Monday, 1 July 2024

வாழ்க்கை செயல்களை எளிமைப் படுத்தி கொள்ளுங்கள் 

சோம வள்ளியப்பன் பேச்சு 


 

திருச்சி -  திருச்சியில் நாணய விகடன் மற்றும் மிக்சுவல் பண்ட் நிறுவனமும்   இணைந்து இலக்கு சார்ந்த முதலீடு என்கிற தலைப்பில் விரிவான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

                              இதில் பங்கேற்று பேசிய சோம. வள்ளியப்பன், தற்போதைய நிலையில்  மியூச்சுவல் ஃபண்டில் ஐம்பத்தி ஏழு லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர்.

                                        தற்போது இந்தியாவின் மொத்த மார்க்கெட் கேப்  5.2 ட்ரில்லியன்  ஆகும் .இதில் 10% மியூச்சுவல் ஃபண்டில் இருக்கின்றது. மிக்சுவல் பண்டில் 57 லட்சம் கோடி ரூபாயில் 85 சதவிகிதம் தனிநபர்களின் முதலீடு ஆகும்

                                    இந்தியாவில் சராசரி மனிதர்களின் வயது இருபத்தி எட்டு. சீனாவில் முப்பத்தி எட்டு. ஜப்பானில் நாற்பத்தி எட்டு.  இந்தியாவில் 28 வயசு சராசரி வயதாக இருப்பதால் பொருளாதார வளர்ச்சியில்   ஜப்பானை விட நமக்கு இன்னும் வளரும் வாய்ப்பு மிக அதிகம்.

                                            ஜப்பானில் சராசரி வயது நாற்பத்தி எட்டு ஆனதால் அவர்களது வளர்ச்சி கொஞ்சம் தாமதமாகி உள்ளது. ஆனால் இந்தியாவில் இருபத்தி எட்டு வயது சராசரியாக இருப்பதால் அவர்களுடைய கை பந்தம் நம்மிடம் வந்துள்ளது.

                                           எப்பொழுதுமே  வண்டியை ரிவர்சில் வாய்ப்பு உள்ள போதே சரியாக நிறுத்திவிடுங்கள். ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறீர்கள். மண்டபத்தின் வாசலில் நேராக கொண்டு போய் வண்டியை நிறுத்தி விட்டீர்கள் என்றால் நிகழ்ச்சி முடிந்து வரும் போது வண்டியை எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும்.

                                         ஆனால் வண்டியை நிறுத்தும் பொழுது ரிவர்ஸில் சரியாக நிறுத்தி விட்டால் நாம் எளிதாக எடுத்து வந்து விடலாம். அதுபோல் தான் உங்களது பண செயல்பாடுகளையும்  சரியான முறையில் நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள்.

                                         வாய்ப்பு இருக்கும் பொழுதே நாமினேஷன் சரி செய்வது , மற்ற சின்ன சின்ன வேலைகள் செய்வது அனைத்தையும் சரி செய்து கொள்ளுங்கள். நாம் முடியாமல் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் பொழுது இந்த சிறு விஷயங்களை செய்ய இயலாது.

 

                                      சின்ன சின்ன பழக்கவழக்கங்கள் தான் பெரிய விஷயமாக நமக்கு உருவாகி வருகிறது. அதாவது ஆயிரம், ஆயிரம் ரூபாய் தானே போடுகிறோம் எஸ்ஐபி என்று எண்ணாமல் ஆயிரமாயிரமாக நீண்ட காலத்திற்கு போட்டுக்கொண்டே சென்றாள் அதனுடைய வளர்ச்சி மிகப் பெரியதாக இருக்கும்.

                                     பென்ஷன் தற்போது பலருக்கும் இல்லை. இந்த சூழ்நிலையில் இன்ஃப்லேஷன் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் பெற வேண்டுமென்றால் நீங்கள் எஸ்.ஐ.பி  மூலமாக மியூச்சுவல் ஃபண்டில் போடுவது தான் சிறந்தது.

                             அதற்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். 12ம் வகுப்பு  முடித்தவர்கள் சேமிப்பு செய்பவர்கள். இளங்கலை முடித்தவர்கள் பங்குகளில் முதலீடு செய்பவர்கள். முதுகலை  முடித்தவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள். எம்பில் முடித்தவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி.போடுபவர்கள்.

                               பிஎச்டி முடித்தவர்கள் என்றால்  இலக்கை நிர்ணயித்து மிக்சுவல்  பண்டில் முதலீடு செய்பவர்கள். இலக்கை நிர்ணயித்து மியூச்சல் பண்டில் முதலீடு செய்பவர்கள்.

                                 உங்களுடைய முடிவெடுக்கும் திறன் மிக சரியாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம்.

                                   1979 இல் அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் ஆய்வு செய்த பொழுது 84 சதவீதம் பேருக்கு இலக்கு இல்லை. 13 சதவீதம் பேருக்கு இலக்கு இருந்தது.

                                        வெறும் 3 சதவீதம் பேருக்கு இலக்கும்  இருந்தது, அதை எழுதியும் வைத்திருந்தார்கள், அடைவதற்கான வழிமுறைகளையும் தெரிந்து வைத்திருந்தார்கள்.

                                     10 ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு அவர்களுடைய  ஆண்டு வருமானம் எவ்வளவு என்று மீண்டும் ஆய்வு செய்தபோது, 84% பேரின்  மொத்த ஆண்டு வருமானதின் இரண்டு மடங்கு   13 சதவீதம் பேரின் வருமானமாக இருந்தது. இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.

                                            97% பேரின்  மொத்த வருமானத்தின் இரண்டு மடங்கு 3% பேர் உடையதாக இருந்தது. அப்படியானால்  இலக்கு நிர்ணயித்து செயல்படுவார்கள் வெற்றியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். வெற்றியாளராக மாறுகிறார்கள்.

                      இணையத்தில் சென்று இலக்கு சார்ந்து இன்வெஸ்ட்மெண்ட் கால்குலேட்டர் கதேடினால்  மிக அழகாக இலக்கை நிர்ணயித்த கணக்கீடு தங்களுக்கு எளிதாக கிடைக்கும்.

                              ஏன் நமது வீடுகளில் அந்த காலத்தில் தாலியில் தங்கம் அதிகம் வைக்க வேண்டும் என்று கூறினார்கள்?  பொதுவாக வைத்து இருந்தால் எளிதாக எடுத்துவிடுவோம், இலக்கு நிர்ணயித்து பொண்ணுக்கு கல்யாணம் எஸ்ஐபி போட வேண்டும் என்றால் தேவையற்ற செலவு குறையும்.

                                              உங்களது பர்சில்  500 ரூபாய் உடன் நீங்கள் இருந்தால் 500 ரூபாய்க்கான செலவு மட்டுமே செய்வீர்கள்.  பொருளாதார ரீதியான விடுதலை என்பது நீண்ட காலத்தில் முதலீடு செய்தால் மட்டுமே நமக்கு கிடைக்கும் 


                               ஜாப் மாறிக்கொண்டே இருப்பது இந்தியாவில் தற்பொழுது மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்காக எல்லாம் இளைஞர்கள் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் மாறிக்கொண்டே நல்ல நல்ல வேலைகளுக்கு உடனே சென்று கொண்டே இருக்கின்றார்கள்.

                           மழை வரும்போது சேமிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் நிறைய மழை வருகிறது. இரண்டே வருடத்தில் 10 வருடத்திற்கான சம்பளத்தை பெற்று விடுகிறார்கள். ஆனால் சேமிப்பு குறைவாக இருக்கின்றது.

                                 பணம் அதிகமாக கிடைக்கும் பொழுது செலவையும் அதிகமாக செய்கிறார்கள். பணம் வரும் பொழுது சேமியுங்கள்.

