Friday 4 June 2021

 உலக சுற்று சூழல் தினம் - மாணவர்களுக்கு இணைய வழி போட்டிகள் 

உயிர் வளி தரும் மரத்துக்கு மரண வலி தராதே - அது கொடுஞ்செயல் 

இலவசம் ,இலவசம் என்றால் வாயை பிளக்கிறாய் , மனிதா  நான் தரும் இலவசத்தை ஏனோ வாங்க மறுக்கிறாய் - இயற்கை

 வாசகங்கள்,ஓவியங்கள் வாயிலாக உலக சுற்று சூழல் தினத்தன்று   விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் 
 






























































தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு   உலக சுற்று சூழல்   தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் வாசகங்கள் எழுதும் போட்டிகள் இணையம் வழியாக நடைபெற்றது.
 
           கொரோனா காலமாக இருப்பதால் மாணவர்களுக்கு இணையம் வழியாக  உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வ மீனாள்  ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். மாணவர்கள் உயிர் வளி தரும் மரத்துக்கு மரண வலி தராதே - அது கொடுஞ்செயல் மற்றும்  இலவசம் ,இலவசம் என்றால் வாயை பிளக்கிறாய் , மனிதா  நான் தரும் இலவசத்தை ஏனோ வாங்க மறுக்கிறாய் - இயற்கை என்று இயற்கையை காக்க  இணையம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து   அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
 
 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துமீனாள், செல்வமீனாள் ,  முத்துலட்சுமி ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி அதிக அளவில் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்தனர்.
 

4 comments:

  1. நமக்கே தெரியாமல் உள்ள நம் திறமைகளை சரியாக அடையாளம் காட்டி உலகின் முன் நிறுத்துபவரே குரு. அந்த வகையில்,அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவர்களுக்கும் அவர்களது திறமையை கண்டறிந்து அவர்களை உருவாக்கிய ஆசிரியர் பெருமக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் செந்தில்குமார் அரசு சார்புச் செயலாளர் தலைமைச் செயலகம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா.தங்களின் ஊக்கபடுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அய்யா.அன்புடன் லெ.சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்.

      Delete
  2. நமக்கே தெரியாமல் உள்ள நம் திறமைகளை சரியாக அடையாளம் காட்டி உலகின் முன் நிறுத்துபவரே குரு. அந்த வகையில்,அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவர்களுக்கும் அவர்களது திறமையை கண்டறிந்து அவர்களை உருவாக்கிய ஆசிரியர் பெருமக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் செந்தில்குமார் அரசு சார்புச் செயலாளர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை,தலைமைச் செயலகம்

    ReplyDelete
  3. மிக்க நன்றிங்க அய்யா.தங்களின் ஊக்கபடுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அய்யா.அன்புடன் லெ.சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்.

    ReplyDelete