Wednesday 18 April 2018


தேவகோட்டை  நடு நிலை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா 

இந்த பள்ளியினை விட்டு போவதற்கு எனக்கு அழுகையை இருக்கு - எட்டாம் வகுப்பு மாணவியின் கண்ணீர் பேச்சு





அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள் - கல்லூரி முதல்வர் பேச்சு


எட்டாம் வகுப்பில் 42 சான்றிதழை வைத்துள்ளேன் - மாணவரின் பெருமையான பேச்சு



தேவகோட்டை ​ ​ - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக இவ்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
                                                 ஒளி ஏற்றுதல் விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக ஏழாம்  வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.ஐந்தாம் வகுப்பு மாணவி சந்தியா  ஆங்கிலத்தில் அனைவரையும் வரவேற்றார்.மாணவிகளின்   அபிராமி அந்தாதி,திருக்குறள் நடனம் நடைபெற்றது.விழாவிற்கு தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கினார் .மாணவியர் கல்விகடவுள் சரஸ்வதியை வணங்க  பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை தொடர்ச்சியாக எட்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.எட்டாம்  வகுப்பு மாணவி உமாமகேஸ்வரி   உறுதி மொழி வாசிக்க எட்டாம்  வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு தீப  ஒளியை  ஏழாம்  வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க அவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில்  மாணவி காயத்ரி ஏற்புரை வழங்கினார்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்    நன்றி கூறினார்.விழாவில் மாணவ,மாணவியரின் நாடகம்,திருக்குறள் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ ,மாணவியர் பிரியா விடை பெறும் விழாவில்  ஒளி ஏற்றி 7ம் வகுப்பு மாணவ ,மாணவிகளிடம் வழங்கினார்கள்.








மேலும் விரிவாக :

இந்த பள்ளியினை விட்டு போவதற்கு எனக்கு அழுகையை இருக்கு - எட்டாம் வகுப்பு மாணவியின் கண்ணீர் பேச்சு

அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள் - கல்லூரி முதல்வர் பேச்சு


எட்டாம் வகுப்பில் 42 சான்றிதழை வைத்துள்ளேன் - மாணவரின் பெருமையான பேச்சு



தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா 


தேவகோட்டை ​ ​ - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக இந்த ஒளி ஏற்றுதல் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தீப ஒளி ஏற்றுதல்
                                                 ஒளி ஏற்றுதல் விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக 7ம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.சுப நிகழ்ச்சியின் ஆரம்பமாக கடவுளை நினைத்தல் என்பது மரபு.அவ்வண்ணம் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி சந்தியா  தனக்கே உரிய மெல்லிய குரலில் அபிராமி அந்தாதி பாடினார்.நிகழ்ச்சி தொடங்கியது.வந்தோரை இன்முகத்துடன் வாழ்த்துவது தமிழர் பண்பாடு.அதனை செம்மைபடுத்தி ஏழாம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன்  சர்வ சமய வாழ்த்துக்கள் பாடலை பாடினார்.திருவண்ணாமலை என்றாலே நம் நினைவிற்கு வருவது தீபம் தான்.அதனை நினைவு கூறும் விதத்திலும்,எட்டாம் வகுப்பு படித்து  
பிரியா விடை கொடுக்கும் மாணவியர் கல்விகடவுள் சரஸ்வதியை வணங்கி பள்ளி தலைமை ஆசிரியர்   லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் உதவியுடன் கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.8ம் வகுப்பு மாணவி உமாமகேஸ்வரி  உறுதி மொழி வாசிக்க 8ம் வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு ஒளியை அப்படியே அந்த பாரம்பரியம் மாறாமல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுத்தனர்.7ம் வகுப்பு மாணவர்கள் தீபத்தை வங்கி கொண்டனர்.7ம்வகுப்பு மாணவர்கள் சார்பில் 7ம் வகுப்பு மாணவி காயத்ரி  ஏற்புரை வழங்கினார்.பாரம்பரிய மிக்க இந்த நிகழ்ச்சியி சிறப்பாக நடைபெற்றது.வந்திருந்த பெற்றோரும்,8ம் வகுப்பு மாணவ,மாணவியரும் பிரியா விடை நிகழ்ச்சியான ஒளி ஏற்று விழாவில் கண் கலங்கினர்.
                                                விழா தொடங்கியது.பள்ளி தலைமை ஆசிரியர்            லெ .சொக்கலிங்கம் தலைமை தங்கினார்.சிறப்பு விருந்தினர் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.8ம் வகுப்பு மாணவன் ரஞ்சித் ஆங்கிலத்தில் அனைவரையும் வரவேற்றார்.7ம் வகுப்பு மாணவி நித்திய கல்யாணி பள்ளியில் கடந்த ஓராண்டு காலத்தில் நடந்த நிகழ்சிகள் குறித்து ஆங்கிலத்திலும் ,5ம் வகுப்பு மாணவி சந்தியா  அழகிய தமிழிலும் பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் முழ்க வைத்தனர்.

 அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள்


                                 சிறப்பு விருத்தினர் சந்திரமோகன்  மாணவர்களிடையே கலந்துரையாடல் நடத்தினார்.அவர் பேசுகையில்,நாம் எல்லா விஷயங்களையும் எட்டி பிடிக்க முடியும்.இது விந்தை உலகம்.பருப்பு வடையை வைத்து எலியை பிடிப்பது போல ஆசிரியர் நடத்தும் பாடத்தை மட்டும் படிப்பது சிறந்த செயலாகாது .மெய்,வாய்,கண்,மூக்கு ,செவி,மனம் இவைகளை ஒருங்கினைத்தலே ஆறறிவாகும்.எந்த ஒரு செயல் செய்யும் பொழுதும் திட்டமிடல் அவசியம்.மண்ணில் பிறந்த நாம் உலகில் ஏதேனும் சாதிக்க வேண்டும் .கல்வியில் சிறந்து விளங்குவது என்பது மட்டும் போதாது.அனுபவ அறிவும் அவசியம்.அறிவை தேடி நாம் ஓடிகொண்டே இருக்க வேண்டும்.நூலகங்குளுக்கு சென்று அறிய வகை புத்தங்களை            படிக்கபழகி க்கொள்ளவேண்டும் .ஆங்கில ஏடுகளை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் .ஆங்கில அகராதியை படிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு மூன்று வார்த்தைகள் வீதம் ஒரு மாதத்திற்கு 90 வார்த்தைகள் படித்து விடலாம்.சிறு வயதில் கனவு பெரிதாக இருக்க வேண்டும்.அப்துல் கலாம் அறிவுறுத்துவது இதைத்தான் அறிவுறுத்துகிறார்.ஏன் ,எதற்கு என்று சிந்திக்க வேண்டும்.எந்த ஒரு செயல் செய்தாலும் செய்தவருக்கு நன்றி சொல்லுங்கள்.நீங்கள் படித்த பள்ளி,உங்கள் பெற்றோர்,உடன் படிக்கும் மாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள்.நன்றி செல்லும்போதுதான் அந்த செயல் முழுமையடைகிறது .என்று பேசினார்.


நானும் இந்த ஆண்டுடன் பிரியா விடை பெறுகிறேன்
                                       கடந்த 37 ஆண்டுகள் பணி  முடித்து நானும் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுகிறேன்.இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில்  இந்த நிகழ்வில் பங்கேற்றதில் எனக்கு மிகுந்த சந்தோசம்.ஓய்வு பெறுவதற்கான பாராட்டு விழாவில் இந்த பிரியா விடை நிகழ்ச்சியைத்தான் நான் பெருமையாக எண்ணுகிறேன்.உங்களுடன் சேர்ந்து நானும் பிரியா விடை பெறுவதை எனது வாழக்கையில் மிகுந்த மறக்க முடியாத நிகழ்வாக எண்ணுகிறேன் என்று பேசினார்.கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பிரிந்து செல்லும்போது கண்ணீர் விட்டு பேசுவார்கள்.ஆனால் எட்டாம் வகுப்பு மாணவிகள் பள்ளியின் செயல்பாடுகளை எண்ணியும் ,பள்ளியை விட்டு செல்ல உள்ளது எங்களுக்கு அழுகையாக இருக்கிறது என்று சொல்லி ஆனந்த கண்ணீர் வழிவது எனக்கு மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.என்று பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள்  செய்திருந்தார்.

 விழாவில் கண்கலங்க வைத்த நிகழ்வுகள் :

 இந்த பள்ளியினை விட்டு போவதற்கு எனக்கு அழுகையை இருக்கு - எட்டாம் வகுப்பு மாணவி சின்னம்மாள்  கண்ணீர் பேச்சு

8ம் வகுப்பு மாணவி சின்னம்மாள் : நான் ஆறாம் வகுப்பு வரை முன்பு படித்த பள்ளியில் எந்த போட்டியிலும் பங்கேற்றது கிடையாது.ஏழாம் வகுப்பில் இந்த பள்ளிக்கு வந்த பிறகு இங்கு தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களின் தொடர்ந்த தூண்டுதல் காரணமாக அனைத்து போட்டிகளிலும் பங்குஎடுத்து 20 சான்றிதழ்கள் வைத்து உள்ளேன்.சேவுகன் அண்ணாமலை கல்லூரிக்கு களப்பயணம் போனதால் கண்டிப்பாக கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.எனக்கு இந்த பள்ளியை விட்டு போகவேண்டும் என்று எண்ணும்போது அழுகையை வருகிறது.மனசே இல்லை என்று அழுதபடியே கண்ணீர் மல்க சென்றார்.

42 சான்றிதழ்கள் பெற்று அசத்திய மாணவர் ரஞ்சித் சொல்வதை  கேளுங்கள் :

8ம் வகுப்பு மாணவர் ரஞ்சித் : இந்த பள்ளியில் நான் ஒன்றாம் வகுப்பு முதல் படித்து வருகிறேன்.பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சுமார் 42 சான்றிதழை வைத்துள்ளேன்.இது எனக்கு பெருமையாக உள்ளது.வங்கிக்கு சென்றது,ரூபாய் 10இல் வங்கி கணக்கு துவங்கியது என அனைத்துமே எனக்கு பெரிய விசயமாக உள்ளது.

ஐ .நா.சபை போட்டிகளில் பங்கு பெற்று பதக்கம் பெற்றது பெருமை என சொல்லும் மாணவி காவியா :

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் வந்து 6ம் வகுப்பு சேர்ந்தேன்.அஞ்சல் அலுவலகம்,அரசு தோட்டக்கலை பண்ணை,காவல் நிலையம் என அனைத்து இடங்களுக்கும் நேரடியாக களப்பயணம் சென்று வந்துள்ளேன்.இதன் மூலம் எனக்கு பல்வேறு வாழ்க்கை அனுபவங்கள் பெற்று உள்ளேன்.மூன்று ஆண்டு காலத்தில் திருச்சி,மதுரை,சென்னை என அனைத்து ஊர்களில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்று 21 சான்றிதழ்களை பெற்று உள்ளேன்.சென்னையில் ஐ.நா.சபை மூலம் நடைபெற்ற அறிவியல் தொடர்பான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றது எனது வாழ்நாளில் மறக்க இயலாத நினைவாகும். எனது தாயார் கூலி வேலை பார்ப்பதால் சென்னை வரை என்னை அழைத்து செல்ல இயலாத நிலையில் பள்ளியில் ஆசிரியை மூலமாக என்னை சென்னை அழைத்து சென்று இந்த போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கை கல்வியை கற்றுக்கொடுத்த பள்ளி 

எட்டாம் வகுப்பு மாணவி உமாமகேஸ்வரி : இந்த பள்ளியில் நான் சேர்ந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.வங்கி ,வேளாண்மை கல்லூரி,மதுரை வானொலி நிலையம் சென்றது,வானொலி நிலையம் நிகழ்ச்சியில் பங்கேற்றது,திருச்சி அண்ணா கோளரங்க போட்டிகளில் பங்குபெற்றது என அனைத்துமே எனக்கு மறக்க முடியாத நிகழ்வு.நான்கு ஐ.எ .எஸ்.,ஐந்து ஐ.ஆர்.எஸ்.என அனைவரிடமும் கேள்விகள் கேட்டது,அவர்களை சந்தித்தது,பல்வேறு நாடுகளில் இருந்து பல நிலைகளில் உள்ளவர்களுடன் கலந்துரையாடல் செய்தது என அனைத்துமே அருமை.நான் படித்த இந்த பள்ளியில் நல்ல குடிமகளாக உருவாகி மீண்டும் வந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கு கொள்வேன் என்று நம்பிக்கையுடன் செல்கின்றேன்.என்று பேசினார்.


அக்காக்களை பிரிவது எண்ணி அழுகையாக வருகிறது :

ஏழாம் வகுப்பு மாணவிகள் காயத்ரி,நித்திய கல்யாணி ஆகியோர் எட்டாம் வகுப்பு மாணவிகளை பிரிவது தொடர்பாக பேசியதாவது :
                                    எங்களுக்கு எங்கள் சொந்த அக்கா எட்டாம் வகுப்பு முடித்து செல்லும்போது ஐந்தாம் வகுப்பு படித்ததால் அப்போது ஒன்றும் தெரியவில்லை.ஆனால் இப்போது இவர்கள் எங்களை விட்டு வேறு பள்ளிக்கு பிரிந்து செல்வது எங்களுக்கு அழுகையாக வருகிறது.எங்களுக்கு பல விதங்களில் முன்னோடியாக இருந்த அக்காக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று கண்ணீர் மல்க பேசினார்கள்.


பட விளக்கம் :1)  தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ ,மாணவியர் விடை பெறும் நிகழ்ச்சியில் ஒளி ஏற்றி 7ம் வகுப்பு மாணவிகளிடம் வழங்கிய பொது எடுத்த படம்.
                              

No comments:

Post a Comment