ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், மாணர்கள் விவேகானந்தர் கூறியவற்றை பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
நல்ல விசயங்களை இளம் வயது முதலே வாழ்க்கையில் கற்று கொண்டு அதனை பின்பற்ற பழகி கொள்ள வேண்டும்.சுவாமி விவேகானந்தர் எல்லோரையும் நேசித்தார்.
அவருடைய முதல் உரையாடல் வெளிநாட்டில் நடைபெற்றபோது சகோதர, சகோதரிகளே என்று பேசினார். அவர் இந்தியாவில் மட்டுமல்ல ,வெளிநாட்டில் வாழும் மக்களையும் சகோதர, சகோதரிகளாக நினைத்தார்.
அவர் ஒரு தெய்வீக மனிதர். அதனால்தான் சுவாமி விவேகானந்தர் என்று அழைக்கிறோம். அவர் புனித தன்மை வாய்ந்தவர்.
பரந்த மனப்பான்மை கொண்டவராக ஒரு சுவாமியாக விளங்கினார். எனவே அவருடைய பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவது சிறப்பு வாய்ந்தது.
இளைஞர்கள் வீரத்தோடு, துணிவோடு, பண்போடு வாழ வேண்டும். விவேகத்துடன் வாழ வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும்.என்று வலியுறுத்தியவர்.
குழந்தைப் பருவத்திலிருந்து இளைஞர் பருவத்திற்கு செல்ல வேண்டும் என்றால், நம்முடைய திறமைகளை நாம் வெளியே கொண்டுவர வேண்டும்.
நம்முடைய திறமைகளை ஆசிரியரிடம் கூறினால் அதற்கு அவர்கள் வழி காட்டுவார்கள். எதிர்காலத்தில் விவேகானந்தர் எதிர்பார்க்கும் இளைஞர்களில் ஒருவராக நீங்களும் வரவேண்டும்.
உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். நீங்கள் நாட்டையே மாற்றக்கூடிய ஒரு சக்தியாக மாறி நாட்டையே மாற்றலாம் என்று பேசினார். என்றார்.
விழாவில் விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற ரித்திகா,நந்தனா,ஜெயகாந்தன்,பிரணவி ,ஜெபிகா , நித்திஷா , ஹாஷினி,அஜய் ஆகியோர்க்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவ,மாணவியர் ஆர்வமுடன் விவேகானந்தர் பொன்மொழிகளை எடுத்துக்கூறினார்கள். மழலை மொழியில் மாணவர்கள் பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.நிறைவாக ஆசிரியை வள்ளிமயில் நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பரிசுகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=xrKqBcF34h4
https://www.youtube.com/watch?v=l3SkBQI1MlM
No comments:
Post a Comment