இயற்பியல் மாற்றமும்,வேதியியல் மாற்றமும் எவ்வாறு நிகழ்கிறது?
நேரடியாக கற்றுக்கொண்ட மாணவர்கள்
அறிவியல் சோதனைகள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பயிற்சியாளர்கள் தனசேகர், ஜோதி மீனாள் மற்றும் அரங்குலவன் ஆகியோர் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள். எலக்ட்ரான்,புரோட்டான்,வெப்ப கொள்வினை, வெப்ப உமிழ்வினை,அனுவின் தன்மை,விசையும் ,இயக்கமும், இயற்பியல்,வேதியியல் மாற்றங்கள் உள்ளிட்ட அறிவியல் பயன்பாடு தொடர்பான செயல்முறைகள் போன்றவற்றை செய்து காண்பித்து தெளிவாக விளக்கம் அளித்தனர். மாணவர்கள் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரிர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.அ .மு.மு. அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிற்சியாளர்கள் தன சேகர்,ஜோதி மீனாள் மற்றும் அரங்குலவன் ஆகியோர் மாணவர்களுக்கு நேரடியாக அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வுகளை நடத்தினார்கள்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=cl2teScImw0
No comments:
Post a Comment