லைசென்ஸ் இல்லாமல் ஓட்டினால் 25,000 ரூபாய் அபாரதம்
செல்போன் பேசிக்கொண்டு ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம்
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தகவல்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகர போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் கலா முன்னிலை வகித்தார். தேவகோட்டை போக்குவரத்து காவல் துறை இன்ஸ்பெக்டர் வைரமணி மாணவர்களிடம் பேசும்போது, பள்ளி , கல்லூரி மாணவர்கள் வாகனங்களை 18 வயதுக்கு கீழ் ஓட்டக் கூடாது. அவ்வாறு ஓட்டும் நிலையில் அவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 3 ஆண்டு சிறை தண்டனையும் உண்டு. 25 வயது வரை வாகனம் ஓட்டுவதற்கு தடை செய்யப்படும்.
உங்கள் பெற்றோர்களிடம் கூறி அனைவரையும் ஹெல்மெட் அணிய செய்யுங்கள்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று உங்கள் வீட்டில் உள்ளவர்களை
அன்போடு கேட்டுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் விபத்து இல்லாத சாலை பயணம்
ஆகும்.என்று பேசினார்.
மாணவர்களின் பல்வேறு சாலை விதிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு போக்குவரத்து ஏட்டு யோவா பதில்கள் அளித்தார். நிகழ்வில் எஸ்.எஸ்.ஐ. அஸ்லாமு, காவலர் முத்துவிஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக தேவகோட்டை போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் வைரமணி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார் . பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகர போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் கலா முன்னிலை வகித்தார். மாணவர்களின் பல்வேறு விதமான சாலை போக்குவரத்து தொடர்பான சந்தேகங்களுக்கு எஸ்.எஸ்.ஐ,அஸ்லாமு ,ஏட்டு யோவா,காவலர் முத்துவிஜயன் ஆகியோர் பதில்கள் அளித்தனர். காவலர்கள் விளக்கம் அளித்தனர்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=gXIuxCpRuYA
மாணவர்களின் கேள்விகளும் , காவல் துறை அதிகாரிகளின் பதில்களும் :
போக்குவரத்து
இன்ஸ்பெக்டர் வைரமணி , ஏட்டு யோவா ஆகியோர் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கு
பதில் அளித்து பேசுகையில் கீழ்கண்ட பதில்களை கூறினார்கள்.
சாலை போக்குவரத்தில் மிகமுக்கியமானது நில், கவனி, செல் என்பதாகும் .
கேள்வி : லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் எவ்வளவு ஃபைன் போடுவீர்கள்?
பதில் : இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பைன் பண்ணப்படும். இளம் வயது மாணவர்கள் லைசென்ஸ் இல்லாமல் 18 வயதிற்குள் வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு லைசன்ஸ் கிடையாது. 18 வயதிற்குள் வாகனம் ஓட்டினால் 25,000 ரூபாய் பணமும், அவர்களது பெற்றோர்களுக்கு மூன்றாண்டுகள் தண்டனையும் வழங்கப்படும்.
வாகனம் ஒட்டிய மாணவர்களுக்கு இருபத்தி ஐந்து வயது வரையில் லைசன்ஸ் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படும்.
கேள்வி : ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் எவ்வளவு ரூபாய் பைன் செய்யப்படும்?
பதில் : ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் ஆயிரம் அபராதம் செய்யப்படும். பின்னால் ஒருவர் அமர்ந்து இருந்து அவரும் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் அவருக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் .மொத்தத்தில் 2000 ரூபாய் ஃபைன் ஆக விதிக்கப்படும்.
கேள்வி : போக்குவரத்து காவலர்களுக்கு வெள்ளை நிற யூனிபார்ம் வழங்கப்படுவது ஏன்?
பதில் : வெள்ளை நிறம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும். மற்ற காவலர்கலிருந்து போக்குவரத்து பிரிவு இருப்பதை தெளிவுபடுத்துவதற்காக கவனயீர்ப்பு இருக்கும்.. போக்குவரத்து காவலர்களுக்கு வெள்ளை நிற சீருடைகள் பயன்படுத்தப்படுகிறது.
கேள்வி : சாலைகளில் ஏன் வெள்ளை கோடுகள் இடப்படுகிறது?
பதில் : வெள்ளை கோடுகள் சென்டர் மீடியன் என்று கூறப்படுகிறது. அந்த கோட்டிற்குள்தான் நாம் பயணம் செய்ய வேண்டும். அந்த கோட்டின் வலது புறமோ, இடது புறமோ சாலையில் எவ்வாறு செல்ல வேண்டுமோ, அது போன்று செல்ல வேண்டும் .அதற்காகத் தான் கோடுகள் இடப்படுகிறது.
கேள்வி : செல்போன் பேசிக் கொண்டே வண்டி ஒட்டி சென்றால் எவ்வளவு ரூபாய் பைன் செய்யப்படும் ?
பதில் : செல்போன் பேசிக் கொண்டே சென்றால் நம் சிந்தனை சிதறி விடும். எனவே ரூபாய் 10,000 பைன் விதிக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும் பத்தாயிரம் ரூபாய் பைன் விதிக்கப்படும்.
கேள்வி : லைசென்ஸ் எடுப்பதற்கு என்னவெல்லாம் வேண்டும்?
பதில் : லைசென்ஸ் எடுப்பதற்கு ஆதார் கார்டு வேண்டும்..பிறந்த சான்றிதழ் வேண்டும். 3 பாஸ்போர்ட் சைஸ் பொட்டுக்கள் வேண்டும் .
கேள்வி : சாலை போக்குவரத்தில் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுகிறது ? ஏன்?
பதில் :கவன ஈர்ப்பைக் கொண்டு வரவே இந்த நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நிறங்களை விட இந்த நிறங்கள் மிக எளிதாக கவனத்தை ஈர்க்கும். எனவேதான் இவற்றை பயன்படுத்துகின்றோம்.
கேள்வி : சிகப்பு எரியும்போது சாலை போக்குவரத்தில் தாண்டினால் எவ்வளவு பைன் செய்யப்படும்?
பதில் : அதற்கு லைன் ஜம்பிங் என்று பெயர் .அது போன்று செய்தால் 500 ரூபாய் ஃபைன் விதிக்கப்படும்.
கேள்வி : லைசென்ஸ் எத்தனை வருடங்களில் ரெனிவல் செய்ய வேண்டும் ?
பதில் : லைசென்சை வயதைப் பொறுத்து புதுப்பிக்கலாம். சுமார் 10 முதல் 15 வருடங்களில் ரினிவல் செய்வதற்கான காலம் வழங்கப்படும்.
கேள்வி : வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் மூன்று பேர், நான்கு பேர் சென்றால் என்ன தண்டனை வழங்கப்படும் ?
பதில் : நீங்கள் எப்போதும் சாலையில் அவ்வாறு பார்த்தால் போட்டோ, வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் அவர்களை கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்வோம்.
தேவகோட்டையில் பல இடங்களில் இதுபோன்று செல்லும் நபர்களை விரட்டிச் சென்று அன்பான முறையில் அவர்களுக்கு எங்களால் அறிவுரை வழங்கப்படுகிறது.
மாணவர்களே இதுபோன்று பெருமளவில் செல்கின்றார்கள். அவர்களுக்கு நாங்கள் பல்வேறு விதமான அறிவுரைகளை வழங்கி முதல்முறை அனுப்பிவிடுவோம். மீண்டும் இதுபோன்று செய்தால் வழக்குப் பதிவு செய்தோம்.
கேள்வி : ஆட்டோக்களில் ஓட்டுநர்கள் என்ன விதமான சீருடை அணிய வேண்டும்?
பதில்
: ஆட்டோ ஓட்டுனர்கள் காக்கி சட்டை அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு
செல்லவில்லை எனில் 500 ரூபாய் பைன் போட்டு விடுவோம்.இவ்வாறு கேள்வகளுக்கு
பதில் அளித்தனர்.
சாலையில் இடது புறம் மட்டுமே செல்ல வேண்டும். அவசியம் ஹெல்மெட் அணிந்து வாகனங்களில் பயணம் செய்ய வேண்டும். லைசென்ஸ் பெற 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆதார் நகல் கொடுக்க வேண்டும். பிறந்த சான்றிதழ் கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் கொடுத்தால் லைசென்ஸ் கிடைக்கும். நமக்கு ஓட்டவும் கற்றுக் கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுதுதான் லைசென்ஸ் கிடைக்கும்.
லைசென்ஸ் முதலில் டூவீலர்க்கு வாங்கலாம். பிறகு கார் போன்ற வாகனங்களுக்கு வாங்கலாம். பிறகு சிறிது நாள் கழித்து ஹெவி வாகனங்களுக்கும் நம்மால் வாங்க இயலும்.
லைசென்ஸ் வாங்கி வாகனம் ஓட்டுவதே சிறந்தது. சாலைகளில் நாம் போக்குவரத்து காவலர் கையில் இருக்கும் சிக்னல்களையும் பார்த்து செல்ல வேண்டும்.
கையில் எரியும் லைட் சிவப்பு இருக்கிறதா, பச்சை இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கையில் ஸ்டாப் என்ற போர்டு வைத்தால் அதனையும் நாம் மதித்து வண்டியை நிறுத்தி விட வேண்டும் இவ்வாறு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கு போக்குவரத்து காவலர் பதில் கூறினார்கள் .
No comments:
Post a Comment