தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளி அறிவியல் நடமாடும் கோளரங்கம் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் எளிதாக புரிய வைக்கப்பட்டது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வை ஸ்பெஸ் ட்ரிப் நடமாடும் கோளரங்க நடத்துனர் சரவண பாண்டி , தமிழரசி , காளிதாஸ்,லோகநாதன் ஆகியோர் நடத்தினார்கள் . ஸ்பெஸ் ட்ரிப் நிறுவன சரவண பாண்டி மாணவர்களிடம் பேசுகையில் பள்ளிகளில்,
கோளரங்கம் என்பது மாணவர்களுக்கு விண்வெளி மற்றும் வானியல் பற்றிய அறிவைப் புகட்டுவதற்கான ஒரு கல்விசார் கருவியாகப் பயன்படுகிறது.
இது மாணவர்களுக்கு வானியல் பற்றிய ஒரு கண்கவர் அனுபவத்தை அளிக்கிறது. கோளரங்கங்கள், மாணவர்களுக்கு வானியல் பற்றிய அறிவைப் புகட்டுவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எங்களது நிறுவனம் பள்ளி வளாகத்திலேயே மொபைல் கோளரங்கங்களை ஏற்பாடு செய்கிறது. . அங்கு மாணவர்கள் பிரபஞ்சத்தின் அதிசயங்களைப் பற்றிய ஒரு வசீகரிக்கும் நுண்ணறிவைப் பெறுவார்கள்..
கோளரங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு ஒரு வேடிக்கையான மற்றும் ஊடாடும் கற்றல் அனுபவத்தை வழங்குவதன் மூலம், அறிவியலில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இந்த கோளரங்கம் மாணவர்களை விண்மீன் திரள்கள், தொடக்கங்கள் மற்றும் பரந்த விண்வெளியைக் கடந்து கொண்டு செல்லும் ஒரு குவிமாடத்தைக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வு மாணவர்களின் கற்பனைகளைத் தூண்டும் என்றும், அடுத்த தலைமுறை வானியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
வகுப்பறையைத் தாண்டி பிரபஞ்சத்திற்கு நீண்டு செல்லும் ஒரு பயணத்தில் இளம் கற்பவர்களை அழைத்துச் செல்வோம்!விண்வெளி அறிவியல் பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்ளபோகிறோம்.
விண்வெளியில் கோள்கள் நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிளாஸ்டிக் உபயோகிப்பதன் மூலம் விண்வெளி பாதிப்புக்கு உள்ளாகும். விண்வெளியில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அது மனிதர்களை பாதிக்கும்.
அறிவியல் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். விலங்குகள் பிளாஸ்டிக் பயன்படுத்தாது. மக்களாகிய நாம்தான் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறோம்.
நாம் தான் பூமியை மாசு படுத்துகிறோம். இளைஞர்களாகிய நீங்கள் நினைத்தால் எதையும் மாற்ற முடியும்.
கோளரங்கம் என்பது ஒரு பலூன் மாதிரி இருக்கும். அதில் உள்ளே போய் நாம் படம் பார்க்கப் போகிறோம். 360 டிகிரியில் இருக்கும்.
இதில் நாம் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் டைனோசர் இனம் எப்படி அழிந்தது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
விண்வெளியிலிருந்து ஒரு எரிகல் நம் பூமியை நோக்கி வந்து கடலுக்குள் விழுந்தது. கடலின் பக்கத்து நிலப்பரப்பில் தான் டைனோசர்கள் வாழ்ந்தது.
எரிகல் பூமியை நோக்கி வந்த வேகத்தில் உள்ள தூசிகள் அடங்கவே ஒரு மாதம் ஆகியது. தூசி சூரியனின் வெளிச்சத்தை மறைத்து விட்டன.
இந்த தூசியில் மூச்சு விட முடியாமல் டைனோசர் இனங்கள் அழிந்து விட்டன.இவ்வாறு பேசினார்.
மாணவர்கள் மிக அருகாமையில் டைனசோர் உட்பட பல்வேறு வானியல் நிகழ்வுகளை அருகாமையில் பார்த்து பரவசப்பட்டனர்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் கோளரங்கம் விண்வெளி அறிவியல் விரிவாக விளக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளியிலேயே கோளரங்கம் மூலம் வானியல் நிகழ்வுகளை நேரில் பார்த்ததில் மிகுந்த பரவசமடைந்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வை ஸ்பெஸ் ட்ரிப் நடமாடும் கோளரங்க நடத்துனர் சரவண பாண்டி , தமிழரசி , காளிதாஸ்,லோகநாதன் ஆகியோர் நடத்தினார்கள் . பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=jIPMY-swYAc
https://www.youtube.com/watch?v=8LfM8wOqjWM
No comments:
Post a Comment