Friday, 24 August 2018

 கேரள வெள்ள நிவாரணத்திற்கு விட முயற்சியுடன் உதவி செய்த பெரியவருக்கு ஒரு சலுயூட் .



பள்ளியில் இருந்து கேரள வெள்ள நிவாரண நிதி அனுப்பியதன் தொடர் நிகழ்வுகள் 
                       ஹலோ , யாரது சொக்கலிங்கம் சாருங்கள என்று வயதான ஒருவரின் குரல் கேட்டது.ஆமாங்க சார் ,நீங்க யாரு என்று திருப்பி கேட்டேன்.அதற்கு அந்த பக்கம் இருந்து , நான் சீனுவாசன் ,ஓய்வு பெற்ற ஆசிரியர்,ஊர் பலவான்குடி என்றார்.கேரள வெள்ள நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப வேண்டும்,தாலுகா அலுவலகத்தில் உள்ளேன்.அங்கு ஒருவரிடம் கேட்டதற்கு உங்கள் தொலைபேசி எண் கொடுத்தார்கள் . நான் சரிங்க அய்யா நீங்கள் நேராக தாலுகா அலுவலகத்தில் இருந்து சிவன் கோவில் இருக்கும் எங்கள் பள்ளிக்கு வந்துவிடுங்கள் என்று சொன்னேன்.அதற்கு அவரோ ,நான் இப்போது காரைக்குடியில் உள்ளேன்.நீங்கள் எந்த சிவன்கோவில் சொல்கிறீர்கள் என்று கேட்டார்? அப்புறம்தான் தெரிந்தது ,அவர் விசாரித்தது காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் என்று.பிறகு நான் அவரிடம் , காரைக்குடியில் SBI  வங்கிக்கு சென்று நான் அனுப்பும் மெசேஜில் உள்ள வங்கி கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்புங்கள் என்று சொல்லி விட்டு உடனடியாக தகவலையும் அனுப்பி விட்டு எனது பணியை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.மதியம் சுமார் 1 மணியை போல்,சிவகங்கை விவேகானந்தா பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியாராகிய திரு.சீனுவாசன் அவர்களே என்னை மீண்டும் தொடர்பு கொண்டு,அய்யா நான்தான் பேசுகிறேன்.சுமார் 5000 ரூபாயை காரைக்குடி வங்கி கணக்கில் செலுத்தி விட்டேன்.பிறகு சாலையில் வரும்போது உதவி கலெக்டர் தலைமையில் ,கேரள வெள்ள நிவாரணத்திற்கு பொருள் வாங்கி கொண்டு இருந்தனர்.நானும் அருகில் சென்று ,உதவி ஆட்சியரை பார்த்து `,நான் அனுப்பிய பணம் தொடர்பாக தகவல் தெரிவித்தேன்.அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.பிறகு மேலும் உதவி பண்ண முடியும் என்றாலும் பண்ணுங்கள் என்று சொன்னார்கள்.உடனடியாக அவர்களுக்கு என்ன உதவி தேவை என்று கேட்டு ,சுமார் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள நாப்கின் கேட்டார்கள்,அதனையும் வாங்கி கொடுத்தேன்.அப்போது உதவி ஆட்சியர் அவர்கள் ,உங்கள் உதவிக்கு தலை வணங்குகிறேன் என்று சொன்னார்கள்.நான் அதற்கு ,இல்லையம்மா,கேரளா ,கடவுளின் சொர்க்கம் .அழகான ஊர்.எனவே நான் அந்த ஊருக்கு உதவ வேண்டும் என்று சொன்னேன்.நன்றி தெரிவித்து என்னை வழி அனுப்பி வைத்தார்கள்.மிகுந்த மன மகிழ்ச்சியுடன் பலவான்குடி வந்து சேர்ந்து விட்டேன்.நீங்கள் மகராசனாக இருக்க வேண்டும்.என்று தெளிவாக பதில் சொல்லி போனை வைத்தார்.
                                          எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.இவருக்கு காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் இருந்து நமது எண்ணை யார் கொடுத்து இருப்பார்கள் என்று .அப்புறம்தான் யோசித்தேன் .எங்கள் பள்ளி வழியாக பணம் அனுப்பி ரசீது வந்தபோது அதனில் எனது எண் இருந்தது .அதனை வைத்துதான் அய்யா அவர்கள் தொடர்பு கொண்டார் என்று அறிந்து கொண்டேன்.பள்ளி மற்றும் பொது தளங்களிலும் இதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது அறிந்து மகிழ்ச்சியே.சுமார் 70 வயதுக்கு மேல் இருந்தாலும் விட முயற்சியுடன் உதவி செய்த பெரியவருக்கு ஒரு சலுயூட் .(இவரை பாராட்ட : 8903532148)

நாளிதழின் ஆன்லைன் செய்தி பார்த்து தொடர்பு கொண்டு உதவியவர்கள் :
                                  பள்ளி மாணவர்களின் உண்டியல் சேமிப்பு வழியாக வெள்ள நிவாரண உதவி செய்த தகவலை இணையத்தில் படித்து விட்டு கோவை மாவட்டம் சூலூர் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு ,நாங்கள் தறி போடுகிறோம்.எங்கள் ஊர் சிறு கிராமம்  தான்.ஆனாலும் நாங்களும் ரூபாய் 500 விதம் அனைவரும் அனுப்ப வேண்டும்.அந்த ஆன்லைன் லிங்கை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டார்கள் உடனடியாக நானும் அவர்களுக்கு அந்த லிங்கை அனுப்பி வைத்தேன்.( இவரை பாராட்ட திரு.சுரேஷ் 9095020420)

ஆன்லைன் வழியாக பணம் அனுப்பிய அனுபவம் :
                                     சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் (ஓய்வு பெற்ற) தலைமை ஆசிரியர் திரு.மாதவன் அவர்களுக்கும் இரவு 10 மணிக்கு ரூபாய் 5000 த்தை ஆன்லைன் வழியாக அனுப்பி,அவருக்கு ரசீதும் எடுத்து கொடுத்தேன்.(இவரை பாராட்ட தொலைபேசி எண் :9443144779) )

                                    இது போன்ற நிகழ்வுகள் எனக்குள் ஒரு நல்ல மாற்றத்தை தொடர்ந்து ஏற்படுத்த உதவியாக உள்ளது.நன்றி.


லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம் 
chokklaingamhm@gmail.com









No comments:

Post a Comment