கேட்பதைவிட கவனித்தல் முக்கியம்
சிறந்த பேச்சாளருக்கான முக்கிய தகுதி கவனித்தலே
பயிற்சியாளர் தகவல்
காரைக்குடி - காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு பேச்சாற்றல் பயிற்சி முகாம் நடைபெற்றது
பயிற்சி முகாமை கல்லூரியின் முதல்வர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சு பயிற்சியினை பயிற்சியாளர்கள் நாகலிங்கம் மற்றும் சிவபிரான் ஆகியோர் நடத்தினார்கள்.
மாணவர்களிடம் பயிற்சியாளர்கள் பேசுகையில், கேட்பதைவிட கவனித்தல் மிக முக்கியம். சிறந்த பேச்சாளருக்கான அழகு கவனித்தல் .நாம் பேச்சை ஆரம்பிக்கும் பொழுது நம் எதிரில் இருக்கும் பங்கேற்பாளர்களின் மனதில் இடம் பிடிக்க கண்ணோடு கண் பார்த்துப் பேச வேண்டும்.
அனைவரையும் பார்த்து பேச வேண்டும். நாம் பேசும் பொழுது அனைவரையும் கேட்க வைக்க வேண்டும். பேச்சை முடிக்கும் பொழுது சின்ன, சின்ன கதைகள், ஒரு திருக்குறளை, பழமொழியோ சொல்லி முடிக்க வேண்டும்.
நமக்குள் இருக்கும் பயம் நம்மை விட்டு போக ஆரம்பிக்க வேண்டும் என்றால் நன்றாக நாம் பேசி பழக வேண்டும். பேச்சு கலையில் நாம் கொடுக்கும் நேரடி விஷயங்கள்தான் 55 சதவிகிதம் பார்வையாளர்களை சென்றடையும்.
நன்றாக சத்தமாக பேசும் பொழுது 38 சதவிகிதம் பார்வையாளர்களை அடையும். மீதமுள்ள 7 சதவீதம் தான் நாம் தயாரிக்கும் கருத்துக்கள் மற்றவர்களை சென்று சேரும்.
எனவே நாம் தயாரிக்கும் தயாரிப்புடன் நம் குரல் வளம், நமது பேச்சை படமாக சைகையால் காண்பிக்கும் திறன் போன்றவற்றையும் நாம் முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பேச்சு இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம். பேசுவதற்கு தடைகளை தூக்கி எறியுங்கள். தைரியமாக பேச வாருங்கள். வெற்றி நமது ஆகி இருக்கும் என்று பயிற்சியாளர்கள் கூறினார்கள்.
திறன் பயிற்சி இயக்குனர் செந்தில் ஆனந்த பிரகாஷ், அழகப்பா பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் சிவானந்தராஜா, முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலரும், பேராசிரியருமான செந்தில்குமார், 2000 வருடத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் சசிராம் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
மாணவர்கள் இப்பயிற்சி மிக அருமையாக, இனி வரும் காலங்களில் தானாக பேசும் வகையில் அமையப் பெற்றதாக கூறினார்கள். பயிற்சியில் நாடகங்கள் நடித்துக் காண்பிக்கப்பட்டது
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான சிறப்பு பேச்சாற்றல் பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. பயிற்சியினை பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். பயிற்சியாளர்கள் நாகலிங்கம் மற்றும் சிவபிரான் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். திறன் பயிற்சி இயக்குனர் செந்தில் ஆனந்த பிரகாஷ், அழகப்பா பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் சிவானந்தராஜா, முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலரும், பேராசிரியருமான செந்தில்குமார், 2000 வருடத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் சசிராம் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
குறிப்பு :
பயிற்சியில் பங்கேற்று இத்தகவலை தொகுத்தவர் : லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை .
No comments:
Post a Comment