Sunday, 6 July 2025

 இசை பயிற்சி முகாம் 

இசையை கற்றுக்கொண்டால் வாழ்க்கை வசப்படும் 

இசை ஆசிரியர் பேச்சு 




தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இசை பயிற்சி முகாம் நடைபெற்றது.


                                      ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.  பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  இசை ஆசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் சாந்தி ஆகியோர் இசை தொடர்பாக மாணவர்களிடம் பேசுகையில் , இசை படிக்க நிறைய விஷயங்கள் கிடைக்கும். 

                                              இசை கற்று கொள்வதால் மூளை நன்றாக வேலை செய்யும்.  இடது மூளைக்கு நிறைய செயல்பாடுகள் இருக்கும். ஒரே நேரத்தில் இடது கையிலும், வலது கையிலும் வேலை செய்வது இசையில் மட்டுமே முடியும். 

                               இசையில் ஒரே நேரத்தில் நான்கு கவிதைகள் படிப்பதை கேட்கமுடியும். பியானோ வாசித்தால் இடது பக்க மூளை நன்றாக வேலை செய்யும். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் பியானோ வாசித்தால் பிற்காலத்தில் நமக்கு இசையில் நிறைய முன்னேற்றங்கள் கிடைக்கும்.இவ்வாறு பேசினார்கள். நிறைவாக  ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.

  படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இசை பயிற்சி முகாம்  நடைபெற்றது. தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இசை ஆசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் சாந்தி ஆகியோர் இசை குறித்து விரிவாக விளக்கினார்கள் .


வீடியோ : https://www.youtube.com/watch?v=LbNUQEPEjck

No comments:

Post a Comment