போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி
போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கலா முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் பெரியார் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.போதை குறித்த விழிப்புணர்வினை மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் விளக்கி கூறுகையில் , போதை பொருள் விழிப்புணர்வு நம் மாநிலத்தின் தரம் உயர்வாக உள்ளது. ஆனால் பிற மாநிலத்தவர் அதிகமாக நம் மாநிலத்தில் வசிக்கின்றனர்.
பிற மாநிலத்தவர்களில் சிலருக்கு பாக்கு, புகையிலை பழக்கம் அதிகமாக உள்ளது. பிற மாநிலத்தில் சிறு குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே இந்த பழக்கத்தை பழக்கி விடுவார்கள்.
மது அருந்துவது மட்டுமல்ல, குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டில் கூட போதை மருந்து கலக்கிறார்கள். தெரியாத நபர் எவரேனும் சாக்லேட் கொடுத்தால் குழந்தைகள் வாங்கி சாப்பிடக்கூடாது.
குழந்தைகளுக்கு எந்த ஒரு கருத்தைக் கூறினாலும், அவர்கள் மனதில் பசுமரத்தாணி போலப் அதிகம் பதியும்.
குழந்தைகள் பெற்றோர் சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும். ஆசிரியர் சொல்வதையும் கேட்க வேண்டும். நல்லது எது, கெட்டது எது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு நல்ல வழியில் செல்ல வேண்டும்.
நமது பள்ளிக்கு அருகில் கடைகளில் போதை பொருள் விற்றால் நாம் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த உடனே விசாரித்து உண்மை என்றால் சீல் வைத்து விடுவார்கள்.
போதை மருந்து சிறு மூளையை பாதிக்கும். நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்கே தெரியாது. இதனால் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன.
19 வயது வரை மாணவர்கள் கவனமாக இருக்கவேண்டும். எதற்கும் அடிமையாக கூடாது. பள்ளி கல்லூரி மாணவர்களை தான் குறி வைக்கின்றனர்.
இந்த வயதில் நம்முடைய லட்சியம் என்னவென்றால் டெய்லி நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும்.அப்படி படித்தால் ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். போன் யூஸ் பண்ண கூடாது. வீடியோ கேம் விளையாட கூடாது. நாட்டை வல்லரசாக்க இளைஞர்கள் கையில் உள்ளது என்று அப்துல்கலாம் கூறினார்.
தூங்குவது கனவல்ல, நம்மை தூங்க விடாமல் செய்வதே கனவு ஆகும். நாம் நமக்கென்று இலட்சியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நமது வீடுகளில் புகையிலை உபயோகித்தால் நாம் உபயோகிக்க விடக்கூடாது, போடக்கூடாது என்று சொல்லவேண்டும்.
நடந்து போகும் போது வலது பக்கம் செல்ல வேண்டும். சைக்கிளில் செல்லும் பொழுது இடது பக்கம் செல்ல வேண்டும். ஹெல்மெட் அணிந்துதான் பைக் ஓட்ட வேண்டும்.
மாணவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் , ஆறு மாதம் சிறை தண்டனை. அப்பா, அம்மாவுடன் மட்டும்தான் குழந்தைகள் வெளியே செல்ல வேண்டும். இவ்வாறு பேசினார் ஆசிரியர் ஸ்ரீதர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் பெரியார் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கலா முன்னிலை வகித்தார்
வீடியோ : https://www.youtube.com/watch?v=e8VBrxSk-VI
No comments:
Post a Comment