Monday, 16 April 2018

கல்வி உதவி தொகை வழங்குதல் 



தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
                                   விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள் வவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கனரா வங்கியின் கனரா வித்ய ஜோதி என்கிற கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் காவியா, சந்தியா,ஸ்ரேகா ,கீர்த்தியா ஆகிய நான்கு பேருக்கும் சேர்த்து மொத்தம் 12,500 ரூபாய் வழங்கப்பட்டது.உதவி தொகை வழங்க ஆவண செய்த கனரா வங்கி கிளை மேலாளர் ராதாகிருஷ்னன் மற்றும்  உதவியாளர் பாலமுருகன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.நிறைவாக மாணவர் நந்தகுமார் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கனரா வங்கியின் கனரா வித்ய ஜோதி திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகைக்கான வங்கி புத்தகத்தை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவிகளிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment