சத்தியம் கேட்ட இணை ஆணையாளர்
குடும்பத்தை காப்பாற்றும் பெண்களுக்கு கல்வி அவசியம்
வருமான வரித்துறை இணை ஆணையாளர் பேச்சு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வருமான வரித்துறை இணை ஆணையாளர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
கலந்துரையாடல் நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.காரைக்குடி சரக வருமான வரித்துறை ஆய்வாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார்.வருமான வரித்துறை இணை ஆணையாளர் ஜமுனா தேவி தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசும்போது, குடும்பத்தை கையில் தாங்கி காப்பாற்றுவது பெண்கள்தான்.பெண்களுக்கு கல்வி அவசியம்.நீங்கள் அனைவரும் உங்கள் குறிக்கோளை அடைவீர்கள் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் என்று கேட்டார்.மாணவர்களும் தங்களின் குறிக்கோளை அடைவோம் என்று சத்தியம் செய்தனர்.கல்வி இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற இயலும் என்றும் பேசினார்.இந்திய அரசின் எரிசக்தி துறையின் சார்பில் எரிசக்தியை சேமிப்போம்,சுற்று சூழலை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் பங்கு பெற்று பள்ளி அளவில் எ மற்றும் பி பிரிவில் முதலிடம் பிடித்த கிஷோர்குமார் ,காயத்ரி ,இரண்டாம் இடம் பிடித்த ஐயப்பன்,ஹரிஹரன் ஆகியோருக்கும் ,பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசின் சான்றிதழை இணை ஆணையாளர் வழங்கினார்.ஐந்தாம் ஆண்டாக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து இப்போட்டிகளில் பங்கு பெற்று மத்திய அரசின் சான்றிதழை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வருமான வரி துறையின் இணை ஆணையாளர் இந்திய அரசின் எரிசக்தி துறையின் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.உடன் ஆய்வாளர் பத்மாவதி,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.

No comments:
Post a Comment