Monday 12 August 2019

இஸ்ரோ தலைவரால் பாராட்டு பெற்ற பள்ளி

பள்ளியின் கல்வி சேவைக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய  இஸ்ரோ தலைவர் 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் கல்வி சேவைக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு மடல் எழுதி  வாழ்த்து சொல்லி கடிதம் அனுப்பி உள்ளார்.
                                 இப்பள்ளி மாணவர்கள்   இஸ்ரோ அனுப்பிய பி.எஸ்.எல்.வி - சி உட்பட அனைத்து செயற்கை கோள்கள் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய தகவல்களை மாணவர்களுக்கு பள்ளியில் எடுத்து சொல்லி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வண்ண,வண்ண பலூன்கள் பறக்கவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் தொடர்ச்சியாக இஸ்ரோ தலைவர் சிவன் பள்ளி தலைமை ஆசிரியர் 
லெ .சொக்கலிங்கத்துக்கு  கையெழுத்திட்டு அனுப்பி உள்ள பாராட்டு மடலில் , 
                      "இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் சாதனைகளுக்கு வண்ண பலூன்கள் பறக்கவிட்டு உங்கள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்ததை அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
                                           விண்வெளி துறையின் வளர்ச்சியை மாணவர்களுக்கு எடுத்துச் சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.உங்களின் முன்நோர்க்கு பார்வைக்கு என் வாழ்த்துக்கள்.
                                                உங்களை போன்ற நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களால் இந்தியா விண்வெளித்துறையில் மென்மேலும் வெற்றி பெறும் .
                              உங்கள் கல்வி சேவைக்கும், உங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ".
                                                                உங்கள் அன்புடன் என்று இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தமிழில் கையெழுத்திட்டு பள்ளிக்கு கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
                                                 இஸ்ரோ தலைவரின் பாராட்டு கடித்ததால் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்,நிர்வாகத்தினர் ,பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் சந்திரயான்-2 விண்கலம் அனுப்பி உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம் அனுப்பிய இந்திய விஞ்ஞானிகளுக்கு  இப்பள்ளி மாணவர்கள்   செயற்கைகோள் வடிவமைத்து  பாராட்டு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் கல்வி சேவைக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு மடல் அனுப்பி வாழ்த்து சொல்லி அனுப்பி உள்ள கடிதத்துடன் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.













 

No comments:

Post a Comment