Friday 19 June 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

மாவட்ட கல்வி அதிகாரி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

                                      தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணியாற்றி தேனி முதன்மை கல்வி அலுவலராக ஓய்வுபெற்ற மாரிமுத்து அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 



                 இன்று 8/ 8 /2016 இப்பள்ளியில் கவிதை போட்டிக்கு தலைமை ஏற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுகின்ற  ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. நல்ல ஆரோக்கியமான பள்ளி ஆசிரியர்கள், மதிப்பிற்குரிய தலைமையாசிரியரின் தலைமையின் கீழ் சமூக அக்கறையோடும், கடமை  பொறுப்போடும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். தலைமையாசிரியர் மிகச் சிறந்த தலைமை பொறுப்புடன், மாணவர்களுடன் அக்கறையோடும் பணியாற்றி வருகின்றார். கற்பித்த  நவீன யுக்திகளை கையாண்டு பாடங்கள் போதிப்பது மிகச்சிறப்பாகும் . அரசின் நோக்கம், திட்டங்கள் ஆகியவற்றினை நிறைவேற்றுவதில் தலைமையாசிரியர் சிறப்பாக செயல்படுகின்றார்.

 மாரிமுத்து 
DEO,
DVK.

                             இன்று இப்பள்ளியில் பசுமைப்படை விழா நடைபெற்றது. எதிர்கால தேவையை மாணவர்கள் நன்கு உணர்ந்து இருக்கின்றார்கள். நம்பிக்கையை உணர்ந்த சிறந்த தலைவர் எதையும் சாதிக்கலாம் என்ற நோக்கம் உள்ள தலைமை ஆசிரியரின் சிறந்த செயல்பாடு பாராட்டுக்குரியது. நன்றி. 

 மாரிமுத்து 
DEO,
DVK. 





                           தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணியாற்றி தேனி முதன்மை கல்வி அலுவலராக ஓய்வு பெற்ற மாரிமுத்து அவர்கள்  எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை. 

கல்வி குறித்து மாவட்ட கல்வி அதிகாரி அவர்களுடன் ஆரோக்கியமான கலந்துரையாடல்


                              மாவட்ட கல்வி அதிகாரி மாரிமுத்து அவர்களை முதன்முதலாக கிரிவலத்தில் சந்தித்தேன். தற்போது எஸ். புதூர் ஒன்றியத்தின் வட்டார கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றக்கூடிய குணசேகரன் அவர்களின் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து அவர்களை சந்தித்து பல மணி நேரங்கள் கல்வித்துறை தொடர்பாகவும், கல்வி தொடர்பாகவும், பள்ளிகள் தொடர்பாகவும் கலந்துரையாடி உள்ளேன். பல நாட்கள் கிரிவலத்தில் நாங்கள் பேசி உள்ளோம். அன்னார்  அவர்கள் அன்னவாசல் ஒன்றியத்தில் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அழகாக என்னிடம் எடுத்துரைத்துள்ளார். பள்ளியில் அவர் செய்த பல்வேறு சாதனைகளை கூறும்பொழுது, மிகப்பெரிய ஆச்சரியமாகவும், மிகப்பெரிய ஆளுமையுடன் பழகுகிறோம் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளார். 

அன்பான மாவட்ட கல்வி அதிகாரியுடன் பழகிய அனுபவம் :


                 அதனைத் தொடர்ந்து தேவகோட்டை மாவட்டக் கல்வி அதிகாரியாக பணியாற்றிய பொழுது அன்னார் அவர்கள் பணியில் சேர்ந்த அன்றே வாழ்த்து தெரிவித்து நல்ல நட்பை உருவாக்கிக் கொண்டேன். எந்த உதவி என்றாலும் என்னை அழையுங்கள், நான் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்..தேவகோட்டை மாவட்டக் கல்வி அதிகாரியாக பணியாற்றிய போது பல புதுமையான செயல்களை செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அலுவலகத்துக்கு  யார் வந்தாலும் தனது சொந்த செலவில் உடனடியாக தேநீர் வாங்கி கொடுப்பார்கள். அலுவலகத்தில் என்னிடம் பலபேர் பாராட்டு தெரிவித்த விஷயம் என்னவென்றால், மாதத்தில் ஒரு நாள் எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது அனைவருக்கும் உணவு வாங்கி கொடுப்பது, அவ்வப்போது  எஸ். கே. சி. கொடுப்பது, தலைமையாசிரியர் கூட்டத்திற்கு வரக்கூடிய தலைமை ஆசிரியர்களிடம் அன்பாக பேசுவது என்று மிக அருமையான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து  வந்தார்கள். எந்தவிதமான புகாராக இருந்தாலும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்கள். 

பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்று பாராட்டிய மாவட்ட கல்வி அதிகாரி :


                  எங்களுடைய பள்ளியின் முக்கிய நிகழ்வுகளுக்கு அன்னார் அவர்களை அழைத்திருந்தேன். மூன்று நிகழ்வுகளில் எங்கள் பள்ளி விழாக்களில் கலந்து கொண்டார்கள்.கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியபோது , பசுமைப்படை ஆரம்பித்த பொழுது எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி பல்வேறு விதமான தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்துடன் பள்ளியையும்  பாராட்டி சென்றார்கள். டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்திய பொழுது தேவகோட்டைசப்-கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களுடன் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களையும் பாராட்டுகளையும் பாராட்டி சென்றார்கள். 


நம்பிக்கை வார்த்தைகள் மூலம் தலைமை ஆசிரியரை ஊக்கப்படுத்திய கல்வி அதிகாரி :


                    தலைமை ஆசிரியர் அறையில் என்னிடம் பேசும்பொழுது , நீங்கள் விளம்பரம் செய்வதாக பலர் என்னிடம் கூறி உள்ளார்கள். ஆனால் அப்படியில்லை நேரில் பார்த்த பொழுது மாணவர்கள் உள்வாங்கி பேசக்கூடிய திறனை வளர்த்து உள்ளீர்கள். செயல்பாட்டில் செய்து காண்கின்றீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை தொடர்ந்து செய்யுங்கள்.அடித்து தூள் கிளம்புங்கள் என்று நம்பிக்கை வார்த்தை கூறினார். கல்விக்கும், மாணவ சமுதாயத்திற்கும் நல்ல செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார் என்பதை நேரில் பார்த்துள்ளேன், வாழ்த்துக்கள் என்று என்னிடம் தெரிவித்தார்கள். மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் பல்வேறு பள்ளிகளை பார்த்த நிலையில் அவருடைய பணி அனுபவத்தின் காரணமாக எனக்கு இதுபோன்ற வாழ்த்து தெரிவித்த பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல ஊக்கத்தையும் ஏற்படுத்தியது. 

மகிழ்ச்சியை ஏற்படுத்திய கல்வி அதிகாரி :


               அன்னார் அவர்களது பல்வேறு பணிகளுக்கு இடையில் நடுநிலைப் பள்ளி அளவிலான எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களிடம் கலந்துரையாடி பல்வேறு தகவல்களையும் எடுத்துக் கூறியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு :


             தேவகோட்டையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வில் சென்று பல்வேறு விருதுகளைப் பெற்ற அன்னார் அவர்களுடனான பழக்கம் மறக்க முடியாதது. மாணவர்களிடம் பேசும்போதும், ஆசிரியர்களிடம்  பேசும்பொழுதும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறி வருவார்கள்.

நன்றிகள் பல :


            பல்வேறு பணிகளுக்கு இடையில் எங்கள் பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கல்வி அதிகாரி மாரிமுத்து ஐயா அவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 
  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,  
சிவகங்கை மாவட்டம்.   8056240653 



மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :


https://kalviyeselvam.blogspot.com/2016/08/blog-post_11.html#more


https://kalviyeselvam.blogspot.com/2018/02/blog-post_23.html#more




மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி YOU TUBE வீடியோவாக காணலாம் :



https://www.youtube.com/watch?v=jBwnAg7kGiI


https://www.youtube.com/watch?v=jBwnAg7kGiI







No comments:

Post a Comment