மதிய உணவின் மூலம் அடிப்படை கல்விக்கு வித்திட்டவர் காமராசர்
கல்வி வளர்ச்சி நாள் விழாவில்
நகராட்சி தலைவர் பேச்சு
கவிதை ,பேச்சு,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு
தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.
விழாவில் ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். விழாவின்
தொடக்கமாக அபிராமி அந்தாதி,திருக்குறள் நடனம் நடைபெற்றது.பள்ளி
தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை
வகித்தார்.தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில், காமராஜர் எத்தனையோ தலைமுறை தாண்டியும் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு
உள்ளார்.கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் .சாதாரண குடும்பத்தில் இருந்து முதலமைச்சர்
ஆனவர்.உழைப்பு,விடாமுயற்சி உடையவர் .அவர் ஏற்படுத்தி
கொடுத்த கல்வி கூடங்கள் அனைவருக்கும் உபயோகமாக உள்ளது.விட்டு கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.இவ்வாறு பேசினார்.காமராஜர்
கல்வி வளர்ச்சி நாள் தொடர்பாக நடைபெற்ற கவிதை ,பேச்சு,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் ஜெபிகா ,ஏஞ்சல் சாய், கனிஷ்கா, முகல்யா , தவதுர்கா ,லோகேஷ், ஹாசினி, சுபிக்ஷன் ஆகியோருக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.மாணவர் சர்வேஸ்வரன்,மாணவி தக்ஷிணா ஆகியோர் காமராஜர் வேடம் அணிந்து வந்து அசத்தினார்கள். விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைச் சிறப்பிக்கும் வகையிலும் அந்தத் திட்டம் பற்றி மாணவர்கள்
அறிந்துகொள்ளும் வகையிலும் சத்துணவாக பல வகை சாதங்களைச் சமைத்து
மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.சுவையான
சாத வகைகளோடு காமராஜர் விழா கொண்டாடப்பட்டது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=DgV1UnCCWNM
No comments:
Post a Comment