                                  மழை வரும் பொழுது சேமித்துக் கொள்ளலாம். ஆனால் மிக அதிகமான மழை வரும் பொழுது கவனமாக சேமிக்க வேண்டும். பணத்தை தாம்தூம் என்று எடுத்து விட்டோம் ஆனால் மீண்டும் பிற்காலத்தில் நாம் சிரமப்படும் .

                                                     அதனால்தான்  மிக எளிதான வாழ்க்கையை வாழுங்கள் என்று மீண்டும் கூறுகிறேன். இந்தியா நன்றாக இருக்கும் .இந்தியா வளரும் .கார்ப்பரேட்டுகள் நன்றாக இருக்கும்.

                                  நம்ம நம்ம வேலையை பார்த்தோம் என்றால் , நம்முடைய  மீச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி. போட்டீங்கன்னா அது அது வேலையை பார்க்கும்.

 

                                            நான் கடந்த  25 ஆண்டுகள் தினசரி ஒரு மணி நேரம் நடைபயிற்சி செல்கிறேன். 2915 நாட்கள் ஒரு மணி நேரம் நடந்து உள்ளேன். அதனுடைய இம்பாக்ட் என்னுடைய உடலில் தெரிகின்றது.

                                         25 வருடத்தின் ஒரே நாளில் நடந்தால் கிடைக்காது. 25 வருடம் கழித்து திரும்பி பார்த்தால் அந்த உடல் எனக்கு இருக்கு இருக்காது. 

                                        இளம் வயதில் இருந்தோ அல்லது எப்பொழுது உங்களுக்கு மீச்சுவல் பண்டு பற்றி தெரிகின்றது அப்போதிலிருந்து இலக்கு நிர்ணயித்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு  செய்யுங்கள் என்று மிக அழகாக பல்வேறு தகவல்களை பார்வையாளர்கள் ரசிக்கும்படியாக சுவையாக எடுத்துக் கூறினார் .

 

                                                        மீச்சுவல் பண்டு கோபிநாத் சங்கரன் அவர்கள் பேசும்பொழுது, இலக்கு நிர்ணயித்து மீச்சுவல் பண்டு தொடர்பான  பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்.

                                    1990 ஆம் ஆண்டு 100 ரூபாய் இருந்த பணத்தின் மதிப்பு 2023 ஆம் ஆண்டு 9.5 ரூபாயாக இருக்கிறது. எனவே பணத்தின் மதிப்பு  என்பது மிக முக்கியமானது.

                             மேலும் அவர் கொடுத்த வீடு வாங்குவது தொடர்பான இஎம்ஐ மிக்சுவல் பண்டில்  சேமிப்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகமானோர் இடம் போய் சேர்ந்தது. பலரும் அது தொடர்பான பல்வேறு தகவல்களையும் கேள்விகளையும் தொடர்ந்து கேட்டனர்.

                             நிகழ்வுகளை விகடன் செய்தியாளர் கார்த்திகேயன் அவர்கள் மிக அருமையாக வழி நடத்தினார்.

                                   விகடன் ஏற்பாடு செய்து இருந்த பீரிஸ் ஹோட்டல் மிக அருமை.பார்வையாளர் அனைவரும் அமர்வதற்கு வசதியான  இருக்கைகள், அடிக்கடி தொந்தரவு செய்யாத நல்ல மைக்,மணமான காபி, டீ , ஸ்னாக்ஸ் என அனைத்துமே அருமையாக இருந்தது.


                                          100 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து காரைக்குடியில் இருந்து திருச்சி வரை சென்றது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 


                                          நாணய விகடன் குழுவினருக்கும் , மீச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கும், சோம .வள்ளியப்பன் அவர்களுக்கும்  நன்றிகள் பல.

 அன்புடன் 

லெ . சொக்கலிங்கம் 

காரைக்குடி

No comments:

Post a Comment