Friday, 19 June 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

மாவட்ட கல்வி அதிகாரி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

                                      தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணியாற்றி தேனி முதன்மை கல்வி அலுவலராக ஓய்வுபெற்ற மாரிமுத்து அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 



                 இன்று 8/ 8 /2016 இப்பள்ளியில் கவிதை போட்டிக்கு தலைமை ஏற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுகின்ற  ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. நல்ல ஆரோக்கியமான பள்ளி ஆசிரியர்கள், மதிப்பிற்குரிய தலைமையாசிரியரின் தலைமையின் கீழ் சமூக அக்கறையோடும், கடமை  பொறுப்போடும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். தலைமையாசிரியர் மிகச் சிறந்த தலைமை பொறுப்புடன், மாணவர்களுடன் அக்கறையோடும் பணியாற்றி வருகின்றார். கற்பித்த  நவீன யுக்திகளை கையாண்டு பாடங்கள் போதிப்பது மிகச்சிறப்பாகும் . அரசின் நோக்கம், திட்டங்கள் ஆகியவற்றினை நிறைவேற்றுவதில் தலைமையாசிரியர் சிறப்பாக செயல்படுகின்றார்.

 மாரிமுத்து 
DEO,
DVK.

                             இன்று இப்பள்ளியில் பசுமைப்படை விழா நடைபெற்றது. எதிர்கால தேவையை மாணவர்கள் நன்கு உணர்ந்து இருக்கின்றார்கள். நம்பிக்கையை உணர்ந்த சிறந்த தலைவர் எதையும் சாதிக்கலாம் என்ற நோக்கம் உள்ள தலைமை ஆசிரியரின் சிறந்த செயல்பாடு பாராட்டுக்குரியது. நன்றி. 

 மாரிமுத்து 
DEO,
DVK. 



Tuesday, 16 June 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆய்வாளர் அவர்களுடனான  பள்ளி பகிர்வுகள்

          
               இன்று 1 / 11 / 2019 ம் தேதி சிவகங்கை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் (மு.குமாரவேல்) ஆகிய நான் இந்த வருடத்தின் உடைய ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அறிவிக்கப்படுவதை முன்னிட்டு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சொக்கலிங்கம் அவர்களின் முன்னிலையில் மாணவர்களிடையே லஞ்சம் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உரையாற்றினேன்.  இப்பள்ளியின் சிறப்பு என்னவெனில் ஒரு விழாவினை முறையாக துவக்கி இறுதியில் மாணவர்கள் புரிந்து கொண்டுள்ள விஷயங்களை எந்த அளவிற்கு மாணவர்கள் தன்னுள் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டார்கள் என்பதனை காணும் விதமாக இறுதியாக  ஃபீட்பேக் செஷன்  என்பதில் மாணவர்களை பேச  வைத்தபோது  அவர்கள் உள்வாங்கிய விவரங்களை வெளிப்படுத்திய விதங்களை பார்த்து வியந்துபோனேன். இந்த அளவிற்கு  மாணவர்களை தயார் படுத்தி வைத்துள்ள இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்களின்  பணியானது உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கதாகும். இதுபோன்ற மாணவர்களின் செயல் திறனை  அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் உங்கள் அனைவருக்கும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

மு.குமாரவேல்,
 இன்ஸ்பெக்டர்,
 விஜிலன்ஸ்,
 சிவகங்கை.

Sunday, 14 June 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

கல்பாக்கம் அணு விஞ்ஞானி ஜலஜா மதன்மோகன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

Jalaja Madan Mohan,
Head TCPAS 
KPKM
IGCAR 

                This was On Interesting experience. Intracting with the future scientisst of this country was truly enjoyable and are learning experience to me. I wish all of them great future 
Best Wishes

Jalaja, Madan.


Friday, 12 June 2020

கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க!


கோடை பண்பலை 100.5ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் 



Thursday, 11 June 2020

கேளுங்க , கேளுங்க நாளைக்கு  காலையில் 10 மணிக்கு கேளுங்க 
 
இறையன்பு IAS அவர்களுடனான அனுபவ பகிர்வு

கோடை பண்பலை 100.5 ல் கேட்டு மகிழுங்கள் 
 
நாள் : 12/06/2020


நேரம் : காலை  சரியாக10.00 AM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!

கோடை FM  வானொலியில்
வெளியே வராத வெளிச்சங்கள்
நிகழ்ச்சியில் ஆளுமைகளுடனான அனுபவங்கள் தலைப்பில் தமிழக அரசின் செயலர் பதவியில் உள்ள இறையன்பு IAS அவர்களுடனான எனது அனுபவம் பேட்டியாக  ஒலிபரப்பாக உள்ளது.



 




Wednesday, 10 June 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

திரைப்பட துறை உதவி இயக்குனர் கரு. அண்ணாமலை மற்றும் பெங்களூருவைச் சார்ந்த கற்பனை புகைப்படக்கலைஞர் ஜெயக்குமார் வெங்கடேசன் ஆகியோருடனான பள்ளி பகிர்வுகள் 

                                   இன்று புகைப்படம் எடுப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. எல்லா மாணவர்களும் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர் . தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் மிகுந்த அன்போடு மாணவர்களுக்கு பல கலைகளை கற்றுக் கொடுப்பது மிகவும் பாராட்டுதற்குரியது.

கரு. அண்ணாமலை 
ஜெயக்குமார் வெங்கடேசன் 
சுப்பிரமணியன்




Tuesday, 9 June 2020

மத்திய அரசு நடத்திய  ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு 
ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்விற்காக இணைய வழியில் நடைபெற்ற ஓவிய போட்டி