Sunday, 25 January 2026

 குடியரசு தின விழா

குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல்
























 தேவகோட்டை –  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.



                  ஆசிரியர் ஸ்ரீதர்   வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர்  செல்வம் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி    கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு
வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா,குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும்  சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
                            குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.அதில் வெற்றி மாணவ,மாணவியர் நந்தனா,  ருத்ரேஸ்வரன், ரித்திகா    ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். ஆசிரியை முத்துலெட்சுமி  நன்றி கூறினார்.   


பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு  தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி    கொடி ஏற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் . ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர்  செல்வம் முன்னிலை வகித்தார்.ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.

 

வீடியோ :  https://www.youtube.com/watch?v=Q5YPErku3XU

No comments:

Post a Comment