Thursday 16 August 2018

பிஞ்சுகளின் வெள்ள நிவாரணம் 

 கேரளா வெள்ள நிவாரணத்திற்கு  நடுநிலைப் பள்ளி மாணவர்களின் 
  உதவி






                            


தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக  பணம் அனுப்பினார்கள்.
                           
                                 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  கேரளாவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள செய்தியை பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விளக்கமாக கூறினார்.இதனை கேட்ட மாணவர்கள் தாங்கள் தினம்தோறும் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உண்டியலில் "சமுதாயத்திற்கு உதவவும் வகையில் பயன்படுத்தி கொள்வதற்காக இந்த காசை போடுகிறோம் "என்று கூறி போடும் காசை மொத்தமாக சேர்த்து கேரள வெள்ள நிதிக்கு கொடுப்பது என முடிவெடுத்தனர்.
                                 பள்ளி மாணவர்கள் தாங்கள் உண்டியலில் சேர்த்த தொகையை ரூபாய் 1000 த்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். மேலும் பள்ளி  தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து சுமார் 8000 ரூபாயை கேரளா முதல்வரின்   வெள்ள நிவாரண வங்கி கணக்கிற்கு பணமாக   ஆன்லைன் வழியாக அனுப்பி னார்கள் .கேரள அரசிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதற்கான ரசீதும் , கடிதமும் கேரள மாநிலத்தின் முதன்மை செயலரின் கையெழுத்துடன் உடனடியாக பள்ளி மாணவர்களின் பெயரில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்களும்,பேரனின் நோய் காக்க கஷ்டப்பட்ட பாட்டிக்கு  பள்ளி மாணவர்களின் ஈரமான உதவியாக 6000 ரூபாயும் அனுப்பப்பட்டு சமுதாய உதவி இப்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் மற்றும் தலைமை ஆசிரயர் ,ஆசிரியர்கள் கேரள முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்கு நேரடியாக ஆன்லைன் வழியாக பணத்தை   அனுப்பி பள்ளி மாணவர்களின் பெயரில் பெற்ற ரசீதுடன் மாணவர்கள் உள்ளனர்.

 நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியது   தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தது :
                                         எங்கள் பள்ளியில்    நாங்கள் தொடர்ந்து பல மாதங்களாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் உண்டியல் ஆசிரியர் செலவில் வாங்கி கொடுத்து அதனில் அவர்களால் முடிந்த காசை சமுதாயத்திற்கு உதவும் வகையில் கொடுக்கிறோம் என்கிற என்ணதோடு சேர்க்க சொல்லி வருகிறோம்.அடிக்கடி இவ்வாறு நல்ல சொற்களை சொல்லி காசு போடுவதால் மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கம் வருகிறது.மேலும் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும் வளருகிறது.பள்ளியில் உண்டியல் வைத்து சேமிக்க  ஆரம்பித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலும் உண்டியல் வைத்து சேமிக்க ஆரம்பித்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
                                  கேரளா வெள்ளம் பாதிப்பு தொடர்பான செய்தியை மாணவர்களிடம் காலை வழிபாட்டு கூட்டத்தில் வாசித்து காண்பித்தோம்.அப்போது மாணவர்கள் வந்து தங்களது கருத்துக்களை சொல்லும்போது, பிஞ்சு குழந்தைகள் முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை சேர்க்கும் உண்டியல் சேமிப்பை சமுதாய நோக்கத்தோடு கொடுத்து உதவுவோம் என்றனர்.உடனே மாணவர்களின் முடிவு படி உண்டியல் பணத்தை ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை என்ன செய்து அதிலிருந்து கிடைத்த  1000 ரூபாயுடன்ஆசிரியர்கள் மற்றும் எனது பங்களிப்புடன் ரூபாய் 8,000 த்துக்கான பணத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதி அனுப்பும் போர்டல் வழியாக ஆன்லைனில் அனுப்பினோம்.கேரள மாநில முதன்மை செயலரின் கையெழுத்துடன் பணம் அனுப்பியதற்கான ரசீது பள்ளி மற்றும் மாணவர்களின் பெயரில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கேரள அரசின் திருவனந்தபுரம் வங்கி கணக்கிற்கும்,ஆன்லைன் வழியாக கேரள அரசின் போர்டல் வழியாக சென்று அனுப்பும் பணத்திற்கும், பணம் அனுப்பும் அனைவருக்கும் வருமான வரி கழிவு பெற்றுக்கொள்ளலாம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்களும்,பேரனின் நோய் காக்க கஷ்டப்பட்ட பாட்டிக்கு  பள்ளி மாணவர்களின் ஈரமான உதவியாக 6000 ரூபாயும் அனுப்பப்பட்டு சமுதாய உதவி இப்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இது போன்று நல்ல செயல்பாடுகள் இந்த சிறு வயதில் வந்தால் அது மாணவர்களுக்கு வரும் காலத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.சமுதாயத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.என்று கூறினார் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.


நீங்களும் கேரள வெள்ள நிவாரணத்திற்கு  உங்களின் ஈரமான உதவியை செய்ய  கேரள அரசின் கீழ்கண்ட வங்கி எண்ணுக்கு பணமாக செலுத்தியும் ,ஆன்லைன் போர்டல் வழியாகவும் சென்று உதவலாம்.

நேரடியாக பணம் அனுப்ப இந்த லிங்க் வழியாக சென்றால் DONATE ONLINE என்பது வழியாக சென்று பணம் செலுத்தினால் 
( NET BANKING வழியாகவும்,டெபிட் கார்டு ,கிரெடிட் கார்டு வழியாகவும் பணம் செலுத்தலாம்.சில மணி துளிகள் தான்.நாம் கட்டிய பணத்துக்கு ரசீது வந்து விடுகிறது.


http://www.cmdrf.kerala.gov.in/

Other Donation Options

BANK TRANSFER
Bank : State Bank of India (SBI)
Account Number : 67319948232
Branch : City Branch, Thiruvananthapuram
IFSC : SBIN0070028
PAN: AAAGD0584M
Account Type: Savings
SWIFT CODE : SBININBBT08  
Name of Donee:
Chief Ministers Distress Relief Fund
Address :Govt of Kerala
District: Thiruvananthapuram
State Kerala
Pin 695001
CHEQUE/ DEMAND DRAFT
The Principal Secretary (Finance), Treasurer,
Chief Minister's Distress Relief Fund,
Secretariat, Thiruvananthapuram - 695001

No comments:

Post a Comment