Tuesday 2 June 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள்

முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுடனான  பள்ளி பகிர்வுகள் 

                             இன்று இப்பள்ளி சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இயங்கும் ஆய்வகம் மற்றும் அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ளும் போது தலைமை ஆசிரியரின் தனித்தன்மை -  மாணவர்கள் மீது அக்கறை ஆர்வம் கண்டு உணரமுடிந்தது.அ .மு.மு. அறக்கட்டளை மற்றும் அகஸ்தியா அறக்கட்டளை இவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது. தலைமை ஆசிரியரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

A . குயின் எலிசபெத் 
முதன்மை கல்வி அலுவலர்.





                           
                                  முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.

அழைப்பை ஏற்று நடுநிலைப் பள்ளிக்கு வருகை புரிந்த முதன்மை கல்வி அலுவலர் :

                       சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய குயின் எலிசபெத் அவர்களை பள்ளி நிகழ்வுக்கு  அழைப்பதற்காக சிவகங்கை நேரில் சென்றிருந்தேன். சில நிமிடங்களில் முதன்மை கல்வி அலுவலர் அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் பள்ளியின் நிகழ்வு குறித்து எடுத்துக் கூறி அறிவியல் வாகன துவக்க விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். அந்த தருணத்தில் அவர்கள் என்னிடம்  வேறு பணிகள் இல்லாத சூழ்நிலையில் சிவகங்கையிலிருந்து தேவகோட்டைக்கு தங்கள் பள்ளி நிகழ்விற்கு வந்து செல்கின்றேன் என்று உறுதி கொடுத்திருந்தார்கள். கூறியது போலவே சரியாக நிகழ்வு நடைபெறும் சில மணித்துளிகளுக்கு முன்பாக பள்ளிக்கு வந்து அறிவியல் கண்காட்சியை மிக தெளிவாக, நீண்ட நேரம் பார்த்து மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை பெற்று பாராட்டு தெரிவித்தார்கள். 

மாணவர்களின் ஈடுபாட்டுக்கு பாராட்டு தெரிவித்த முதன்மை கல்வி அலுவலர் :

              அறிவியல் வாகனம் துவக்க விழாவில்  அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பேசும்போது , மாணவர்களின் ஈடுபாடு மிகவும் அருமையாக இருந்ததாக பாராட்டு தெரிவித்தார்கள்.  மாணவர்கள் உள்வாங்கிக் கூறிய கருத்துக்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள். பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும், தலைமையாசிரியரையும் , நிர்வாகத்தையும்  பாராட்டி பேசினார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்  ஆன சில மணி நேரங்கள் எங்கள் பள்ளியில் இருந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தியது  மாணவர்களுக்கு மறக்கமுடியாதது. ஒவ்வொரு மாணவரிடமும் உங்கள் குறிக்கோள் என்ன என்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் வினவினார்கள். அதற்கான பதில்களை மாணவர்கள் கூறியதும், மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். விழாவினை   தொடர்ந்து  தலைமை ஆசிரியர் அறைக்கு வந்து பணிகளைப் பாராட்டி பேசினார்கள்.  


அ .மு.மு. அறக்கட்டளை மற்றும் அகஸ்தியா நிறுவனத்துக்கு பாராட்டு :


              முதன்மை கல்வி அலுவலர் தனது பல்வேறு பணிகளுக்கு இடையில் நடுநிலைப் பள்ளிக்கு வந்து அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, அறிவியல் வாகனத்தையும் துவக்கி வைத்து மிக நீண்ட நேரம் மாணவர்களுடன் உரையாடி, குறிப்பாக இளம் வயது மாணவருடன் கலந்துரையாடி சென்றது மறக்கமுடியாத நிகழ்வு ஆகும். முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்  எங்கள் பள்ளிக்கு சிவகங்கையிலிருந்து தேவகோட்டை வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடிசென்றது மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த அ .மு.மு.அறக்கட்டளையும் ,அகஸ்தியா நிறுவனமும்  மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். முருகப்பா அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு முதன்மை கல்வி அலுவலர் உடன் நன்றாக பேசி பள்ளியின் நிகழ்வு குறித்து பாராட்டு தெரிவித்தார்கள் .அனைத்து நிகழ்வும் எங்களுக்கு மறக்க முடியாதது. முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்  அ .மு.மு.அறக்கட்டளையையும் , அகஸ்தியா நிறுவனத்தின் பணிகளையும் வெகுவாக பாராட்டினார்.

நன்றிகள் பல :


                 சிவகங்கையிலிருந்து தேவகோட்டை வரை வந்து எங்கள் பள்ளியில் நிகழ்வில் கலந்துகொண்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய  அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 

 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம், 

  தலைமை ஆசிரியர்,  
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, 
  தேவகோட்டை,  
சிவகங்கை மாவட்டம்.  
8056240653 


 முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை பள்ளி வலைத்தளத்தில் காணலாம் :


 https://kalviyeselvam.blogspot.com/2018/08/blog-post.html#more







No comments:

Post a Comment