Sunday 7 June 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

 SBI வங்கியில் பத்து ரூபாயில் கணக்கு துவக்கி அசர வைத்த  முதன்மை மேலாளர் வேல்முருகன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

                                இன்று சனிக்கிழமை 17/ 3 /2018 அன்று எமது வங்கியில் சிறுவர் சிறுமியருக்கான வங்கிக்  கணக்கு  துவங்கி அக்கணக்கினுடைய  பாஸ் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. அவ்வமயம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இனிமையாக இருந்தது. கணக்குத் துவங்க காரணமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆகிய அனைவருக்கும் வங்கியின் சார்பாக வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 வாழ்த்துக்களுடன் 

V.VELUMURUGAN,
CHIEF MANAGER,
SBI,
DEVAKOTTAI.

                          பாரத ஸ்டேட் பாங்கு, தேவகோட்டை கிளையின் சார்பாக சேமிப்பு விழிப்புணர்வு முகாம் மாணவ மாணவிகளுக்காக, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. வங்கிக் கிளையின் சார்பாக வேல்முருகன் முதன்மை மேலாளரும் , சிவக்குமார் துணை கிளை மேலாளர் அவர்களும் , வந்திருந்து சேமிப்புத் திட்டங்களை விளக்கி கூறினார்கள். மாணவ-மாணவிகளும்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு வினாக்களை எழுப்பி தெளிவு பெற்றனர் . நிகழ்ச்சியினை பள்ளி தலைமையாசிரியரும்  மற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளையும்  வங்கியின்  சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

 நன்றி 
வணக்கம் 

வி வேல்முருகன்,
 முதன்மை மேலாளர்,
 எஸ்பிஐ ,
தேவகோட்டை.






                                     எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் வேல்முருகன் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி தொடர்பாக பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.


பழகுவதற்கு இனிமையான வங்கி மேலாளர்:         

                         எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் வேல்முருகன் அவர்களுடனான அறிமுகம் 2017 ஆம் ஆண்டு எனக்கு கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே மிகவும் அன்பாக பேசினார். பழகுவதற்கு இனிமையானவர் .வங்கியில் ஏதாவது வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டால் உடனடியாக சென்று சந்தித்து கூறினால் அனைத்து பொது மக்களுக்கும் நல்ல முறையில் உதவி செய்யக் கூடியவர். அவர் நம்மிடம் உள்ள குறைகளை விசாரித்து அதை இனிமையான சிரிப்புடன் உடனடியாக செயல்படுத்தி நல்ல முறையில் நமக்கு வங்கி செயல்பாடுகளை செய்து தருபவர். 

களப்பயணத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளர் :

                                2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கள் பள்ளி மாணவர்களுடன் தேவகோட்டை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி களப்பயணம் மேற்கொண்டோம். நல்ல முறையில் எங்களை வங்கி உள்ளே அழைத்துச்சென்று அனைத்து விதமான தகவல்களையும், குறிப்பாக  சுவைப் மெஷின் பயன்படுத்துவது எப்படி, வங்கியில் படிவம் இல்லாமல் சுவைப்  மெசின் மூலம் பணம் எடுப்பது எப்படி, கிரீன் கார்டு மூலம் பணம் செலுத்துவது எப்படி,பணம் செலுத்தும் கவுண்டரில்  யாருடைய உதவியுமின்றி ஏடிஎம் அறையிலேயே நம் கணக்கில் பணம் செலுத்துவது எப்படி, வங்கியில் கல்விக்கடன், விவசாய கடன், தனிநபர் கடன் என அனைத்துவிதமான கடன்கள் தொடர்பாகவும், வங்கியின் செயல்பாடுகள் தொடர்பாகவும் மிகவும் விளக்கமாக அன்புடன் எடுத்துக்கூறி மாணவர்களுக்கு புரியும் வண்ணம் பல்வேறு விஷயங்களை கூறினார்.

 மொபைல் போனை மணிபர்ஸாக மாற்றுவதற்கான பயிற்சி


                          2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணமில்லா பரிவர்த்தனை செய்வதற்கான பயிற்சிக்காக  திருச்சி மண்டலத்தில் இருந்து வந்திருந்த
திருச்சி மண்டல ஸ்டேட் வங்கி அதிகாரி ஏபில் சாலமன்  மூலமாக வங்கிக்கு செல்லாமல் பணம் மாற்றும் முறை தொடர்பாகவும், பணமில்லா பரிவர்த்தனை செய்வதற்கான பயிற்சியை, டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை விழிப்புணர்வையும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், மொபைல் போனை  மணி பரிசாக மாற்றுவதற்கான பயிற்சிகளையும் பள்ளிக்கு வந்து வழங்கினார். இது எங்கள் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். இளம் வயது மாணவர்கள் பல்வேறு விதமான பணப் பரிவர்த்தனை தொடர்பான பயிற்சியை சில ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்து மிகத் தெளிவாக எவ்வாறு டவுன்லோட் செய்வது என்றும், அதனை டவுன்லோடு செய்து காண்பிக்கப்பட்டது. எந்த நேரமும்  மொபைல் போன் வழியாக பணத்தை மாற்றலாம் என்பதையும் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். போன் வழியாக ரூபாய் 10 வங்கி அதிகாரி கணக்கில் இருந்து ஆசிரியருடைய கணக்கு அனுப்பி, மீண்டும் இந்த தொகையினை  ஆசிரியருடைய கணக்கிலிருந்து வங்கி அதிகாரிக்கு மாற்றக்கூடிய தகவல்களையும் எடுத்துக் கூறினார்கள். இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும்.


 SBI வங்கியில் பத்து ரூபாயில் கணக்கு துவக்கி அசர வைத்த வங்கி மேலாளர் :


                       2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாணவர்களுக்கான சேமிப்பு விழிப்புணர்வு முகாமில் பத்து வயதுக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு வெறும் பத்து ரூபாயில் கணக்கு துவக்கி ஆச்சரியப்படுத்தினார்கள் . வங்கியில் அதுவும் குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பத்து ரூபாயில் கணக்கு துவங்குவது சாதாரண விஷயமா? அதை செயல்படுத்தி காண்பித்தார்கள்.எங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் வங்கிக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்து வங்கி கணக்கு துவக்க இயலாமல் சில தடவைகள் வங்கிக்கு அலைந்து,திரிந்து வங்கி கணக்கை துவக்கி இருந்தார்கள்.ஆனால் எஸ் .பி.ஐ.வங்கியின் முதன்மை மேலாளர் வேல்முருகன் அவர்கள் , மாணவர்களுக்கும்,பெற்றோகளுக்கும் எந்த சிரமும் இல்லாமல் சில நிமிடங்களில் மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கி கொடுத்து,அதுவும் மிக குறைந்த இருப்பு தொகையான ரூபாய் 10 மட்டுமே இருக்கும் வகையில் வங்கி கணக்கு துவக்கி கொடுத்தது இன்றும் எங்களுக்கும், மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மிக பெரிய ஆச்சரியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

பெற்றோர்களுக்கும் உதவிய வங்கி கணக்கு :


                  எங்கள் பள்ளியில் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்க்கும் நிலையில்,அவர்களால் விடுமுறை எடுத்துக்கொண்டு வங்கிக்கு செல்ல இயலாத சூழ்நிலையில் வங்கி முதன்மை மேலாளர் வேல்முருகன் அவர்களின் செயல் பெற்றோர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்தது.இன்றும் அவ்வாறு துவக்கப்பட்ட அந்த கணக்குகள் வங்கி மேலாளர் வங்கி மேலாளர் அவர்கள் வங்கி கணக்குகள் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக உள்ளது .வங்கி கணக்கினை பள்ளிக்கு வந்து துவக்கி கொடுத்து , பள்ளிக்கே வங்கிக் கணக்கிற்கான புத்தகங்களையும் மாணவர்களுக்கு கொண்டு வந்து கொடுத்து உதவினார்கள் .


தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வங்கி களப்பயணத்தில் உதவிய முதன்மை மேலாளர் :


            தொடர்ந்து 3 ஆண்டுகள்  வங்கிக்கு மாணவர்களை களப் பயணமாக அழைத்து  செல்லும் பொழுது அன்புடன் எங்களை உபசரித்து ஆர்வமுடன் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தகவலும் எடுத்துக்கூறி தேனீரும் வழங்கி மிக அன்பாக ,அழகாக மாணவர்களுக்கு பல்வேறு விளக்கங்களை எடுத்து கூறுவார் .மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க கூடியவர்.களப்பயணத்தின்போது ஏடிஎம் அறைக்கே  மாணவர்களை அழைத்துச் சென்று ஏடிஎம் எவ்வாறு நாம் பயன்படுத்துவது என்கிற தகவலையும் மிக தெளிவாக செய்து காண்பித்தார்கள்.  அவர்களுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் மாணவர்களுக்கு அருமையாக சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடனான அனுபவம் எப்பொழுதுமே மறக்க முடியாததாகும். 2019 ஜூன் மாதம் சென்ற போது கூட, அவர்கள் பணி மாறுதலில் இருந்தபோதும் கூட எங்களுக்கு மிக அழகாக அன்பாக பல்வேறு தகவல் எடுத்துக் கூறினார்கள். இன்று வரை  அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றேன். வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றாலும் நம்முடன் அவருடைய அன்பான பரிமாறுதல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது .

SBI வங்கியில் இதுபோன்று மேலாளரை சந்திப்பது இதுவே முதன்முறை :

                 வங்கி அதிகாரிகளில்  இதுபோன்று முதன்மை மேலாளரை நான் சந்தித்தது இதுவே முதல்முறை. மாணவர்களுக்கு களப் பயணத்தின் மூலமாகவும், பள்ளிக்கு வந்து பல்வேறு தகவல்களை விரிவாக விளக்கமாக கூறினார்கள். இளம் வயது மாணவர்களை வங்கிக்கு  அழைத்துச் செல்வது நல்ல செயல்பாடு ஆகும். அதுவும் குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அழைத்து செல்வது என்பது மிகப்பெரிய விஷயம். 


SBI வங்கிக்கு களப்பயணம் சென்றதை பாராட்டிய வாடிக்கையாளர் :

               நாங்கள் வங்கிக்கு  மாணவர்களை அழைத்து செல்லும் போது, 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் எங்களிடம் வந்து, நான் கல்லூரி படிப்பு முடித்த பிறகு கூட ஐஓபி வங்கிக்கு வேலை நிமித்தம் சென்ற போது பயந்து கொண்டே சென்றேன். அப்பொழுதெல்லாம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி பார்க்கும் பொழுது மிகப்பெரிய வங்கி என்று எனக்கு தோன்றும். ஆனால் நான் கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு சென்ற பிறகு தான் வங்கிக்கு வந்தேன். ஆனால் இளம் வயது மாணவர்கள், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை  நீங்கள் வங்கிக்கு அழைத்து வந்தது மிகப்பெரிய விஷயம். அவர்கள் பல்வேறு தகவல்களையும் படிவங்கள் பூர்த்தி செய்வதை அறிந்து கொண்டதை பார்க்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார். எங்களுக்கும்மிக்க  மகிழ்ச்சி தான். அதற்கு காரணம் வங்கியின் முதன்மை  மேலாளர் திரு வேல்முருகன் அவர்கள் தான். 

 நன்றிகள் பல :

             எப்பொழுது சென்று  மாணவர்களை அழைத்து வருகிறோம் என்று கேட்டாலும் உடனடியாக அனுமதி கொடுத்து மாணவர்களை அழைத்து வந்து சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வங்கி செயல்பாடுகளை மிக விளக்கமாக விரிவாக எடுத்துக்கூறி உதவிய அன்னார் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நிகழ்வுகளில் எங்களுக்கு உதவி செய்த துணை மேலாளர் சிவக்குமார் ,திருச்சி வங்கி அதிகாரி ஏபில்  சாலமன்,கார்த்திக்,வங்கி அதிகாரி கிருஷ்ணவேணி ஆகியோருக்கும்,வங்கி அலுவலர்கள் முருகன்,கணேசன் ஆகியோருக்கும் ,ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 

நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 

  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,  
சிவகங்கை மாவட்டம்.  
8056240653 


எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் வேல்முருகன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்குகளப்பயணத்தில் எடுத்துரைத்த தகவலை பள்ளி வலைத்தளத்தில் காணலாம் :


 https://kalviyeselvam.blogspot.com/2018/01/blog-post_17.html#more

 https://kalviyeselvam.blogspot.com/2019/06/blog-post_14.html#more

 YOUTUBE VIDEOவாகவும் காணலாம் :

 https://www.youtube.com/watch?v=oHOxnv8CusY

 https://www.youtube.com/watch?v=HIU-FlzEEZ0

  SBI வங்கியில் பத்து ரூபாயில் கணக்கு துவக்கி அசர வைத்த வங்கி மேலாளர்தொடர்பான தகவலை வலைதளத்தில் காணலாம் :


https://kalviyeselvam.blogspot.com/2017/11/blog-post_80.html#more

 https://kalviyeselvam.blogspot.com/2018/03/10.html#more

YOUTUBE VIDEOவாகவும் காணலாம் :

 https://www.youtube.com/watch?v=z0eEVdHhgYM&t=2s

 https://www.youtube.com/watch?v=1Y-XGvkZ8NE


 மொபைல் போனை மணிபர்ஸாக மாற்றுவதற்கான பயிற்சி அளித்ததை பள்ளி வலைத்தளத்தில் காணலாம் :

https://kalviyeselvam.blogspot.com/2017/03/blog-post_19.html#more


No comments:

Post a Comment