Wednesday 10 June 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

திரைப்பட துறை உதவி இயக்குனர் கரு. அண்ணாமலை மற்றும் பெங்களூருவைச் சார்ந்த கற்பனை புகைப்படக்கலைஞர் ஜெயக்குமார் வெங்கடேசன் ஆகியோருடனான பள்ளி பகிர்வுகள் 

                                   இன்று புகைப்படம் எடுப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. எல்லா மாணவர்களும் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர் . தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் மிகுந்த அன்போடு மாணவர்களுக்கு பல கலைகளை கற்றுக் கொடுப்பது மிகவும் பாராட்டுதற்குரியது.

கரு. அண்ணாமலை 
ஜெயக்குமார் வெங்கடேசன் 
சுப்பிரமணியன்





                                                 திரைப்பட துறை உதவி இயக்குனர் கரு. அண்ணாமலை மற்றும் பெங்களூருவைச் சார்ந்த கற்பனை புகைப்படக்கலைஞர் ஜெயக்குமார் வெங்கடேசன் ஆகியோர் பள்ளிக்கு வந்து மாணவர்களை சந்தித்த பிறகு பள்ளியை பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.


புதிய முயற்சி - புதிய அனுபவம்
 
              மாணவர்களுக்கு புகைப்படம் எடுப்பது எவ்வாறு என்பது தொடர்பான பயிற்சி வழங்குகிறோம் என்று திரைப்படத் துறை உதவி இயக்குனர் திரு. அண்ணாமலை அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அப்பொழுது பெங்களூருவிலிருந்து கற்பனை புகைப்படக்கலைஞர் ஜெயக்குமார் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோருடன் தான் வர உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார்.இரண்டு,மூன்று முறைகள் திட்டமிட்டு பல்வேறு சூழ்நிலையின் காரணமாக ஒவ்வொருக்கும் நேரம்  ஒரே மாதிரியாக வரும் நேரத்தில் வருவதாக தெரிவித்து இருந்தார்கள். அந்த நாளும் வந்தது. மூன்று பேரும் பெங்களூருவில் இருந்து கிளம்பி காரில் எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தார்கள். காரைக்குடியில் தங்கிவிட்டு எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தார்கள்.

பல லட்சம் மதிப்புள்ள புகைப்பட கருவி மூலம் புகைப்பட பயிற்சி :


               பள்ளியில் ஒருநாள் முழுவதும் பல லட்சம் மதிப்புள்ள புகைப்படக் கருவியை வைத்து புகைப்படம் எடுப்பது எவ்வாறு என்பதை மிக அழகாக இளம்வயது மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.கேமரா என்பதே எனக்கெல்லாம் பள்ளிப் பருவம் முடிந்த பிறகு கல்லூரிக்கு  வந்த பிறகுதான் கேமரா பற்றிய தெரியும். ஆனால் இளம் வயது மாணவர்களுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமராவை கையில் கொடுத்து , படம் எப்படி எடுப்பது,  படம் எடுக்கும்போது என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும்,  எவ்வளவு நுணுக்கமாக படங்களை எடுத்தால் மக்கள் மனதில் பதியும், படம் எடுப்பதற்கும் நமது மனதிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்கிற விவரங்களை எல்லாம் மிக அழகாக மூவரும் எடுத்துக் கூறினார்கள். நிகழ்வில் பல்வேறு ஆசிரியர்களும்,ஆசிரியைகளும் ,  அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்தார்கள்.

விகடனின் அறம் செய விரும்பு வழியாக ஏற்பட்ட தொடர்பு :

                                                    கரு. அண்ணாமலை அவர்களுடனான எனது தொடர்பு விகடன் மூலமாக ஏற்பட்டது. விகடன் மூலமாக அறம் செய விரும்பு இயக்கத்தில் இணைந்த போது கரு.  அண்ணாமலை அவர்களே என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக நானும் அவரும் பல நாட்கள் தொலைபேசி மூலம் உரையாடி உள்ளோம். பிறகு சென்னை சென்ற பொழுது நேரில் சந்தித்துப் பேசினோம். இடையில் பள்ளியை பார்ப்பதற்காக ஒரு முறை தேவகோட்டை வந்திருந்தார்கள். அப்பொழுது தேவகோட்டை அருகே உள்ள சமூக சேவகர் ஒருவரையும் சென்று சந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக எங்களுக்குள்ளான நட்பு தொடர்ந்தது. அதன் விளைவாகவே கரு. அண்ணாமலை அவர்கள் பெங்களூருவைச் சார்ந்த கற்பனை புகைப்படக்கலைஞர் ஜெயக்குமார் வெங்கடேசன் அவர்களையும், சுப்பிரமணியன் அவர்களையும் அழைத்துக்கொண்டு எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு புகைப்படம் எடுப்பது தொடர்பாக மிக அழகாக எடுத்து கூறினார்கள்.


