவகோட்டை  - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம்  வழங்கப்பட்டது.

                         ஒன்று  முதல் எட்டாம் வகுப்புகளில் பயிலும் அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பாடப் புத்தகங்கள் வினியோகம் துவங்கியது.தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் தயாராகியுள்ளன. இந்த புத்தகங்கள், மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அரசின் முறையான நெறிகாட்டுதலின்படி பாடப் புத்தகங்கள்  வழங்கப்பட்டது . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பாட புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி   ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்து மீனாள் ஆகியோர் வழங்கினார்கள்.பாடப்புத்தகங்களை முறையான சமூக இடைவெளியை பின்பற்றி ஆசை,ஆசையாக பெற்றோர்கள் பெற்றுக்கொண்டு  வீட்டுக்கு சென்றனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்களை பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு   தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும்  பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் வழங்கினார்கள்.

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு   வழங்கப்பட்டது . - வீடியோ 
https://www.youtube.com/watch?v=2HUSwqNoruw


No comments:

Post a Comment