Monday 13 August 2018

 விளையாட்டாக அறிவியலை கற்றல் 
எளிய அறிவியல் சோதனைகள் 


 தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் செயல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

                                      நிகழ்விற்கு வந்தவர்களை மாணவி காயத்ரி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் அய்யப்பசாமி  மற்றும் அரங்குலவன்  ஆகியோர்அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள்  மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.நிகழ்வில் பருமன்,பரப்பளவு,கன அளவு,கொள்ளளவு,ஒழுங்கற்ற வடிவம்,விசையின் வகைகளான தொடுவிசை,உடலியக்க விசை,உராய்வு விசை,காந்த விசை,புவிஈர்ப்பு விசை போன்றவை தொடர்பான சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து கற்று கொண்டனர்.  நிறைவாக மாணவர் அய்யப்பன்   நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் விளையாட்டாக அறிவியல் கற்றல்   வாயிலாக மாணவர்கள் நேரடியாக அறிவியல் சோதனைகளை   செய்து கற்று கொண்டனர்.

No comments:

Post a Comment