Friday, 25 July 2025

 தமிழக அரசின் விலையில்லா வண்ண க்ரையான் பென்சில்கள் ,கணித உபகரண பெட்டி வழங்குதல் 






தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வண்ண க்ரையான்  பென்சில்கள் , கணித உபகரண பெட்டி பள்ளி மாணவர்களுக்கு    வழங்கப்பட்டது.

                         
                 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 
விலையில்லா 
வண்ண க்ரையான்  பென்சில்கள், கணித உபகரண பெட்டி ஆகியவற்றை தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் குமார்  தலைமை தாங்கி வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்  பங்கேற்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்து மீனாள் ஆகியோர் செய்து இருந்தனர். 


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா வண்ண க்ரையான்  பென்சில்கள், கணித உபகரண பெட்டி ஆகியவற்றை தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் குமார்  தலைமை தாங்கி வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்  பங்கேற்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார்கள். 

No comments:

Post a Comment