Sunday 14 June 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

கல்பாக்கம் அணு விஞ்ஞானி ஜலஜா மதன்மோகன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

Jalaja Madan Mohan,
Head TCPAS 
KPKM
IGCAR 

                This was On Interesting experience. Intracting with the future scientisst of this country was truly enjoyable and are learning experience to me. I wish all of them great future 
Best Wishes

Jalaja, Madan.




        கல்பாக்கம் அணு விஞ்ஞானி ஜலஜா மதன்மோகன் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த பிறகு மாணவர்கள் குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி அவர்களுடன் தீடிர் சந்திப்பு :

                            கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் அணு விஞ்ஞானி மற்றும் பொது விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பிரிவு தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஜலஜா மதன்மோகன் அவர்களுடனான சந்திப்பு புதுமையான அனுபவம் ஆகும்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அணு மின்சாரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வந்திருந்த கல்பாக்கம் அணு விஞ்ஞானி ஜலஜா மதன்மோகன்  அவர்களை அணுகி எங்கள் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். கல்லூரி முதல்வர் திரு. சந்திரமோகன் அவர்களின் ஒத்துழைப்புடன் அணு விஞ்ஞானி ஜலஜா மதன்மோகன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார்கள்.

அணுமின் தொடர்பாக இளம் மாணவர்களுக்கு விளக்கம் கொடுத்த விஞ்ஞானி :

       இளம் வயது மாணவர்களிடம் அணு உலை மாதிரி செயல் விளக்கத்தை சில விழிப்புணர்வு பொருள்களின் மூலமாக  விளக்கினார்கள். கல்பாக்கம் அணு மின் நிலையம் பற்றியும் ஒரு அறிமுகம் கொடுத்தார்கள். மாணவர்களும் தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்கள். கல்பாக்கம் தொடர்பாகவும், மின்சாரத்தின் தேவைகள் தொடர்பாக அணு உலை மாதிரி செயல் விளக்கம் தொடர்பாகவும்,
மாணவர்களுடன் அவர்கள் கலந்துரையாடி பேசும்போது ,  

மின்சாரத்தின் இன்றைய தேவை
                              மின்சாரமானது நீராவி ,சூரிய ஒளி ,காற்றாலை,அணுசக்தி,நிலக்கரி என பல வகைகளில் இருந்து உற்பத்தி செய்யபடுகிறது. வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாராம் நீர்,காற்று,உணவு போன்றவை.அதை விட முக்கியமாக நான்கவதாக மின்சாரம் தேவைப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது .மின்சாரம் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையில் அதனுடைய உற்பத்தியைப் பெருக்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.மனிதன் ஒரு வேலையை செய்யும் நேரத்தில் மின்சாரத்தால் இயங்கக் கூடிய கருவிகள் 100 வேலைகளைச் செய்யும்.உலகளவில் அமெரிக்கா போன்ற நாடுகள் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து முன்னணியில் உள்ளன.ஆகவே நாமும் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

                                
  அணு உலை மாதிரி  செயல் விளக்கம்

                            அணு உலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து யுரேனியம் நீராவியனது டர்பைன் ப்லேடில் பட்டு பேன் சுற்றுவது போல் சுற்றி சுற்றி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.அணுவைப் பிளக்க வெப்ப சக்தி அதிகம் தேவைப்படுவதால் சோடியம் வழியே வெளியே எடுக்கிறோம்.நியுட்ரான் என்பது கேரம் போர்டில் உள்ள ஸ்டிக்கரை போன்றது. நியுட்ரான் கொண்டு அணுவை அடித்தால் அது அடுத்த அணுவில் போய் அடித்து மூன்றாகி அது அடுத்த அணுவில் அடித்து பல அணுக்களாகி மின்சாரம் பெறப்படுகிறது.சங்கிலித் தொடர் போல் இச் செயல்பாடு தொடர்ந்து  நடைபெற்று மின்சாரம் கிடைக்கிறது.

 கல்பாக்கம் ஒரு அறிமுகம்

                               கல்பாக்கம் இங்கு 21 அணு உலைகள் உள்ளன.4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.சுற்றுப்புறத்தை பாதிக்காமல் இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.அணு உலைகள் நான்கு ,ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது.
                              
                   மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் பிற்காலத்தில் அறிவியல் விஞ்ஞானி ஆக வந்து  நம் நாட்டுக்கு பணி புரியுங்கள்.அறிவியலில் அதிக ஆர்வம் காட்டி நிறைய ஆராய்ச்சி செய்து புதியனவற்றை கண்டுபிடிக்க இந்த வயதிலியே சபதம் எடுத்து கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
 
கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளுக்கு செல்ல என்ன படிக்க வேண்டும்? நேரில் விளக்கம் பெற்ற மாணவர்கள் :
 
                     கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடர்பாக எனக்கு கல்லூரி படிப்பு படித்த பிறகுதான் பல்வேறு தகவல்கள் தெரியும். கல்பாக்கத்தில் பணியாற்றக்கூடிய அணு விஞ்ஞானி அவர்கள் இளம் வயது மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் அணுமின் தொடர்பாகவும், அணுஉலைகள் தொடர்பாகவும் நேரடி செயல் விளக்கம் அளித்தது மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மிகப்பெரிய பதவியில் இருக்கக்கூடிய அணு விஞ்ஞானி அவர்கள் சென்னையிலிருந்து தேவகோட்டை வந்து எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கல்பாக்கம் அணுமின் நிலையம் போன்று பல்வேறு இடங்களுக்கு தாங்களும் பணிகளுக்கு வரவேண்டும் என்கிற விவரங்களையும் கூறி, என்ன படித்தால் இது போன்ற வேலைகளுக்கு வரலாம் என்கிற தகவலையும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். இது  மாணவர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.


பொறுமையாக மாணவர்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளித்து அசத்திய விஞ்ஞானி :


          மின்சாரம் தயாரிப்பது தொடர்பாகவும், அது தொடர்பான பல்வேறு விவரங்களையும் மாணவர்கள் சிறுவயதில் பெற்றுக்கொண்டது மாணவர்களிடம் மிக பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.விஞ்ஞானி அவர்களும் மாணவர்களிடம் அன்பாக பேசி,பொறுமையாக பல்வேறு தகவல்களை எடுத்து கூறினார்கள். மாணவர்களும் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்து கொண்டார்கள். 

நன்றிகள் பல :

                     அருமையான வாய்ப்பிற்கு ஒத்துழைப்பு அளித்த அணு விஞ்ஞானி ஜலஜா மதன்மோகன் அவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 
  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,  
சிவகங்கை மாவட்டம்.   8056240653 


கல்பாக்கம் அணு விஞ்ஞானி ஜலஜா மதன்மோகன் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :


https://kalviyeselvam.blogspot.com/2015/07/blog-post_3.html#more

No comments:

Post a Comment