Wednesday 14 August 2019

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 
 
 தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழாவில் மாணவர்களுக்கு சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.







   ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை  தாங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உதயசூரியன் கொடி ஏற்றி பேசினார்.மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு
வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார். முன்னதாக   ஒற்றுமையை வலியுறுத்தி நாம் அனைவரும் இந்திய தாயின் மக்கள் என்கிற தலைப்பில் மழலை மாணவர்களின் மௌன நாடகமும்,சுதந்திர  தினம் தொடர்பாக கவிதையை மெர்சியும்,யோகேஸ்வரனும்  ,ஆங்கிலத்தில் சுதந்திர தினம் தொடர்பாக திவ்யஸ்ரீயும்  ,தேசபக்தி பாடலுக்கான மழலையர் நடனமும்,எழுந்திரு தேசமே பாடலும் பாடினார்கள்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
 

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உதயசூரியன் கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசுகளையும் ,கடலாய் மிட்டாய் இனிப்பையும் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment