Saturday 10 August 2019

 சட்ட விழிப்புணர்வு முகாம் 
நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் 
மனசாட்சியின் வெளிப்பாடே சட்டம்
நீதிபதி பேச்சு 






 
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகளுடன் கலந்துதுரையாடல் நிகழ்வாக நடைபெற்றது.
                                                  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்   வரவேற்றார்.தேவகோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனா,அரசு வழக்கறிஞர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிதிமன்ற  நீதிபதி முருகன்  தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசுகையில், சட்டம் என்பது ஒவ்வொருவரின் மனசாட்சியின் வெளிப்பாடு ஆகும். அனைவரிடமும் தனி திறமைகள் உண்டு.குற்றம் என்ற புற்றுக்குள் கையை விட்டால் சட்டம் என்கிற பாம்பு கடிக்கும் என்கிற ஜப்பானிய பழமொழி மூலம் சட்டம் பற்றி  எளியமையாக விளக்கினார்.பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம், இலவச சட்ட மையம் தொடர்பான சட்டம்,பொதுநல வழக்கு தொடர்பான தகவல்கள்,சட்டத்தின் அடிப்படை கூறுகளை விரிவாக விளக்கினார்.மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார் .  நான் ஏன் இந்தியாவை விரும்புகிறேன் என்கிற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. தேவகோட்டை சார்பு நீதி மன்ற சிரசாதர் பாலசுப்ரமணியன் ,வட்ட சட்ட பணிகள் குழுவின் அலுவலர்கள் ராஜன் ,வெற்றி செல்வன் ,ஜேசுதாஸ் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.மாணவர்கள் ஐயப்பன்,ஜனஸ்ரீ , ஜோயல்,சந்தியா,வெங்கட்ராமன்,சிரேகா ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும்,சார்பு நீதிமன்றங்களின் நீதிபதியுமான முருகன்  மாணவர்களுடன் சட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்த்தி பரிசுகள் வழங்கினார்..உடன் தேவகோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனா,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , அரசு வழக்கறிஞர் சொர்ணலிங்கம் ஆகியோர் உள்ளனர்.





மேலும் விரிவாக :

 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிதிமன்ற  நீதிபதி முருகன் பேசுகையில் ,

 என்னை பிரமிப்பில் ஆழ்த்திய பள்ளி 
                      நீங்கள் இமயமலைக்கு சென்றால் எப்படி உணர்வீர்கள் ,பிரமிப்பாக இருக்கும்.அதுபோலவே இந்த பள்ளிக்கு வந்ததும் எனக்கு பிரமிப்பாக இருந்தது.உங்கள் பள்ளிக்கு வாழ்த்துக்கள்.வாழ்க்கையில் பெரிய பதவிகள் உங்களை தேடி வரும்.

 குரு - சிசியன் கதை
                       ஒரு குரு இருந்தார்.அவருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர்.குருவும்,சீடர்களும் தனி,தனியாக குதிரையில் சென்றனர்.அப்போது குருவின் தலைப்பாகை கீழே விழுந்து விட்டது.அதனை சீடர்கள் எடுக்கவில்லை.நீண்ட தூரம் சென்ற பிறகு குரு கேட்டதற்கு சீடர்கள் அய்யா ,நீங்கள் எடுக்க சொல்லவில்லை அதனால் நாங்கள் எடுக்கவில்லை என்று சொன்னார்கள்.பிறகு குறு கீழே எது விழுந்தாலும் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.உடனே சீடர்கள் இருவரும் கீழே விழுந்த சாணத்தையும் எடுத்து சென்றனர்.குரு மீண்டும் அவர்களை கடிந்து கொண்டு ,எதனை எடுக்க வேண்டும்,எதனை எடுக்க கூடாது என்று ஒரு லிஸ்ட் கொடுத்தார்.ஒரு நாள் குதிரையில் செல்லும்போது குரு கீழே விழுந்து விட்டார்.பின்னால் வந்த சீடர்கள் குருவை இறங்கி பார்த்தனர்.குரு கொடுத்த லிஸ்டை பார்த்தனர்.அதனில் குருவை தூக்க வேண்டும் என்று இல்லாததால் கிளம்பி சென்று விட்டனர்.இது போன்று சிசியர்களாக நீங்கள் இருக்கமாட்டிர்கள் என்று எனக்கு தெரியும் .இப்படி குரு -சீடர்களாக இல்லாமல் உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரும் ,உங்களையும் போல் நல்ல அறிவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மனசாட்சியின் வெளிப்பாடே சட்டம்
                     நல்லவர்கள் யாருக்குமே சட்டம் தேவையில்லை.நீங்கள் தவறு செய்யும்போது உங்கள் மனசாட்சி சொல்லும் ,நீங்கள் செய்வது தவறுதான் என்று.அப்போதே அதனை திருத்தி கொண்டால் நீங்கள் சட்டம் பற்றி கவலைப்பட தேவையில்லை.மனசாட்சியின் வெளிப்பாடே சட்டம் ஆகும்.நாம் ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும்.

சட்டம் என்பது யானையின் அங்குசம் போன்றது 
                        யானை அனைவருக்கும் தெரியும்.யானை எவ்வாறு அதன் அங்குசத்தை பயன்படுத்துகிறதோ அது போன்று நாமும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும்,சிகப்பு விளக்கு எறிந்தால் போக கூடாது என்கிற சுய கட்டுப்பாடு வரவேண்டும்.அப்போதுதான் நாம் மனிதர்களாக,அறிவு உடையவர்களாக விளங்குவோம்.



 குற்றம் என்ற புற்றுக்குள் கையை விட்டால் சட்டம் என்கிற பாம்பு கடிக்கும் - ஜப்பானிய பழமொழி
                       தவறு செய்யாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.தவறு செய்து விட்டால் சட்டம் தண்டிக்கும்.குற்றம் செய்ய சிந்திப்பது தவறு.அதனை விட குற்றம் செய்ய முயற்சிப்பது அதனை விட குற்றம் ஆகும்.ஜெயில் வாழ்க்கை என்பது மிகவும் நம்மை பாதிப்பது ஆகும்.நல்ல சாப்பாடு,நல்ல தண்ணீர் எல்லாம் கிடைக்கும்.ஆனால் நீங்கள் மட்டுமே தனி அறையில் இருக்க வேண்டும்.செல் போன் , வாட்சப்,பேஸ்புக் எதுவுமே பார்க்கமுடியாது.மிகவும் தண்டனை என்பது அதுதான்.குற்றம் செய்தால்தான் தண்டனை உண்டு என்பதை ஜப்பானிய பழமொழி கொண்டு விளக்கினார்.
 

பாலை அழியாத நிலைக்கு மாற்றலாம் 
                         ஒரு கிண்ணத்தில் பால் வைத்து மறுநாள் பார்த்தால் என்னவாகும்? கெட்டுப்போய் விடும்.இந்த பாலை அழியாத நிலைக்கு மாற்றலாம்.பாலை காய்ச்சி,ஆற வைத்து மோர் ஊற்றி அதனை தயிராக மாற்றி ,வெண்ணெய் ஆக்கி,பின்னர் உருவம் மாறி ,மாறி கடைசியில் நெய்யாக மாற்றப்படுகிறது.நெய் - இதற்கு அழிவே கிடையாது.அழியாத நெய் போல் உடல் அழிந்தாலும் ஆன்மா என்ற அழியாத நிலைக்கு செல்ல நல்ல புத்தியோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை உண்டு 
                               தூக்கணாங்குருவி  பறவை பெரிய கட்டிட கலை வல்லுனர் .தலைக்கீழாக தொங்கினாலும் ,கீழே விழாமல் உள்ளே மாடிமேல் ,மாடி போல் கூட்டை காட்டும் ஆற்றல் படைத்தது.சிலந்தி அது போன்று யாரும் நெருங்க இயலாத வலை பின்னக்கூடியது .பொதுவாக திரவம் மேலே இருந்து கீழே ஊற்றினால் உடனே வந்து விடும்.ஆனால் தேன் கூட்டினை கட்டும் தேனீ  அந்தரத்தில் நீரை சேமித்து வைக்கும் ஆற்றல் பெற்றது.தேக்கு மரம் மிகவும் சக்தி வாய்ந்தது.அதனை யாரும் அவ்வளவு எளிதாக உடைக்க இயலாது.ஆனால் தொட்டால் அழிந்து போகும் கரையானை தேக்கு மரத்தில் முதல் நாள் விட்டால் மறுநாள் தேக்கு மரத்தை ஓட்டை போட்டு வெளியே வந்துவிடும் ஆற்றல் கொண்டது.எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை உண்டு.திறமையை அறிந்து செயல்பட்டால் வெற்றி உண்டு.



