இஸ்ரோவின் நிசார் செயற்கைகோள் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் நாசாவின் எல் பாண்ட் மற்றும் இஸ்ரோவின் எஸ் பாண்ட் என்ற இரட்டை சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெறமுடியும். குறிப்பாக, இந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும்.
குறிப்பாக பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை அபாயங்களில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்ள இடஞ்சார்ந்த தரவுகளை முழுமையாக வழங்கும். மேலும், இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். என்கிற தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.
இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிசார் செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=j4-mawGYHeo
No comments:
Post a Comment