ஆச்சரியத்தில் ஆழ்ந்த மாணவர்கள் :


               பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த கேமராவை கையில் பிடிக்கும் பொழுது மாணவர்களுக்கு அவ்வளவு ஆச்சரியம்,அவ்வளவு ஆனந்தம் . எங்கள் பள்ளி ஆசிரியர்களும் , ஆசிரியைகளும் நன்றாக அதனைக் கற்றுக் கொண்டார்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை ஏற்படுத்திய திரைப்பட துறை உதவி இயக்குனர் திரு அண்ணாமலை அவர்களுக்கும், பெங்களூருவைச் சார்ந்த  புகைப்படக்கலைஞர் ஜெயக்குமார் வெங்கடேசன் அவர்களுக்கும், சுப்பிரமணியன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். புகைப்படம் எடுப்பது எப்படி என்றும், கேமரா தொடர்பாக விளக்கங்களையும், புகைப்படத்திற்கு வெளிச்சம் அவசியம் என்பதையும், மாற்றி யோசித்தால் தான் சிறப்பாக வரும் என்கிற தகவலையும் மிக அழகாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

சிரித்த முகத்துடன் பயிற்சி அளித்த புகைப்பட கலைஞர்கள் :

                       பெங்களூருவைச் சார்ந்த ஜெயக்குமார் வெங்கடேசன் அவர்களுக்கு திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் சொந்த ஊர் என்று என்னிடம் தெரிவித்தார்கள் .முன்பு தனது மூதாதையர்கள் அங்கு இருந்ததாகவும், தற்போது அனைவரும் இடம் மாறி விட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார்கள். மூன்று பேருமே மிகவும் அன்போடு எங்கள் பள்ளி மாணவர்களுக்கு சிரித்த முகத்துடன் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில்களை எடுத்துக் கூறினார்கள். நாங்கள் தான் அந்த புகைப்படக் கருவி பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ளது என்று பயந்து பயந்து பார்த்தோம். ஆனால் அவர்களோ இயல்பாக இதனை இப்படி செய்யுங்கள், இதனை இப்படியே நீங்கள் எடுத்தால் படம் நன்றாக வரும் என்று ஒவ்வொரு மாணவர்களுகுள்ளும்  அந்த கேமராவை குறித்து மகிழ்ச்சி ஏற்படுத்தினார்கள். அது அனைத்து மாணவர்களுக்கும் மகிழ்ச்சியானது. 

மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திய புகைப்படம் :


           சின்னம்மா என்கிற மாணவி புகைப்பட கருவியில் படம் எடுப்பது போன்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்து இருந்தோம். அந்த புகைப்படமும் மிக அருமையான புகைப்படம். அந்த படத்தில் மாணவி அவ்வளவு ஆச்சரியம் அடைந்ததை புகைப்படத்தில் பார்க்கும்போது தெரிந்து கொள்ளலாம். 

நன்றிகள் பல :


             இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படத்துறை கலைஞர் கரு.அண்ணாமலை  அவர்களுக்கும், வெங்கடேசன் அவர்களுக்கும், சுப்பிரமணி அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 
 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 

  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,  
சிவகங்கை மாவட்டம்.  
8056240653 

                             
திரைப்பட துறை உதவி இயக்குனர் கரு. அண்ணாமலை மற்றும் பெங்களூருவைச் சார்ந்த கற்பனை புகைப்படக்கலைஞர் ஜெயக்குமார் வெங்கடேசன், சுப்ரமணியன் ஆகியோர் பள்ளிக்கு வந்து புகைப்பட பயிற்சி பட்டறை நடத்திய நிகழ்வை வலைத்தளத்தில் காணலாம் :


https://kalviyeselvam.blogspot.com/2017/11/blog-post_5.html#more






No comments:

Post a Comment