Friday, 29 August 2025

 கல்வி உதவி தொகை வழங்குதல் 



தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.
                                   நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
தேவகோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் நவீன்  கனரா வித்ய ஜோதி என்கிற கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உதவி தொகை வரவு வைக்கப்பட்ட வங்கி புத்தகங்களை வழங்கினார்.மாணவிகள் மாலினி,ரித்திகா,சாதனாஸ்ரீ , ஏஞ்சல் ஜாய்  ஆகியோர் மொத்தமாக ரூபாய் 14,000 உதவி தொகை பெற்றனர்.ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை கனரா வங்கியின் கனரா வித்ய ஜோதி திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகைக்கான வங்கி புத்தகத்தை கனரா வங்கி முதன்மை மேலாளர் நவீன்  மாணவிகளிடம் வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment