Monday 2 April 2018

 உலகின் அனைத்து செயல்பாடுகளையும் 
அறிவியல் கண்ணோட்டத்தோடு பாருங்கள் 

அண்ணா கோளரங்க திட்ட இயக்குனர் பேச்சு 
 
ராக்கெட் செயல்படும் விதம் எப்படி ? நேரடி செயல் விளக்கம் 

வெற்றிடத்தை காற்று அடைத்து கொள்வது எப்படி ?




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல்  நேரடி செயல் முறை விளக்கம் நடைபெற்றது.
                                    நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி ஆசியரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.திருச்சி அண்ணா கோளரங்க திட்ட இயக்குனர் (பொறுப்பு ) லெனின் தமிழ் கோவன் மாணவர்களுக்கு முடுக்கம்,மூலக்கூறுகள்,வெற்றிடத்தை காற்று எவ்வாறு அடைத்து கொள்ளும்,ஒத்ததிர்வு ,ராக்கெட் எவ்வாறு செயல்படும் என்பது தொடர்பான நியூட்டன் முதல் விதி விளக்கம் ,ஒலி அதிர்வால் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை நேரடி செயல்பாடுகள் மூலம் விளக்கி கூறி செய்து காண்பித்தார்.மாணவர்கள் ராஜேஷ்,பரத்,நித்யகல்யாணி ,ஜெயஸ்ரீ,ஜனஸ்ரீ ,கிஷோர்குமார்,சுந்தரேசன் ஆகியோர் நேரடியாக செய்து பார்த்து கற்றுக்கொண்டனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருச்சி அண்ணா கோளரங்க திட்ட இயக்குனர் (பொறுப்பு ) லெனின் தமிழ் கோவன் அறிவியல் தொடர்பான செயல்பாடுகளை செய்து காண்பித்து விளக்கினார்.

No comments:

Post a Comment