Tuesday, 8 July 2025

 தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு 

மாவட்ட பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்து ரூபாய் பத்தாயிரம்  பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை 

தமிழ்நாடு நாள் விழாவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிக்கு பள்ளியில் வாழ்த்து 







தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட அளவிலான தமிழ் வளர்ச்சி துறை போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

                                               தமிழ்நாடு அரசு    தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள்  விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் இப்பள்ளி மாணவி மா.ரித்திகா   மாவட்ட அளவில்  முதலிடம்  பிடித்து வெற்றி பெற்றார்.மாணவிக்கு சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி   ரூபாய் 10,000 பரிசுக்கான காசோலையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவியாளர் செந்தில்குமார், அலுவலக உதவியாளர் முனியசாமி ஆகியோர்  உடன் இருந்தார்.மாவட்ட அளவில் உயர்நிலை,மேல்நிலை,நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர்  பங்கேற்ற இப்போட்டியில் இப்பள்ளி மாணவி மா.ரித்திகா   வெற்றி பெற்று முதல்  பரிசினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது பாராட்டத்தக்கது.பரிசு பெற்ற மாணவியை பள்ளி  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் , ஸ்ரீதர்  மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் பயிற்சி பெற்று  மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளதுடன் மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.


 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி மா.ரித்திகா   தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு  நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதலிடத்தில்  வெற்றி பெற்ற்றுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி   ரூபாய் 10,000 பரிசுக்கான காசோலையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவியாளர் செந்தில்குமார், அலுவலக உதவியாளர் முனியசாமி ஆகியோர்  உடன் இருந்தார்.


No comments:

Post a Comment