வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி
நம் பள்ளியில் படிக்கும்போதே ஓட்டுரிமை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்
சப் கலெக்டர் பள்ளி மாணவர்களிடம் பேச்சு
வாக்காளர் தின ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு சப் கலெக்டர் பரிசு வழங்குதல்
மாணவிகளுடன் மாணவர்களும் வாக்காளர் விழிப்புணர்வு கோலம் போட்டு அசத்தல்
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கோலப்போட்டிகளுடன் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது .
இப்பள்ளியில் தொடர்ந்து பதிமூன்றாவது ஆண்டாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் தேவகோட்டை வட்டாட்சியர் சேது நம்பு, சிறப்பு வட்டாட்சியர் ஜெயநிர்மலா , பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் . ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார் .தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி மாணவர்கள் அனைவரும் உங்கள் அண்ணன் அக்காவிடம் கூறி வாக்களிக்க சொல்லுங்கள்.
வாக்காளர் என்பது 18 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
நம்முடைய வகுப்பில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் ஆசிரியர் தான் முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள்.
மாணவர்கள் அனைவரும் சேர்ந்து வகுப்பில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் மாணவர்கள் அதிகமாக யார் பெயரை தேர்ந்தெடுக்கிறார்களோ , அவர்கள்தான் அந்த வகுப்பின் தலைவர்.
நம் நாட்டிற்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது மக்கள்தான். மக்களாகிய நாம் அனைவரும் ஓட்டு போட்டால் தான் நம் நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.
நாம் நல்ல தலைவரை தேர்ந்தெடுத்தால் தான் நமக்கு நல்லது செய்வார்கள். மின்வசதி, குடிநீர் வசதி இன்னும் நிறைய வசதிகளை செய்து கொடுப்பார்கள்.
சாதி மத பேதமில்லாமல் வாக்களிக்க வேண்டும். முக்கியமாக பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்.
நம் பள்ளியில் படிக்கும்போதே ஓட்டுரிமை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நமக்கு 18 வயது வந்த பிறகு நாம் வாக்களித்து நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் தேசிய வாக்காளர் தினம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகின்றது. .அதற்கு உங்கள் பள்ளிக்கு பாராட்டுகள் .
நீங்கள் பள்ளியில் வரைந்திருந்த கோலங்களும், ஓவியங்களும் மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். என்று கூறினார்.
முன்னதாக வாக்காளர் உறுதி மொழியை தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் உட்பட மாணவர்களும் ,ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்வில் தேவகோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் சிவக்குமார் உட்பட ஏராளமான பெற்றோர்களும் பங்கேற்றனர்.
வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கவிதை,பேச்சு போட்டியில் மாணவிகள் நந்தனா, ரித்திகா ஆகியோர் பரிசு பெற்றனர்.
ரங்கோலி போட்டியில் மாணவிகளுடன் மாணவர்களும் கோலம் வரைந்து அசத்தினார்கள்.சுமார் 25-க்கும் மேற்பட்ட கோலங்கள் போடப்பட்டன. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
படவிளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழாவில் தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமை தாங்கி ரங்கோலி,கவிதை,பேச்சு மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். தேவகோட்டை வட்டாட்சியர் சேது நம்பு, சிறப்பு வட்டாட்சியர் ஜெயநிர்மலா , பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .ஏராளமான மாணவர்களும்,மாணவிகளும் கோலப்போட்டியில் பங்கேற்று வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தார்கள்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=YEI_VaCT0K4
https://www.youtube.com/watch?v=5Qv2AahDDS0
https://www.youtube.com/watch?v=9Xi30GkPPyU
No comments:
Post a Comment