Tuesday, 3 April 2018

பதக்கம்  பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

அறிவியல் போட்டிகளில் பங்கேற்றல்

 பெற்றோருடன் முதன் முறையாக திருச்சி சென்று போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள்

அண்ணா அறிவியல் கோளரங்கம் -திருச்சி சென்று வந்த மாணவர்கள்



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருச்சி அண்ணா கோளரங்கத்தில் நடைபெற்ற அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


                                           தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதன் முறையாக பெற்றோருடன் திருச்சி அண்ணா கோளரங்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனர்.திருச்சி அண்ணா கோளரங்கம் சார்பில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.அனைவருக்கும் அறிவியல் என்கிற தலைப்பில் இப்போட்டிகளில் பங்கேற்க தேவகோட்டையிலிருந்து சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  உமாமகேஸ்வரி, கிஷோர்குமார்,நித்ய கல்யாணி,சக்திவேல் ஆகியோரை திருச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழிகாட்டுதல் படி பெற்றோர்கள் அழைத்து சென்று வந்தனர்.பங்கேற்ற மாணவர்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளியில் இருந்து  இப்பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.கட்டுரை போட்டியில் உமா மகேஸ்வரியும் ,ஓவிய போட்டியில் நித்யா கல்யாணியும் வெற்றி பெற்று பதக்கமும் ,பாராட்டு சான்றிதழும் பெற்றனர்.இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் ,மாணவர்கள் பாராட்டினார்கள்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருச்சி அண்ணா கோளரங்கத்தில் நடைபெற்ற அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment