Tuesday, 20 January 2026

 மன ரீதியாக நன்றாக இருப்பதே ஆரோக்கியம் 

அரசு மருத்துவர் அறிவுரை 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் ஆரோக்கியம்  தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். 

                                  ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்  கெவின் ஆபிரகாம்  மாணவர்களுக்கு விரிவான மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கூறினார். 

                                     கண்ணங்குடி அரசு மருத்துவர்  யாழிசை  ,கண் மருத்துவ அலுவலர் மகேஸ்வரி ,செவிலியர் உமாமகேஸ்வரி , மருந்தாளுனர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். 

                                   அரசு மருத்துவர் கெவின் ஆபிரகாம் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் கூறினார். அவர் மாணவர்களிடம் பேசுகையில், 

                   ஆரோக்கியம் என்றால் எந்த நோயும் இல்லாமல் இருப்பது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் மன ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

                                  உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதோடு சமூகத்துடனும் ஒத்துப் போகவேண்டும். நம் உடல் இங்கேயேதான் இருக்கும். நம்முடைய மனது வேறு எதையோ நினைக்கும்.

                              எடுத்துக்காட்டாக ஆசிரியர் பாடம் நடத்தும் போது வீட்டின் நினைப்பு வரும். அம்மா என்ன சமையல் செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைப்பு  ஓடும். நாம் நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்த யோகா செய்ய வேண்டும். தினமும் காலையில் உட்கார்ந்து  மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

                                  நாம் யாருடனும் சண்டை போடாமல் அன்பாக இருக்கவேண்டும். சில மாணவர்கள் சொல்வார்கள் இவன் யாரிடமும் பேச மாட்டான், சண்டை போடுவான் என்று சொல்வார்கள். அப்படி என்றால் அந்த மாணவர்  மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம். 

                                                      நாம் தினமும் இரவில் 7 மணி நேரம் தூங்கவேண்டும்.  இரவு ஒன்பதரைக்கு தூங்க சென்று விடவேண்டும். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும். 

                                    காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். மேலும் கீழும் டூத் பிரஷ் படுமாறு பற்களை நன்றாக விளக்கவேண்டும். அப்பொழுதுதான் பற்களில் மாட்டியிருக்கும் துகள்கள் வெளியே வரும். 

                            பற்களை ஒழுங்காக பாதுகாக்காவிட்டால் கிருமிகள் அதிகமாகி பூச்சி பற்கள்  வந்துவிடும். 6 முதல் 12 வயது வரை உள்ள பற்கள் பால் பற்கள். அதற்கு மேல் நிரந்தரமான பற்க்கள் வந்துவிடும். 

                                  பற்கள் விழுந்து முளைத்து விட்டால் பூச்சி பற்களைச் சரி செய்ய முடியாது. காலையில் பல் துலக்கி விட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். காலை கடனை முடித்து விட்டு குளிக்க வேண்டும். 

                                கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். மேற்புறம், உள்ளங்கை இரு கைகளிலும், இடுக்குகளிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு மருத்துவர் கெவின்  ஆபிரகாம் மாணவர்களிடம் பேசினார். 

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது . கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கெவின் ஆபிரகாம் மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண்ணங்குடி அரசு மருத்துவர்  யாழிசை  ,கண் மருத்துவ அலுவலர் மகேஸ்வரி ,செவிலியர் உமாமகேஸ்வரி , மருந்தாளுனர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். 


வீடியோ : https://www.youtube.com/watch?v=dO80YLXz7qo

No comments:

Post a Comment