Saturday 3 August 2019

  தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா

 அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கியது தமிழக அரசு 

ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு பெற்றோர்கள் வரவேற்பு





 தேவகோட்டை - தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்றது.



    ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.ஸ்மார்ட் கார்டுகளை பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.எங்களின் நீண்ட நாள் கனவை அரசு நினைவாக்கியுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். .நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை   வழங்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


பட விளக்கம் : தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்றது.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி மாணவர்ளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.





மேலும் விரிவாக :
  
                                தமிழக  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்வழங்கப்பட்டு வருகிறது.மாணவரின் பெயர், தந்தை பெயர், யூனிக் அடையாள அட்டை எண், பள்ளியின் பெயர், மாணவரின் முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவை இடம் பெறுகிறது. இது தவிர ‘‘கியூ-ஆர் கோடு’’ என்று சொல்லக்கூடிய நவீன தொழில் நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. கியூ-ஆர் கோடினை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து மாணவர்கள் பற்றிய முழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் வெப்சைட்டிலும் எளிதாக மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த அடையாள அட்டை தவறினால் கூட மாணவர் பற்றிய தகவல்களை பெற முடியும்.

No comments:

Post a Comment