தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம்
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் துவக்கம்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தமிழக அரசின் ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் தேவகோட்டை நகராட்சி களப்பணி உதவியாளர் ரஞ்சித்குமார் ,மின் பணியாளர் பழனி குமார், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் ஜெகன் சார்லஸ், டெங்கு பணியாளர் தேன்மொழி உட்பட ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார். காலை உணவு சாப்பிட்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தினை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நிகழ்வில் தேவகோட்டை நகராட்சி களப்பணி உதவியாளர் ரஞ்சித்குமார் ,மின் பணியாளர் பழனி குமார், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் ஜெகன் சார்லஸ், டெங்கு பணியாளர் தேன்மொழி உட்பட ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர். காலை உணவு கிடைக்கப் பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=nw2sMaI3s18
No comments:
Post a Comment