Tuesday 14 August 2018

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 




சுதந்திர தின விழா 
 
 தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.




  விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை  வகித்தார் .சுதந்திர  தினம் தொடர்பாக மாணவி நித்தியகல்யாணி ,அட்சயா ஆகியோரும்,ஆங்கிலத்தில் சுதந்திர தினம் தொடர்பாக நதியாவும் ,தேசபக்தி பாடலுக்கான நடனத்தை மாணவர்கள் திவ்யஸ்ரீ,ஜெயஸ்ரீ,சந்தோஷ்குமார்,கிருத்திகா ,சிரேகா ஆகியோரும் ,  பாரத மாத வேடம் அணிந்து மாணவி ஜனஸ்ரீ பாடலும் பாடினார்கள். தேவகோட்டை கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் ராதாகிருஷ்ணன் கொடி ஏற்றி பேசினார் .மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்   அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.விழா நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர  தின விழாவில் தேவகோட்டை கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் ராதாகிருஷ்னன் கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசுகளையும் ,கடலாய் மிட்டாய் இனிப்பையும் வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment