Saturday 27 July 2024

 அப்துல்கலாம் நினைவு தினம் 

  சிறு,சிறு விஷயங்களில் கடவுளாக மாறுங்கள் 

 எளிமையின் சிகரம் அப்துல்கலாம் 

எல்.ஐ.சி.கிளை மேலாளர் புகழாரம் 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்குதல் 





































































































தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
                                                   ஆசிரியர் ஸ்ரீதர்  வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் சனில் ஜான் சன்னி நிகழ்வில்  பேசுகையில் , அப்துல் காலம் எளிமையானவர் .பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.இளைஞர்களை,மாணவர்களை பெரிதும் கவர்ந்தவர்.உலகத்திற்கே விடிவெள்ளியாக திகழ்ந்தவர்.ஏழ்மை குடும்பத்தில் பிறந்து மிக உயர்ந்த இடத்திற்கு சென்றவர்.விஞ்ஞானம் மனித குலத்திற்கு மேம்பாடு அடைய உதவ வேண்டுமென அரும்பாடு பட்டவர்.சிறு,சிறு வேலைகளை நீங்களே செய்து கொள்ளுங்கள்.அப்படிதான் காலம் அய்யா வாழ்ந்தார்.அவரது  நினைவு நிகழ்வில் பங்கேற்றதை பெருமையாக எண்ணுகிறேன் என்று பேசினார். அப்துல்கலாமின் கவிதை,பொன்மொழிகள்,பேச்சு  கூறியவர்களுக்கும் ,அப்துல்கலாம் ஓவியம் வரைந்தவர்களுக்கும் மரக்கன்றுகள் பரிசாக  வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி  நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு நாள் நிகழ்வில் 
தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் சனில் ஜான் சன்னி அப்துல்கலாம் பொன்மொழிகள் கூறுதல் , ஓவியம் வரைதல் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்..பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். 

வீடியோ :

https://www.youtube.com/watch?v=dEq6AlwVaGE

  https://www.youtube.com/watch?v=_mZ3Z9L96CI


https://www.youtube.com/watch?v=ZwU6QbgOwoc



No comments:

Post a Comment