Thursday 22 August 2019

பரிசளிப்பு விழா 

 புத்தகங்கள் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் 

அறக்கட்டளை துணைத்தலைவர் பேச்சு 









தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
                                                            ஆசிரியை முத்தமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை குன்றக்குடி தைப்பூச காவடி நகரத்தார் ஸ்ரீ சண்முகநாதன் அன்னதான அறக்கட்டளை செயலர் சிதம்பரம் முன்னிலை வகித்தார்.அறக்கட்டளை  உபதலைவர் அய்யப்பன் பேசுகையில் , புத்தககஙள் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.நமக்கு சுதந்திரம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சிரமப்பட்டு கிடைத்துள்ளது.நமது சுதந்திரம் என்பது அடுத்தவர் உரிமையை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று பேசினார். கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சரண்குமார்,முத்தையன்,அஜய்,
யோகேஸ்வரன்,ஜெயஸ்ரீ,நதியா,ஈஸ்வரன்,அய்யப்பன் ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது . நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.பெற்றோர்கள் லெட்சுமி,சித்ரா,கௌசல்யா,கார்த்திகா உட்பட ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேவகோட்டை குன்றக்குடி தைப்பூச காவடி நகரத்தார் ஸ்ரீ சண்முகநாதன் அன்னதான அறக்கட்டளை செயலர் சிதம்பரம் மற்றும் உபதலைவர் அய்யப்பன் ஆகியோர் கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.








No comments:

Post a Comment