 
குற்றம் நடப்பதற்கு முன்பே நல்வழிப்படுத்துவதே சட்ட பணிக்குழுவின் பணி 
                             குற்றம் நடந்தால் சட்டம் தண்டனை தரும் என்பது முன்பு உள்ளது.இப்போது குற்றம் நடப்பதற்கு முன்பே எங்களை வரும் காக்க சொல்லித்தான் இதுபோன்று விழிப்புணர்வு முகாம்களை நடத்த சொல்கிறார்கள்.இதனால் நாங்கள் பள்ளி ,கல்லூரி,பொதுமக்கள் இருக்கும் இடங்களில் சென்று விழிப்புணர்வு தருகிறோம்.உங்களை போன்ற சிறுவர்களிடம் இதனை சொல்லும்போது வரும்கால சமுதாயம் நல்ல முறையில் செயல்படும் என்பது உண்மை.

 ஒழுக்கத்துடன் திறமையை வெளிப்படுத்துங்கள்
ஆணவத்தால் ஆடினால் அழிவை தரும் 
சட்டம் என்பது உத்தரவு
                    கிளி ,காகம் இரண்டும் ஒரு காட்டில் இருந்தது.கிளி,காகத்தை பார்த்து சொன்னது,நீ என் பக்கத்தில் உட்காராதே என்று சொன்னது.சிறிது நேரத்தில் அங்கு வந்த வேடன் ,கிளியை பிடித்து கொண்டு போய்விட்டான்.காகத்தை ஒன்றும் செய்யவில்லை.காகம் ,வேடன் கிளியை என்ன செய்கிறான் என்று பார்க்கப்போனது, அப்போது வேடன் வீட்டில் கிளியை கூண்டில் அடைத்து அதனை நாக்கில் சூடு வைத்து அப்பா,அம்மா என்று சொல்ல சொன்னான்.அவனது மனைவியோ ,காகத்தின் பாசையில் பேசி காகத்துக்கு உணவு வைத்தார்.கிளி கர்வத்தோடு உள்ளது .அழகாக இருப்பது முக்கியமல்ல.சந்தோசமாய் இருப்பதுதான் முக்கியம்.நம் எண்ணம் நன்றாக இருக்க வேண்டும்.எண்ணம் தவறாக மாறும்போது சட்டம் தேவைப்படுகிறது.ஒழுக்கம் உன்னதமானது.ஒழுக்கத்துடன் திறமையை வெளிப்படுத்துங்கள் .இவ்வாறு பேசினார்.
 
மாணவர்கள் கேள்விகளும் ,நீதிபதி முருகன் பதில்களும் :  

மாணவி கீர்த்தியா :  மிக கடுமையான சட்டம் எது ?

நீதிபதி பதில் : மரணதண்டனை தான் மிக கொடுமையான தண்டனை.  நமது நாக்குதான் இருப்பதில் மிக கொடுமையான ஆயுதம்.அதனை பாதுகாப்பாக பேச பழக்கி கொண்டால் சட்டம் தேவைப்படாது.   

மாணவர் ஜோயல் : ஆற்றில் மணல் எடுத்தால் என்ன தண்டனை?

நீதிபதி பதில் : இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

மாணவி சந்தியா : உங்கள் குறிக்கோள் என்ன ?

நீதிபதி பதில் : என்னுடைய குறிக்கோள் நல்ல மனிதராக வாழ்வது.

மாணவர் வெங்கட்ராமன் : இந்தியாவில் 2019 ஆண்டில் புதிய சட்டம் எது ?

நீதிபதி பதில் : இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த ஜம்மு காஸ்மீர் இப்போது யார் வேண்டுமானாலும்,போகலாம் வரலாம் என்ற சட்டம் தற்போது புதியதாக கொண்டு வரப்பட்டுள்ளது.ஏழையாக இருந்தாலும்,எந்த ஜாதியாக இருந்தாலும் சட்டம் பயில்வதற்கு இலவசமாக படிக்க வாய்ப்பு அளிக்கப்படும் சட்டம் கொண்டுவரப்பட்டது.அதுவும் புதிய சட்டம் ஆகும். 

மாணவர் சபரி : லஞ்சம் வாங்கினவருக்கும்,லஞ்சம் கொடுப்பவருக்கும் வேறு,வேறான தண்டனையா ?

நீதிபதி பதில் : இருவருக்குமே ஒரே தண்டனைதான் .நீதிபதிகளை பொறுத்தவரை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் கிடையாது.எல்லாருமே சமநிலைதான்.
                                            இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதிகள் அன்புடன் பதில் சொன்னார்கள்.                                   


 தேவகோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனா பேசும்போது : 

பாலியல் சீண்டலை எதிர்த்து புகார் கொடுப்பது எப்படி ?
                                                  பாலியில் வன்கொடுமை தொடர்பாக நாடகம் நடித்து காண்பித்தீர்கள்.பாலியல் வன்கொடுமை சட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இச்சட்டம் 2012யில் கொண்டு வரப்பட்டது.இது போக்ஸோ சட்டம் ஆகும்.
                                                 இச்சட்டத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியில் வன்கொடுமையில் ஈடுபட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை.18 வயதுக்குட்பட்டவர்கள் சிறார்களாக கருதப்படுவார்கள்.சிறார்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய பெண்காவல் அதிகாரிகளே இருப்பர் .குழந்தைகளின் வீடு அல்லது அவர்கள் விரும்பும் இடத்தில்தான் வாக்குமூலம் பெற வேண்டும்.இதற்கு பெண்கள் மட்டுமே விதிவிலக்கல்ல.ஆண் ,பெண் இருபாலினருக்கும் சட்டம் சமமானது.
                                                 பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சனையை புகார் கொடுக்கலாம்.இதில் பெரியவர்கள்,குழந்தைகள் யார்வேண்டுமானாலும் கொடுக்கலாம்.உடன் இருப்பவர்கள் பிரச்னை நடந்ததை சொல்லாமல் இருந்தாலும் தண்டனைக்குரிய விசயமாகும் .அதற்கும் ஆறு மாதம் அபாரதத்துடன் தண்டனை அளிக்கப்படும்.அதுவே குழந்தைகளாக இருந்தால் தண்டனை பொருந்தாது.

முதல் தகவல் அறிக்கை பெறுவது எப்படி?
                                        காவல் நிலையம் சென்று சிறப்பு இளஞ்சிறார்கள் காவல் பிரிவில் புகார் கொடுப்பது என்றால் புகாரை எழுதிக் கொடுத்த உடன்,அவர்கள் படித்து காண்பித்து,அதை நன்கு தெரிந்து,புரிந்த பிறகு கையெழுத்திட்டு பதிவு செய்து அதற்கென்று எண் கொடுத்து FIR போட்டு அதில் நகல் எடுத்து நமக்கு ஒன்று தருவார்கள்.
                              இந்த தகவலை நீங்கள் வீட்டில்,அறிந்தவர்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உரிமை கிடைக்கவேண்டுமோ அது கிடைக்கும்.உடல் ரீதியாக பாதிக்கப்பட்டாலும் அவர்களை கவனிக்க பதிவு செய்யக்கூடிய அளவில் அரசு மருத்துவர் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

இலவச சட்ட உதவி பெறுவது எப்படி ? 
                           குழந்தைகள் முதலில் எது நடந்தாலும் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டாலும் தகவல் தெரிவிக்கவும் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகம் உள்ளது.உடல் ரீதியகவும்,மன ரீதியாகவும் கவுன்சலிங் கொடுக்கப்பட்டு இழப்பீடு தொகையும் வழங்கப்படும்.இவை சார்பு நீதிமன்றத்தில் உள்ள அலுவலர் மூலம் சட்ட பணிகள் குழுவை தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம்.மாணவர்களாகிய உங்களை யாராவது வீபரீதமாக தொட்டால் உடனே கத்தி எதிர்ப்பை தெரிவியுங்கள்.

பெற்றோர்களுக்கு வேண்டுகோள் :
                     
 
பெற்றோரே பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்
பெற்றோர்கள் குழந்தைகளை அடக்கி வைக்க கூடாது.குழந்தைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்து வந்த பிறகு ஒரு மணி நேரமாவது அவர்களுடன் பேச வேண்டும்.அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும்.பிள்ளைகள் சொல்ல வருவதை பொதுவாக கேட்காமல் போவதால்தான் பல இடங்களில் சட்ட சிக்கல் வருகிறது.மாணவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் யார் எந்த பொருள் கொடுத்தாலும் வாங்க கூடாது.யாராவது தொடாத இடத்தில் விபரீதமாக தொட்டால்,பேசினால்  உடனே கண்களை விரித்து எதிர்ப்பை தெரிவியுங்கள் .அதனையும் மீறி தவறாக நடந்தால் சத்தமாக கத்துங்கள்.எதிர்ப்பை தெரிவியுங்கள்.குழந்தைகள் தைரியமாக வளர வேண்டும்.ஏன் ,எதற்கு என்று கேள்விகள் கேட்க வேண்டும்.கேள்வி கேட்டு பதில் பெற்றால்தான் வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்த இயலும்.
                                     1098  என்கிற எண்ணை ஆபத்தான நேரத்தில் பயன்படுத்தினால் உங்களுக்கு அரசு சார்பாக இலவச சட்ட உதவி கிடைக்கும் . 
 
இவ்வாறு நீதிபதி ஆலோசனைகளை வழங்கினார்.


                                              

No comments:

Post a Comment