முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பள்ளிகளில் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி
தேவகோட்டை - மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று தேசிய கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு ஆசிரியர்களும், மாணவர்களும் அஞ்சலி
செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை ஒட்டி 7 நாட்கள் அரசு முறை
துக்கம் அறிவித்ததையடுத்து இன்று காலை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும்
தனியார் பள்ளிகளில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
காலை 9.30 மணிக்கு பள்ளிகள் ஆரம்பித்தவுடன் கொடியேற்றி தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் அஞ்சலி
செலுத்தினர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட்டு ஆசிரியர்களும் மாணவர்களும்
அஞ்சலி செலுத்தினர்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட்டு மரியாதை செலுத்துகின்றனர்.
No comments:
Post a Comment