Tuesday, 19 August 2025

தமிழக அரசின் வாசிப்பு இயக்கம் 

புத்தங்கள் பள்ளிக்கு வழங்குதல் 

கேட்போராக இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக மாற்றும் முயற்சிதான் வாசிப்பு இயக்கம் 

வட்டார வள மைய மேற்பார்வையாளர் பேச்சு 







தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வாசிப்பு இயக்க புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை  எஸ்.எஸ்.ஏ.மேற்பார்வையாளர் வழங்கினார்.

                   

                 

                                                    நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


                                                                      தமிழக அரசின் சார்பில் விலையில்லா வசிய்ப்பு இயக்க புத்தங்களை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேவகோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மாணவர்களுக்கு வழங்கி பேசுகையில் ,.

                                                          தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


                           முதல் கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில்  புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து அரசுமற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

                            ஒரு கதை- ஒரு புத்தகம்- 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

                                  இதுவரை குழந்தைகளுக்குக் கதை சொல்லியிருக்கிறோம். இப்போது அவர்களே கதைகளை வாசிக்க இருக்கிறார்கள். கேட்போராக (Listeners) இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக (Readers) மாற்றும் முயற்சி இது. 

                                                                      அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் சின்னச் சின்ன கதைப் புத்தகம் தரும் புதிய முயற்சி,  குழந்தைகளின் சுய வாசிப்பு  இந்தியாவில் முதன்முதலாக  தமிழ்நாட்டில்  புத்தகங்களுடன் குழந்தைகளின் சுயவாசிப்பு இயக்கம் தோன்றியுள்ளது. 

                         

                   மாணவர்கள் இப்புத்தகங்களை படித்து,வாசித்து அறிவை அதிகப்படுத்தி கொள்வதோடு, வாசிப்பிலும் பிரகாசிக்க வேண்டும் என்று பேசினார்.ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.வாசிப்பு இயக்க புத்தங்களை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வாசிப்பு இயக்க புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை  எஸ்.எஸ்.ஏ.மேற்பார்வையாளர் கார்த்திகேயன் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=45Xp23XYlAI

                   




No comments:

Post a Comment