Tuesday 27 August 2019

 மாணவ சட்டசபை பதவியேற்பு

பள்ளி அளவிலான தேர்தல் தலைமை பண்பை வளர்க்கும்

 மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதே ஆசிரியர்களின் கடமை


மேனாள் துணைவேந்தர் பேச்சு









தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ சட்டசபை பிரதிநிதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பதவியேற்பு விழா நடந்தது.
                         ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை  தாங்கினார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ .சுப்பையா தலைமை தாங்கி   மாணவ தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது பேசுகையில் , பள்ளி அளவிலான தேர்தல் தலைமை பண்பை வளர்க்கும்.வரும் காலத்தில் சிறந்த தலைவர்களை உருவாக்கும்.தேர்தலில் தயக்கமின்றி போட்டியிடவும்,மக்களுக்கு சேவையற்ற வேண்டும் என்ற எண்ணமும் உருவாக வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவதுதான் இந்த தேர்தல் முறையாகும்.மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதே ஆசிரியர்களின் கடமை.பயம் தெளிந்தால் வாழ்க்கையில் வெற்றி எளிதில் கிடைக்கும்.இந்த பள்ளிக்கு நான்காவது  முறையாக நிகழ்வுகளுக்கு நான்  வர காரணம் உங்கள் பள்ளியின் புதுமையான செயல்பாடுகள் தான் .இங்கு  படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய ஆளுமைகளாக வருவார்கள் என்பது உறுதி . பள்ளிக்கு பாராட்டுக்கள்.இவ்வாறு பேசினார்.பதவியேற்ற மாணவ தலைவர்கள் உறுதிமொழி வாசித்து,ஒப்புகை சீட்டில் கையெழுத்திட்டு தங்களின் புகைப்படம் ஒட்டிய சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.மாணவ தலைவராக சபரியும், துணை தலைவராக ஜோயல் ரொனால்டும்,  வேளாண்மை துறை அமைச்சாராக சிரேகாவும் ,சுகாதார அமைச்சராக ஜனஸ்ரீயும் ,கல்வித்துறை அமைச்சராக ஐயப்பனும் பதவியேற்றனர். பதவியேற்ற அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது. தலைவர்கள் ஓட்டு போட்ட மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஆசிரியை செல்வ  மீனாள் நன்றி கூறினார்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.பெற்றோர்கள் சார்பில் ஆசிரியை ராணி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.


 மேலும் விரிவாக :


மாணவர் தலைவர் பதவியேற்பு 

மாணவ சட்டசபை  பதவியேற்பு விழா 

புதிய மாணவ சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு 

விறுவிறுப்பான வாக்கு பதிவில் வெற்றி பெற்ற மாணவர்கள்


 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் ஜனநாயக முறைப்படி மாணவர்களுக்கான  தேர்தல்  வாக்குச்சாவடி அமைத்து ஒட்டு போடப்பட்டு ,கையில் மை வைத்து ,வாக்கு பதிவு நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அதன் தொடர்ச்சியாக மாணவ சட்டமன்ற முதலமைச்சர் உட்பட மாணவ அமைச்சர்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்து பதவியேற்பு விழா நடைபெற்றது.



 

                                                               விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும்  ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்   முன்னிலை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ .சுப்பையா தலைமை தாங்கி புதிய மாணவ தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் .பதவியேற்ற மாணவ தலைவர்கள் உறுதிமொழி வாசித்து,ஒப்புகை சீட்டில் கையெழுத்திட்டு தங்களின் புகைப்படம் ஒட்டிய சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.மாணவ தலைவராக சபரியும், துணை தலைவராக ஜோயல் ரொனால்டும்,  வேளாண்மை துறை அமைச்சாராக சிரேகாவும் ,சுகாதார அமைச்சராக ஜனஸ்ரீயும் ,கல்வித்துறை அமைச்சராக ஐயப்பனும் பதவியேற்றனர். அனைவரும்  வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.மாணவர்கள் புதிய பொறுப்புகளை சிறப்பாக செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.தேர்தல் அலுவலராக ஆசிரியர் கருப்பையா செயல்பட்டார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்ற தலைவர்களுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ .சுப்பையா தலைமை தாங்கி   மாணவ தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.


பரபரப்பான வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி
நன்றாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ முதலமைச்சர்
பள்ளி மாணவ முதலமைச்சர்மு.சபரி 
பள்ளி மாணவ முதலமைச்சர் மு.சபரி தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மாணவ துணை முதல்வர் ஜோயல் ரொனால்ட் தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment