பெண்களை வாரிசு உருவாக்குவார்களாக மட்டுமே பார்ப்பது தவறு
ஆசிரியர்கள் அனைவரும் சாவித்திரி பாய் பூலேவாக மாறி இந்தியா பண்பாட்டை உறுதிப்படுத்துங்கள்
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேச்சு
காரைக்குடி - நண்பர்களே காரைக்குடியில் இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சமூக மாற்றத்திற்கான கல்வி கருத்து உரையாடலில் பங்கேற்று அங்கு பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் பேசியவற்றை தொகுத்து அளித்து உள்ளேன். அவர் பேசுகையில்,
ஆசிரியர்களே தொடர்ந்து கற்றுக் கொடுத்துக் கொண்டே இருங்கள்.கற்றலை நிறுத்திவிடாதீர்கள் . இரண்டு கற்களை தேய்த்தால் தான் நெருப்பு வருகிறது என்பதை கற்றுக் கொண்டார்கள்.
அதன் பிறகு பச்சையாக சாப்பிட்ட கறி ஏதோ ஒரு தருணத்தில் நெருப்பில் விழுந்ததால் அந்த கறி மெல்வதற்கு இலகுவாக இருந்தததால் வேக வைத்த கறி நன்றாக இருக்கிறது என்பது தெரியவே 5,6 தலைமுறை ஆகியிருக்கும்.
எரிக்காத உணவை வேக வைக்காத உணவை சாப்பிட்ட பற்கள் வேகவைத்த உணவை சாப்பிட ஆரம்பித்த பிறகு வலு இல்லாமல் போயிருந்திருக்கும். இதற்கே ஆயிரம் வருடம் ஆகியிருக்கும்..
குரங்கு கால்கள் தட்டையாக இருப்பதால் வேகமாக நடக்காது.. ஆனால் மனிதன் மாறிவிட்டான். விவசாயத்திற்காக இடம் விட்டு இடம் நகர்ந்தான். விவசாயம் தான் மனிதனை கற்றுக் கொள்ள வைத்தது.
வேட்டைக்காரனாக இருந்தவனை விவசாயம் ஓரிடத்தில் இருக்க வைக்க ஆரம்பித்தது. உற்பத்தி செய்ய ஆரம்பித்தான். இதற்கெல்லாம் பல தலைமுறைகள் ஆகி இருக்கும். பல நூறு ஆண்டுகள் கடந்திருக்கும்.
ஓரிடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஆற்று வெள்ளம் அடித்து சென்றிருக்கும். அப்பொழுது கொஞ்சம் மிச்சம் எங்கேயாவது இருந்திருக்கும். அப்போதுதான் சேமிக்க கற்றுக்கொண்டு இருப்பான் மனிதன்.
இங்கே இருக்கக்கூடிய சிறுகுழந்தை எதையுமே சேர்த்து வைக்கவில்லை. அது எதைப் பற்றியும் கவலைப்படாது. இந்த குழந்தைதான் எனது நம்பிக்கை.
அந்தக் குழந்தையிடம் ஒரு பிஸ்கட் பாக்கெட் தாங்கள் கொடுத்தீர்களானால், வேண்டும் என்கிற பிஸ்கட்டை எடுத்துக் கொண்டு, மீதியை கொடுத்துவிடும். தேவைக்கு மட்டும் தான் எடுத்துக்கொள்ளும். சேர்த்து வைக்காது.
அனைவரும் பிறந்த குழந்தையாக இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. சொத்து சேர்க்க ஆரம்பிப்பதுதான் மிகப்பெரிய சிரமமான சூழ்நிலையாகும். சொத்து யாரிடம் கொடுப்பது என்பதில்தான் பிரிச்சினையே ஆரம்பம் ஆகிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்கள். மெக்காலேவிற்கும் முன்பாகவே ஒரே மாதிரியாக இருந்தார்கள். பெண் தான் வழிநடத்தி சென்றிருக்கின்றார்.
ஆனால் ஆண் தலைமை ஏற்க ஆரம்பித்து பெண்களை வாரிசைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டுமே என்ற சூழ்நிலையில் தான் அனைத்தும் மாறிப் போனது.
நமக்கு கை கட்டும் பழக்கம் எப்பொழுது வந்தது. மன்னர் கடவுளுக்கு வணக்கம் சொல்கிறார். மன்னருக்கு மனிதர்கள் வணக்கம் சொல்கிறார்கள். வணக்கம் ஏன் வைக்கவேண்டும்? தேவையில்லை.
முகுல் ராஜ் ஆனந்த் , பாபா சாஹிப்பை சந்தித்துப் பேசினார்.அப்பொழுது உரையாடல் மும்பையில் நடைபெற்றது. முல்க்ராஜ் ஆனந்த் வணக்கம் கூறினார்.அதற்கு பாபா சாகேப் எத்தனை காலம்தான் வணங்கிக் கொண்டே இருப்பீர்கள்? அன்று மலர்ந்த மலராக இருங்கள் என்று கூறினார்.
பாரதி கூறினாரே இன்று புதிதாய் பிறந்தோம் என்று, அது போல் அன்று மலர்ந்த மலராக இருங்கள் என்று கூறினார். வணங்குதல் என்பது அரசியல் தொடர்புடையது.
மரியாதையின் காரணமாக வணங்குவது வேறு. தாத்தா, பாட்டியை பேரன் வணங்குகிறான் அப்படி என்றால் அது ஒரு அருமையான பாசப்பிணைப்பு. ஆசிரியரை மாணவர்கள் வணங்குகிறார்கள். ஏதோ ஒரு நல்ல செய்தியை சொல்லிக் கொடுத்ததால் வணங்குகிறார்கள்.
5000 ஆண்டுகளுக்கு முன்பு கற்பித்து அதையே நாம் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கக்கூடாது. ஆண்களும், பெண்களும் சமமாக இன்று இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்.
இந்தப் பிறப்பில் இருக்கும்பொழுது அம்மா, அப்பாவை பலரும் பார்ப்பது கிடையாது. உயிரோடு இருக்கும் போது பலரும் பார்ப்பது கிடையாது. ஆனால் 16 நாட்கள் கழித்து அவர்கள் கொடுக்கும் காரியங்கள் நாம் நம்ப முடியாததாக இருக்கிறது. உயிரோடு இருக்கும் பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் உங்களது வாழ்க்கை மிக நன்றாக இருக்கும்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அம்பேத்கர். அம்பேத்கர் அவர்கள் தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை சாக கிடக்கிறார் என்று விரைந்து ட்ரெயினில் பயணிக்கிறார். அப்பொழுது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் பர்பி விற்கிறார்கள் .
அந்த பர்பி தனது அப்பாவுக்கு பிடிக்கும் என்று எண்ணி ட்ரெயினை விட்டு இறங்கி அதனை வாங்க செல்கிறார். வண்டியை வாங்கிக்கொண்டு மீண்டும் ட்ரெயினை பிடிக்க ஓடுகிறார்.
ஏன் அம்பேத்கார் தனது அப்பாவின் மீது இவ்வளவு அன்பாக இருக்கிறார்? மிகவும் சிரமமான கால சூழ்நிலையில் அம்பேத்கார் அவர்களின் தந்தை மிகவும் அன்பாக அவர்களது அப்பா இரவு நேரத்தில் விளக்கு லைட்டை கொடுத்து தனது மகனைப் படிக்க வைக்கிறார்.
அவர் படித்த டாக்டர் பட்டம் அவர்கள் அப்பா சாகக் கிடக்கும் பொழுது விரும்பமாட்டா.ர் அவர் விரும்புவது பரப்பி தான். ஒரு கிராமம் போஸ்ட் கார்டு வந்தால் கிராமமே பாராட்டும், கிராமமே வியந்து பேசும். அந்த காலத்தையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
. நீ இந்த வேலை செய்ய பிறந்துள்ளாய் என்று முதன் முதலில் கூறியதை முதலில் கிழித்து எறிந்தார் பூலே. எல்லோரும் சேர்ந்து படிக்க வேண்டிய பள்ளியை உருவாக்கினார் சாவித்திரி பாய் பூலே.
அவர்களது குடும்பம் மராட்டியத்தில் கோவிலுக்கு வேலைபார்க்கும் பூ கட்டும் பணியை செய்து வந்தது. பூ கட்டுவதற்கு ஆள் இல்லாததால் ஜோதிராவ் பூலேயை அந்த வேலைக்கு அனுப்பினார்கள்.
பள்ளியில் நன்றாக படிக்கச் கூடியவர் பூலே. அங்கிருந்த ஒரு கிருத்துவ பாதிரியார் அந்த குழந்தை நன்றாக படிப்பதால் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்று வீட்டில் வந்து பேசுகிறார். அதன் பிறகு பூலே மீண்டும் பள்ளியில் சேர்ந்து அவர் நன்றாக படிக்கின்றார்.
அன்று அந்த கிருத்துவர் செய்த உதவி இந்திய மண்ணுக்குப் பெருமை. ஜோதிராவ் பூலே தன் மனைவி சாவித்திரி பாய் பூலேவுக்கு படிப்பு கற்றுக்கொடுக்கிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பிராமண சமூகத்தில் பெண்கள் படிக்க அனுமதி இல்லை. பெண்கள் படிக்கக்கூடாது என்று இருந்தனர்.
ஜோதி ராவி பூலே தன் மனைவிக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூடம் நடத்த முயற்சி செய்தால் அவர்களுக்கு யாருமே இடம் தரவில்லை. இதனால் தனது குடும்பத்துக்கு பிரச்சினை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
உஸ்மான் ஷேக் அவருடைய சகோதரி பாத்திமா ஷேக் ஆகிய இருவரும்தான் அவர்களுக்கு பள்ளிக்கூடம் நடத்த இடம் கொடுத்தார்கள். மகாத்மா ஜோதிராவ் பூலே சாவித்திரி பாய் பூலேவியும் , அன்னை பாத்திமாவையும் ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்தார்.
இருவரும் ஆசிரியர் பயிற்சி முடித்து ஸ்கூல் வந்தபோது சேற்றையும், மலத்தையும் அன்று இருந்த ஆண்கள் அவர்கள் மீது எடுத்து அடித்தார்கள்.
விடாமல் போராட்டம் நடத்தி ,தனது துணிகளை பேப்பரில் மடித்து எடுத்துச் சென்று, சேரும், மலம் கலந்த உடைகளை கலைந்து மீண்டும் வேறு உடைகளை உடுத்திக் கொண்டு பாடம் நடத்தினார்கள்.
தன் வீட்டுப் பிள்ளைகளுக்கும், மற்றப் பிள்ளைகளும் படிக்க வேண்டுமென்று மராத்திய மாநிலத்தில் அவர்கள் தீவிர முயற்சி செய்தார்கள்.
நாம் பெண்களுக்கு கல்வி கொடுத்தால், ஆண்களுக்கு பண்பாட்டு வெற்றி கிடைக்கும். பெண்கள் படித்தால் ஆண்கள் பண்பாட்டு ரீதியாக வெற்றி பெறுவார்கள்.
சாவித்திரிபாய் பூலே தன் வீட்டுக்கு அனைவைரையும் அழைத்து எல்லோருக்கும், எல்லா ஜாதியினருக்கும் தன் வீட்டு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
அன்றைய பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல ஜாதிகளை எங்குமே அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பூலே அனைவரையும் தன் வீட்டில் அனுமதித்தார்.
பிராமண சமுதாயமாக இருந்தாலும் அனைவரையும் அரவணைத்தார். அந்த காலத்தில் கணவர் இறந்து விட்டால் அவர்களது மனைவியை மொட்டை அடித்து ஆற்றங்கரையோரம் கொண்டுபோய் விட்டு விடுவார்கள்.
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண் குழந்தையை வயிற்றில் சுமந்த படி கணவர் இல்லாத பெண்களை காப்பாற்றவும், கணவனால் கை விடப்பட்ட பெண்களை காப்பாற்றவும் அன்றைய நிலையில் விடுதி நடத்தினார்கள்.
இவர்கள் கணவர் இறந்த நிலையில் குழந்தை வயிற்றில் இருக்கும்போது கை விடப்பட்ட பிராமணப் பெண்ணை இவர்கள் நடத்திய அந்த விடுதியில் பிறந்த குழந்தையை தனக்கு மகனாக தத்து எடுத்துக் கொண்டார்கள்.தத்தெடுத்த மகனை மருத்துவர் ஆக்கினார்கள்.
கணவர் இறந்த பிறகும் கூட சாவித்திரி பாய் பூலே இரண்டு மடங்கு வீரியத்துடன் செயல்பட்டார்.கணவர் இறந்ததற்காக மூலையில் உட்கார்ந்து விடவில்லை.
பிளேக் நோய் அப்போது நாடு முழுவதும் பரவியிருந்தது. தான் தத்தெடுத்து வளர்த்து ஒரே மகனை டாக்டர் ஆக்கியதால், அவரிடம் ஊருக்கு வெளியே மருத்துவமனை வைத்து பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்க்க கூறினார்.
பூலே அவர்களே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தூக்கி கொண்டு வந்து மகனே உன்னிடம் தருகிறேன். நீ அவர்களை வைத்தியம் பார்த்து பிழைக்கவை என்று கூறினார்.
நாம் பிளேக் நோய் வந்தவர்களை தொட்டால் செத்துப் போய் விடும் என்று பயப்படும் நிலையில் பூலே அவர்களோ அவர்களை தூக்கி கொண்டு தன் மகனிடம் கொண்டுபோய்க் கொடுத்து பலரையும் காப்பாற்றினார்.
ஆனால் அந்த நோய் தொற்றிக் கொண்டு சாவித்திரி பாய் பூலேவும் இறந்து போனார். என்ன தியாகம் பாருங்கள்!
இன்று ஆசிரியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளவதாக நாம் கேள்விப்படுகிறோம். நேரில் பார்க்கிறோம்.
ஆசிரியர்கள் பலவீனப்பட்டால் அரசுப்பள்ளி பாதிக்கப்படும். இது அரசு பள்ளிக்கு வரும் நெருக்கடி என்று உணர்ந்து கொள்ளுங்கள். துப்புரவு தொழிலாளி போராடி வெற்றி பெற்றார்கள். இன்று பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 12 ஆயிரம், 15 ஆயிரம். 18 ஆயிரம் சம்பளத்தில் இருக்கின்றார்கள். இது சதியின் உச்சம்.
இந்த நிகழ்விற்கு வந்ததற்கு ஏதோ சாப்பிட்டோம், யாரோ பேசினார்கள், ஏதோ கேட்டோம் என்று இருக்காமல் நீங்கள் அனைவரும் இங்கே பேசியதை உணர்ந்திருக்க வேண்டும்.
ஆசிரியர்களாகிய நீங்கள் மாறவில்லை என்று சொன்னால் யாராலும் சாதாரண மனிதர்களை காப்பாற்ற முடியாது.
ஆசிரியர்களாகிய நீங்கள் விழித்து கொள்ளாவிட்டால் அடுத்த தலைமுறைக்கான கல்வி இல்லாமல் போய்விடும். இந்தியா காப்பாற்றப்பட வேண்டியது எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லை.
மக்கள் பண்பாட்டு தேவை, உடனடி தேவை, மாநிலப் பட்டியலில் அனைத்து சரத்துகளும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.
1957 கேரளாவில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு சென்றது. அன்று இருந்த குடியரசுத்தலைவர் அதனை உச்சநீதிமன்றத்திடம் இதை செய்யலாமா என்று கேட்டார்.
எனவே மாநில பட்டியலில் அனைத்து சரத்துக்களும் வந்தால் மட்டுமே அது நமக்கு நிலையான வெற்றியாக இருக்கும். அதற்கு நீங்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும். கேள்வி கேட்க வேண்டும், அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
தற்போது உருவாகும் சட்டம் உரிமையே இல்லாத சட்டம் என்று ஆகிவிடும். உயர் கல்வி அமைச்சருக்கு எந்த வேலையும் இல்லாமல் ஆகிவிடும்.
மண்ணை காக்கும் போராட்டம். என் மண்ணுக்கான போராட்டம் என்று விவசாயிகள் போராடி வெற்றி பெற்றார்கள். அதுபோன்று ஒரே வர்க்கமாக சபதம் செய்து ஒன்று சேர்வோம்.
எல்லோரும் உழைக்கும் மக்களுக்காக போராடுவோம். அப்பொழுதுதான் கல்வியை நாம் நிலைநாட்ட முடியும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார்.
நன்றி.
தோழமையுடன்
தொகுப்பு
லேனா,
காரைக்குடி.
No comments:
Post a Comment